அக்கறை

Thursday, September 20, 2012




     நேற்றிரவு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி பேருந்தில் வந்தேன். பெரம்பலூர் தாண்டியதும் பேருந்து கொஞ்சம் மெதுவாக செல்ல ஆரம்பித்தது. நான் வழக்கம்போல் என் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துக்கொண்டு வேடிக்கை பார்த்தவாறு இருந்தேன். மணி இரவு பத்து இருக்கும். வயதான ஒருவர் தன் வண்டியை ஓரமாக நிறுத்துவிட்டு தன் கைப்பேசிக்கு வந்த அழைப்பை பேசிக்கொண்டிருந்தார். அவரை கடந்து ஒரு நிமிடம்கூட இருக்காது. இளைஞர் ஒருவர் தன் வண்டியை ஓட்டிக்கொண்டே தன் கைப்பேசியை பேசிக்கொண்டு சென்றார். இந்த இருவரையும் ஒரே நேரத்தில் பார்த்ததும் முதலில் இதைப்பற்றி வலையில் பதிவு செய்யனும் என்று தோன்றியது. வயதான ஒருவர்கூட தன் உயிரின்மீது அக்கறைவைத்து வண்டியில் செல்லும்போது அலைப்பேசியில் பேசக்கூடாது என்று வண்டியை நிறுத்திவிட்டு பேசுகிறார். ஆனால், அந்த இளைஞனுக்கு ஏன் தன் உயிர் மீது அக்கறை இல்லை. ஒரு உயிர் என்பதை சுலபமாக எண்ணிவிடக்கூடாது. ஒரு உயிர் ஜனனிக்க எவ்வளவு கஷ்டங்கள் இருக்கு என்று தாய்மார்களை கேளுங்கள் சொல்வார்கள். உயிரை எளிதாக எமனுக்கு பரிசாக தர இங்கே தயாராக இருக்கின்றனர். Headset  என்று ஒன்று வந்துவிட்டது. அதைமாட்டிக்கொண்டு வண்டியில் போகும்போது பேசிக்கொண்டே செல்கின்றனர். கேட்டால், இப்படி பேசிக்கொண்டு செல்வதால் தவறு ஒன்றும் இல்லை. இங்கே எது தவறு எது சரி என்று நான் பேசவில்லை. படித்தவர்களே இப்படி தவறு செய்வதை என்னால் பொறுத்துக்கொள்ளவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. உங்கள் உயிர்மீது அக்கறை இல்லாவிடினும் பரவாயில்லை. உங்களை நம்பி பல உயிர்கள் இருக்கு என்பதை மறக்க வேண்டாம். அந்த உயிர்களுக்காகவேணும் உங்கள் உயிர்மீது அக்கறை வையுங்கள். உங்கள் உயிரை நீங்கள் ஏன் எமனுக்கு பரிசாக தரவேண்டும். அவனே வந்து எடுத்துக்கொள்ளும் வரை கொஞ்சம் பொறுமையாய் இருங்கள் என் அருமை படித்த இளைஞர்களே..

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: