அமெரிக்க வல்லரசு

Saturday, September 01, 2012




     அமெரிக்க உலகத்தின் மிகப்பெரிய வல்லரசு நாடு என்று பலரும் சொல்கிறார்கள். எந்த அடிப்படையில் அவர்கள் அப்படி சொல்கிறார்கள் என்றுதான் எனக்கு புரியவேயில்லை. சரி அதைவிடுங்கள். சில மாதங்களாக அமெரிக்காவில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தும் பழக்கம் அங்கே அரங்கேறி வருகிறது. சென்றமாதம் ஒரு திரையரங்கின் உள்ளே சென்று அங்கே திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தவர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான் ஒருவன். அடுத்த வாரமே, அங்கே இருக்கும் ஒரு சீக்கிய கோவிலுக்குள் சென்று அங்கும் சுட்டான் ஒருவன். சில வாரங்கள் கழித்து பொதுமக்கள் நடமாட்டம் அதிகம்  இருக்கும் இடத்தில் தன் துப்பாக்கியால் கண்ணில் தென்படும் அனைவரையும் சுட்டான் ஒருவன். நேற்று ஒரு பல்பொருள் அங்காடிக்குள் சென்று அங்கு இருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டான் இன்னொருவன். இது நேற்று இன்று மட்டுமே நடக்கும் ஒரு விஷயம் இல்லை. அங்கே இது பல ஆண்டுகளாய் நடந்துவரும் ஒரு விஷயம்தான். ஆனால் அண்மைக்காலங்களில் அடிக்கடி நடக்கும் ஒரு செயலாய் மாறிவிட்டது இது.
     இந்தியா எப்படி தன் நாட்டை கலாச்சார சீரழிவால் தன்னைத்தானே அழித்துக்கொண்டிருக்கிறதோ, அதேபோல அமெரிக்கா மற்ற நாடுகளை அழித்து தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கும் தருணத்தில், அந்த நாட்டை அழிக்க யாரும் இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் வேலையில், அந்த நாட்டிற்கான அழிவை அந்த நாட்டு குடிமக்களே தேடித்தருவார்கள் போல இந்த துப்பாக்கி கலாச்சாரத்தினால்.
     நம் தென் தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் அரிவாள் ஓங்குவது போல அவர்கள் அங்கே எதற்கெடுத்தாலும் துப்பாக்கியை தூக்குகிறார்கள். இந்த நிலை இன்னும் அதிகரிக்கும் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. குறைவதற்கான வாய்ப்புகளை அந்நாட்டு அரசுதான் எடுக்க வேண்டும். மக்களின் உயிரின் மதிப்பை இப்படிப்பட்ட மக்கள் ஒருவரும் உணர வேண்டும். வெறும் சிறை தண்டனை மட்டும் அவர்கட்கு போதும் என்று நினைக்கிறீர்களா. அதற்காக அவர்களை தூக்கில் போட சொல்லவில்லை. அவர்களுக்கு சிறு வயது முதலே உயிரின் மதிப்பை உணர்த்த வேண்டும். நான் இதை அமெரிக்கர்களுக்கு மட்டும் சொல்லவில்லை. ஒவ்வொரு மனிதனும் உயிரின் மதிப்பை உணர வேண்டும். உயிரை கொடுப்பதும் எடுப்பதும் நம் கையில் இல்லை. அதை இயற்கையின் கையில் விட்டுவிட்டு வாழ்வதை மட்டும் நாம் பார்த்தால் யாருக்கும் எந்த கவலையும் இல்லை.

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****


0 Comments: