தண்ணீர் தண்ணீர்

Sunday, September 16, 2012


                                            




“நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு”
- திருக்குறள் : 20

வள்ளுவன் சொன்னது போல நீரின்றி அமையாது உலகு. உயிர்வாழ பிராணவாயு எவ்வளவு முக்கியமோ நீரும் அவ்வளவு முக்கியம். இது என்ன புதுசா, இதுதான் எல்லோர்க்கும் தெரியுமேனு கேட்பீங்க. தெரிஞ்சு என்ன செய்திருக்கீங்க. தண்ணீரை சேமிப்பதில் உங்கள் பங்கு என்ன என்பதை நான் தெரிந்துக்கொள்ளலாமா. நான் இங்கே தைரியமாக பேச காரணம், தண்ணீரை சிக்கனமாக செலவு செய்வதில் எனக்கு பங்கு இருக்கிறது என்பதனால். நம்மில் யாருக்கும் வருங்காலத்தை பற்றிய கவலை கொஞ்சமும் இருப்பது போல தெரியவில்லை. நான் என் 60 அல்லது 70 வயதில் இறக்கிறேன் என்று ஒரு பேச்சுக்கு வைத்துகொள்கிறேன். அப்போது 2050 அல்லது 2060 வருடத்தில் இருப்பேன். அப்போது இன்றைக்கு இருக்கும் நிலை சத்தியமாக இருக்காது என்பது எனக்கு இப்போதே புரிகிறது. தண்ணீர் தட்டுப்பாடு மட்டுமின்றி, உலகின் ஒட்டுமொத்த வெப்பநிலையும் உயர்ந்து இருக்கும், சுவாசிக்க சுத்தமாக காற்று இருக்காது, பெட்ரோல் டீசல் இவையெல்லாம் ஏறக்குறைய வற்றியிருக்கும், மின்சாரம் தயாரிக்க நாம் இன்று பயன்படுத்தும் பல சக்திகள் நம்மால் உறிஞ்சப்பட்டு இருக்கும். வெறும் சூரியனின் சக்தியைமட்டுமே இந்த உலகமே நம்பி இருக்கும் நிலையில் அன்று இருப்போம். என்னதான் விஞ்ஞானிகள் பல மாற்று வழிகள் கண்டுபிடித்தாலும் அது இயற்கைக்கு எதிரானதாகத்தான் இருக்குமே தவிர அது ஒருபோதும் இயற்கையை சமாதானப்படுத்தும் விதமாக இருக்காது.

மற்ற எல்லாவற்றையும் விடுங்கள். தண்ணீருக்கு முதலில் வருவோம். நான் நினைத்துக்கொண்டிருக்கோம் உலகமே 75% தண்ணீரால் சூழப்பட்டிருக்கு என்று. ஆனால் அதில் மக்கள் பயன்பாட்டிற்கு உதவும் தண்ணீர் வெறும் 1% கூட இல்லை. கடலின் நடுவே இருந்தாலும் தாகம் எடுத்தால் குடிநீரை தான் தேடுகிறோமே தவிர கடல்நீரை எடுத்து அப்படியே குடிக்க நம் மனம் முன்வருகிறதா. தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுவோம். நம் வருங்கால தேவைக்கு பணத்தை சேமிப்பது போல கொஞ்சம் இயற்கையையும் சேமித்து வைப்போமே. வருங்காலம் நம்மை போற்றுமோ இல்லையோ, தூற்றாது என்பதில் நான் உறுதி கூறுகிறேன்.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: