ராசாத்தி என் உசுரு என்னதில்ல

Saturday, September 08, 2012






ராசாத்தி என் உசுரு என்னதில்ல
ம்.... ம்....
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
ம்.... ம்....
நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
ம்.... ம்ம்ம்... ம்.... ம்ம்ம்
ராவோடு சேதி வரும் வாடி புள்ள
ம்.... ம்ம்ம்... ம்.... ம்ம்ம்
ராசாத்தி என் உசுரு என்னதில்ல
ம்.... ம்.... ம்.... ம்.... ம்.... ம்....
ம்.... ம்.... ம்.... ம்.... ம்.... ம்....
ஆ... ஆ... ஆ... ஆ...
காரை வீட்டு திண்ணையில கறிக்கு மஞ்சள் அரைக்கையிலே
மஞ்சளை அரைக்குமுன்னே மனசை அரைச்சவளே
கரிசைக்காட்டு ஓடையிலே கண்டாங்கி தொவைக்கையிலே
துணிய நனையவிட்டு மனச புழிஞ்சவளே
நெல்லு களத்துமேட்டில் என்னை இழுத்து முடிஞ்சிகிட்டு
போறவ போறவ தான் புத்தி கெட்டி போனவ தான்
கல்யாண சேலையில கண்ணீரை தொடச்சிகிட்டு போறவளே
போறவ போறவ தான் பொஞ்சாதியா போறவ தான்
நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டு விட்டு
அரளிப் பூச்சூடி அழுதபடி போறவளே
கடலை காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல
கடலை காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல
ராசாத்தி என் உசுரு என்னதில்ல
ம்.... ம்....
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
ம்.... ம்....
நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
ம்.... ம்ம்ம்... ம்.... ம்ம்ம்
ராவோடு சேதி வரும் வாடி புள்ள
ம்.... ம்ம்ம்... ம்.... ம்ம்ம்
ராசாத்தி என் உசுரு என்னதில்ல
ம்.... ம்.... ம்.... ம்.... ம்.... ம்....
ஒ... ஒ... ஒ... ஒ... ஆ... ஆ... ஆ...
ஒ... ஒ... ஒ... ஒ... ஆ... ஆ... ஆ...
ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஆ... ஆ... ஆ...

தொட்டு தொட்டு பொட்டு வெச்ச சுட்டு விரல் காயலையே
மரிக்கொழுந்து வெச்ச கையில் வாசம் இன்னும் போகலையே
மருதையிலே வாங்கி தந்த வளவி ஒடையலையே
மல்லுவேட்டி மத்தியில மஞ்சகறை மாறலையே
அந்த கழுத்து தேமலையும் காதோர மச்சத்தையும் பார்ப்பதெப்போ
பார்ப்பது பாப்பதெப்போ பெளர்ணமியும் வாரதெப்போ
அந்த கொலுசு மணி சிரிப்பும் கொமரி இளஞ்சிரிப்பும் கேட்பதெப்போ
கேட்பது கேட்பதெப்போ கீரத்தண்டும் பூப்பதெப்போ
கருவேளங்காட்டுக்குள்ள கருச்சாங்குருவி ஒன்னு சுதி மாறி கத்துதம்மா துணையத்தான் காணோமுன்னு
கடலை காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல
கடலை காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல
ராசாத்தி என் உசுரு என்னதில்ல
ம்.... ம்....
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
ம்.... ம்....
நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
ம்.... ம்... ம்.... ம்
ராவோடு சேதி வரும் வாடி புள்ள
ம்.... ம்... ம்.... ம்
ராசாத்தி என் உசுரு என்னதில்ல
ம்.... ம்.... ம்.... ம்.... ம்.... ம்....
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
ம்.... ம்....

திரைப்படம் : திருடா திருடா
இசை
: A.R. ரஹ்மான்
பாடியவர்
: சாகுல் ஹமீது
வரிகள்
: வைரமுத்து

****தினேஷ்மாயா****

0 Comments: