கடவுள் ஏன் கல்லானான்?

Sunday, September 16, 2012




கடவுள் ஏன் கல்லானான்? மனம்
கல்லாய்ப் போன மனிதர்களாலே
கடவுள் ஏன் கல்லானான்? மனம்
கல்லாய்ப் போன மனிதர்களாலே
கடவுள் ஏன் கல்லானான்? மனம்
கல்லாய்ப் போன மனிதர்களாலே

கொடுமையைக் கண்டவன் கண்ணையிழந்தான் - அதைக்
கோபித்துத் தடுத்தவன் சொல்லையிழந்தான்
கொடுமையைக் கண்டவன் கண்ணையிழந்தான் - அதைக்
கோபித்துத் தடுத்தவன் சொல்லையிழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னையிழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னையிழந்தான் - இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னையிழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னையிழந்தான்

கடவுள் ஏன் கல்லானான்? மனம்
கல்லாய்ப் போன மனிதர்களாலே

நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி - அது
நீதி தேவனின் அரசாட்சி
நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி - அது
நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி - மக்கள்
அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி

கடவுள் ஏன் கல்லானான்? மனம்
கல்லாய்ப் போன மனிதர்களாலே

சதிச் செயல் செய்தவன் புத்திசாலி - அதை
சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி
சதிச் செயல் செய்தவன் புத்திசாலி - அதை
சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையைச் சொல்பவன் சதிகாரன்
உண்மையைச் சொல்பவன் சதிகாரன் - இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் - இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்

கடவுள் ஏன் கல்லானான்? மனம்
கல்லாய்ப் போன மனிதர்களாலே
கடவுள் ஏன் கல்லானான்? மனம்
கல்லாய்ப் போன மனிதர்களாலே

திரைப்படம்: என் அண்ணன்
பாடியவர்: டி.எம். சௌந்தர்ராஜன்
இசை: கே.வி. மஹாதேவன்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: