மரணம்

Sunday, September 30, 2012




நேற்று பேருந்தில் பயணிக்கும் போது வந்த யோசனை இது. 

 “ மரணம் ”

மரணம் - எத்தனையோ பேர் வாழ்க்கையில் ஒருவரின் மரணம் இன்னொருவருக்கு எவ்வளவோ பெரிய மாற்றங்களையும் துயரத்தையும் தந்திருக்கும்.

ஆனால், ஒருவரின் மரணம் இங்கு பலரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன். வெளிநாட்டில் இருக்கும் கலாச்சாரம் வேறு. நம் நாட்டு கலாச்சாரத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் சிந்தித்துப் பார்த்தேன்.

நம் ஊரில் ஒருவர் இறந்துவிட்டால், முதலில் ஒரு பந்தல் போடுவோம். அவனை வாழ வைக்கிறோம்.

பூக்கள், மாலை, பாடை, பட்டாசு, மோளம் தாரை தப்பட்டை...
இந்த மக்கள் வாழ்கிறார்கள்.

ம்.. பல குடிமகன்கள் இங்கே வருவார்கள். அவர்களால் சரக்கு விற்பவன் வாழ்கிறான்.

எல்லாவற்றையும்விட வெட்டியான், பிணங்களை மட்டுமே நம்பி தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறான். இவனை இந்த மரணம் தான் வாழவைத்துக்கொண்டிருக்கிறது..

இவர்கள் எல்லோரையும் வாழவைக்கிறது ஒருவரின் மரணம்.

எனக்கு இந்த சிந்தனை வந்த அதே நேரத்தில் இன்னொரு சிந்தனையும் தோன்றியது. இப்படி மண்ணுக்குள் புதைக்கும் உடலை, தீயில் எரிக்கும் உடலை நாம் ஏன் மற்றவர்களுக்கு, தேவையில் இருக்கும் நோயாளிகளுக்கு தரக்கூடாது என்று. இறந்த பின்னர் நுண்ணுயிர்களுக்கு உணவாய் ஆகுவதற்கு பதிலாக நம்மை போன்ற மனிதன் ஒருவர்க்கு நம் உடலை தானமாய் தந்தால் என்ன. மற்றவர்கள் சொல்லி வரும் யோசனையை விட தானாக வரும் சிந்தனைக்கு சக்தி அதிகம் என்பதை அனைவரும் அறிவர். என் சிந்தனையை உடனே என் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் சொல்லிவிட்டேன். ஒருவேளை அவனுக்கு முன்னர் நான் இறந்தால் என் உடலை தானமாய் தரவேண்டும் என்று என் பெற்றோரிடம் நான் சொன்னதாக சொல் என்று. இறைவனை பிரார்த்திக்கிறேன், என் உடல் மற்றவர்களுக்கும் உபயோகமாய் இருக்கும்படி செய்யட்டும்.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: