சொர்கமே என்றாலும்

Sunday, September 30, 2012



ஹேய் தந்தன தந்தன தந்தா
சொர்கமே என்றாலும்
அது நம்மூர போல வருமா?
அட எந்நாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடாகுமா?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா?
சொர்கமே என்றாலும்
அது நம்மூர போல வருமா?
அட எந்நாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடாகுமா?

ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும்
இங்கே ஏதும் கேட்கவில்லையே
பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலை இல்லையே
வெத்தலைய மடிச்சு மாமன் அதை கடிச்சி
துப்ப ஒரு வழியில்லையே
ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கி குளிச்சு
அட ஒரு ஓடை இல்லயே
இவ்வூரு என்ன ஊரு நம் ஊரு ரொம்ப மேல்
அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு
ஒரு தாகம் தீர்க்க அது மோரு

சொர்கமே என்றாலும்
அது நம்மூர போல வருமா?
அட எந்நாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடாகுமா?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா?
சொர்கமே என்றாலும்
அது நம்மூர போல வருமா?
அட எந்நாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடாகுமா?

மாடு கண்ணு மேய்க்க மேயிறத பார்க்க
மந்தவெளி இங்கே இல்லையே
ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட
அரசமரம் மேடை இல்லையே
காளை ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே
தோழிகளை அழைச்சு சொல்லி சொல்லி ரசிச்சு
ஆட்டம் போட முடியலையே
ஒரு எந்திரத்தை போல அட இங்கு உள்ள வாழ்க்கை
இத எங்கே போயி சொல்ல மனம் இஷ்டப்படவில்லை
நம் ஊரை போல ஊரும் இல்லை
சொர்கமே என்றாலும்
அது நம்மூர போல வருமா?
அட எந்நாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடாகுமா?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா?
சொர்கமே என்றாலும்
அது நம்மூர போல வருமா?
அட எந்நாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடாகுமா?

திரைப்படம்: ஊரு விட்டு ஊரு வந்து
இசை: இளையராஜா
வரிகள்: கங்கை அமரன்
பாடியவர்கள்: S ஜானகி, இளையராஜா

- அன்புடன்
****தினேஷ்மாயா****

எதிரி




“எதிரி இல்லையென்றால் நாம் வாழலாம்..
ஆனால்
வளர முடியாது”

சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் வந்த வசனம். மனதை ரொம்பவே கவர்ந்த வசனம் இது..

- அன்புடன்
****தினேஷ்மாயா****

மரணம்




நேற்று பேருந்தில் பயணிக்கும் போது வந்த யோசனை இது. 

 “ மரணம் ”

மரணம் - எத்தனையோ பேர் வாழ்க்கையில் ஒருவரின் மரணம் இன்னொருவருக்கு எவ்வளவோ பெரிய மாற்றங்களையும் துயரத்தையும் தந்திருக்கும்.

ஆனால், ஒருவரின் மரணம் இங்கு பலரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன். வெளிநாட்டில் இருக்கும் கலாச்சாரம் வேறு. நம் நாட்டு கலாச்சாரத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் சிந்தித்துப் பார்த்தேன்.

நம் ஊரில் ஒருவர் இறந்துவிட்டால், முதலில் ஒரு பந்தல் போடுவோம். அவனை வாழ வைக்கிறோம்.

பூக்கள், மாலை, பாடை, பட்டாசு, மோளம் தாரை தப்பட்டை...
இந்த மக்கள் வாழ்கிறார்கள்.

ம்.. பல குடிமகன்கள் இங்கே வருவார்கள். அவர்களால் சரக்கு விற்பவன் வாழ்கிறான்.

எல்லாவற்றையும்விட வெட்டியான், பிணங்களை மட்டுமே நம்பி தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறான். இவனை இந்த மரணம் தான் வாழவைத்துக்கொண்டிருக்கிறது..

இவர்கள் எல்லோரையும் வாழவைக்கிறது ஒருவரின் மரணம்.

எனக்கு இந்த சிந்தனை வந்த அதே நேரத்தில் இன்னொரு சிந்தனையும் தோன்றியது. இப்படி மண்ணுக்குள் புதைக்கும் உடலை, தீயில் எரிக்கும் உடலை நாம் ஏன் மற்றவர்களுக்கு, தேவையில் இருக்கும் நோயாளிகளுக்கு தரக்கூடாது என்று. இறந்த பின்னர் நுண்ணுயிர்களுக்கு உணவாய் ஆகுவதற்கு பதிலாக நம்மை போன்ற மனிதன் ஒருவர்க்கு நம் உடலை தானமாய் தந்தால் என்ன. மற்றவர்கள் சொல்லி வரும் யோசனையை விட தானாக வரும் சிந்தனைக்கு சக்தி அதிகம் என்பதை அனைவரும் அறிவர். என் சிந்தனையை உடனே என் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் சொல்லிவிட்டேன். ஒருவேளை அவனுக்கு முன்னர் நான் இறந்தால் என் உடலை தானமாய் தரவேண்டும் என்று என் பெற்றோரிடம் நான் சொன்னதாக சொல் என்று. இறைவனை பிரார்த்திக்கிறேன், என் உடல் மற்றவர்களுக்கும் உபயோகமாய் இருக்கும்படி செய்யட்டும்.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

சொந்தம்




    பிறக்கும்போது பெயர்கூட இல்லாமல் தான் பிறந்தோம். ஆனால் எங்கிருந்து வந்தது இந்த பெயர், புகழ், மானம், மரியாதை, கௌரவம், சொத்து இவையெல்லாம். சரி எங்கிருந்தோ வந்திருக்கட்டும் விடுங்கள். அவற்றை எங்கு கொண்டு செல்ல போகிறோம் நாம். சுடுகாட்டிற்கா?

   நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, சுடுகாட்டில் வெட்டியானுக்கு நாம் வெறும் பிணம் தான். கடைசியில் எதுவும் நம் கூட வருவதில்லை. நம் பெயர் கூட மாறி, பிணம் என்றாகிவிடுகிறோம். ஆனால் இது எனக்கு சொந்தம் அது உனக்கு சொந்தம் என்று பாகுபாட்டினை நாமே வகுத்து பகைமையையும் வளர்த்து வருகிறோம். இந்த மாயையை எப்போது நாம் உணர்ந்து வாழப்போகிறோம் என்பது எனக்கு தெரியவில்லை.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

இறைவன்

Saturday, September 29, 2012





      இறைவன் யார் என்பதை தேடுவதிலும் அவன் இல்லை என்று திட்டி தீர்ப்பதிலும்தான் நம் காலம் செல்கிறதே தவிர, அவன் நம்மைப்போன்றோர் மத்தியில் நம் உள்ளத்தில்தான் இருக்கிறான் என்கிற எண்ணம் யாருக்கும் வருவதேயில்லை. அதனால்தான், இன்னமும் உலகில் மனிதாபிமானமற்ற செயல்களும் குற்றங்களும், ஏற்ற தாழ்வுகளும் இருந்து வருகிறது. இறைவன் ஒருவன் எங்கோ இருக்கிறான், அவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான், அவனிடம் எல்லா பொறுப்புகளையும் விட்டுவிடலாம் என்றிருக்காமல், நம்முள் தான் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து, இறைவன் செய்யட்டும் என்று நாம் நினைக்கும் வேலைகளை நாமாகவே இந்த உலகத்திற்கு செய்வோம். நாம் செய்யும் சேவையில் தென்படுவான் நீங்கள் சொல்லும் இறைவன்..

அன்பே சிவம்..

- அன்புடன்
****தினேஷ்மாயா****

மருந்து





ஒரு காதலை மறக்க இன்னொரு காதல்தான் மருந்து என்றால்,
எனக்கு அந்த மருந்து தேவையில்லை...

- அன்புடன்
****தினேஷ்மாயா****

அக்கறை

Thursday, September 20, 2012




     நேற்றிரவு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி பேருந்தில் வந்தேன். பெரம்பலூர் தாண்டியதும் பேருந்து கொஞ்சம் மெதுவாக செல்ல ஆரம்பித்தது. நான் வழக்கம்போல் என் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துக்கொண்டு வேடிக்கை பார்த்தவாறு இருந்தேன். மணி இரவு பத்து இருக்கும். வயதான ஒருவர் தன் வண்டியை ஓரமாக நிறுத்துவிட்டு தன் கைப்பேசிக்கு வந்த அழைப்பை பேசிக்கொண்டிருந்தார். அவரை கடந்து ஒரு நிமிடம்கூட இருக்காது. இளைஞர் ஒருவர் தன் வண்டியை ஓட்டிக்கொண்டே தன் கைப்பேசியை பேசிக்கொண்டு சென்றார். இந்த இருவரையும் ஒரே நேரத்தில் பார்த்ததும் முதலில் இதைப்பற்றி வலையில் பதிவு செய்யனும் என்று தோன்றியது. வயதான ஒருவர்கூட தன் உயிரின்மீது அக்கறைவைத்து வண்டியில் செல்லும்போது அலைப்பேசியில் பேசக்கூடாது என்று வண்டியை நிறுத்திவிட்டு பேசுகிறார். ஆனால், அந்த இளைஞனுக்கு ஏன் தன் உயிர் மீது அக்கறை இல்லை. ஒரு உயிர் என்பதை சுலபமாக எண்ணிவிடக்கூடாது. ஒரு உயிர் ஜனனிக்க எவ்வளவு கஷ்டங்கள் இருக்கு என்று தாய்மார்களை கேளுங்கள் சொல்வார்கள். உயிரை எளிதாக எமனுக்கு பரிசாக தர இங்கே தயாராக இருக்கின்றனர். Headset  என்று ஒன்று வந்துவிட்டது. அதைமாட்டிக்கொண்டு வண்டியில் போகும்போது பேசிக்கொண்டே செல்கின்றனர். கேட்டால், இப்படி பேசிக்கொண்டு செல்வதால் தவறு ஒன்றும் இல்லை. இங்கே எது தவறு எது சரி என்று நான் பேசவில்லை. படித்தவர்களே இப்படி தவறு செய்வதை என்னால் பொறுத்துக்கொள்ளவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. உங்கள் உயிர்மீது அக்கறை இல்லாவிடினும் பரவாயில்லை. உங்களை நம்பி பல உயிர்கள் இருக்கு என்பதை மறக்க வேண்டாம். அந்த உயிர்களுக்காகவேணும் உங்கள் உயிர்மீது அக்கறை வையுங்கள். உங்கள் உயிரை நீங்கள் ஏன் எமனுக்கு பரிசாக தரவேண்டும். அவனே வந்து எடுத்துக்கொள்ளும் வரை கொஞ்சம் பொறுமையாய் இருங்கள் என் அருமை படித்த இளைஞர்களே..

- அன்புடன்
****தினேஷ்மாயா****

அன்பு பிடிக்கும்




இவ்வுலகில் மதம் பிடிக்கும் இரண்டு மிருகங்கள் எதுவென்று உங்களுக்கு தெரியுமா ?

1. யானை
2. மனிதன்

ஆம். யானைக்கு எப்போதாவதுதான் மதம் பிடிக்கும். ஆனால் இங்கே பல மனிதர்களுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இறக்கும்வரை மதம் பிடித்துக்கொண்டுதான் இருக்கிறது.

சமீபத்தில் பாகிஸ்தானில், குரானின் சில பக்கங்களை எரித்ததற்காக ஒரு பெண்ணிற்கு மரண தண்டனை வழங்கினார்கள். பின்னர் விசாரணையில், அந்த பெண் ஒரு கிறித்துவ பெண், அவளை ஒரு இசுலாமிய பையன் காதலித்துவந்தான். அவனின் காதலுக்கு இவள் மறுப்பு தெரிவிக்கவே அவளை மாட்டிவிட அவன் இச்செயலை செய்திருக்கிறான். இந்த விஷயத்தை விடுங்கள். அவர்கள் புனிதமாக கருதும் ஒரு புத்தகத்தின் சில பக்கங்களை கிழித்து எரித்தமைக்காக ஒரு பெண்ணிற்கு மரண தண்டனை தந்திருக்கிறார்கள். அதுவும் அந்த பெண்ணிற்கு வயது 13 !!!

    இந்த குற்றத்தை அவள் செய்யவில்லை என்றாலும், குற்றத்தின் உண்மைதன்மையை அறியும் முன்னரே அந்த சின்ன பெண்ணிற்கு மரண தண்டனை விதிக்கும் அளவிற்கு மனிதாபிமானம் இறந்துவிட்டதா இல்லை மதம் அவர்களின் கண்ணை மறைத்துவிட்டதா. அவள் கிழித்து எரித்ததாய் சொல்லும் அதே குரானில் தான் மன்னிப்பு பற்றியும் சொல்லியிருக்கிறார் நபிகள் நாயகம்

“ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி, இயல்பில், தமக்கு தீங்கிழைத்த ஒருவரை பழிவாங்கும் முயற்சியில் ஈடுபடக்கூடியவர்களாக இருக்கவில்லை. பிறரது தீங்குகளை தாங்கிக் கொண்டார்கள். தம்மீதான காபிர்களின் கொடுமைகள் தமது மன்னிப்பு இரக்கம் என்பவற்றின் மூலம் எதிர்கொண்டார்கள்.”
மதம் ஒருவனின் கண்ணை எந்த அளவிற்கு மறைத்திருக்கிறது பாருங்கள். அறிவியல் ரீதியாக பார்த்தால் சில காகிதங்களை எரித்ததால் மரண தண்டனையா?
நான் இசுலாமியர்களின் நம்பிக்கையை குற்றம் சொல்லவில்லை. இராமாயணத்தையோ, மகாபாரதத்தையோ கிழித்து எரித்தால் உனக்கு எப்படி இருக்கும் என்று என்னை கேட்பீர்கள். அது இராமாயணமாக இருந்தாலும் சரி, திருகுரானாக இருந்தாலும் சரி, பைபிளாக இருந்தாலும் சரி. நீங்கள் சொல்வதுபோல, அதில் இருக்கும் சில பக்கங்களை கிழித்து எரிவதால் ஒன்று அந்த நூல்களுக்கு இழிவு ஏற்பட்டு விடாது. அதை இழிவு படுத்தவும் முடியாது என்பதை நீங்கள் எப்போதுதான் புரிந்துக்கொள்ள போகிறீர்கள். காலங்களை கடந்த நற்கருத்துக்கள் பொதிந்து கிடக்கும் அந்த இதிகாசங்களை மக்களின் நன்மைக்காக பயன்படுத்த வேண்டுமே தவிர பிற விஷயங்களுக்காக பயன்படுத்துவது மூடத்தனமே.
      இங்கே எந்த இந்து குரானையும் பைபிளையும் படித்திருக்கான், எந்த கிறித்தவன் குரானை படித்திருக்கான், எந்த இசுலாமியன் இராமாயணத்தை படித்திருக்கான். இங்கேயே தெரியவில்லையா மதம் உங்கள் கண்களை எவ்வளவு மறைத்திருக்கிறது என்று. அனைத்து மதத்தின் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் மைய கருத்து அன்பு. மதம் என்னும் வட்டத்தை நீங்களே உங்களுக்கு போட்டுக்கொண்டு அதனை விட்டு வெளியேவர தயங்குகின்றனர். சொல்லப்போனால், நீங்கள் இறைவனை அடைய உங்கள் மதம்தான் தடையாக இருக்கிறது என்பேன் நான். எந்த மதமானால் என்ன, இறைவன் ஒருவன்தான் என்பதை உணர்த்தும் மதம் இன்றுவரை இல்லவே இல்லையே இங்கு. என்ன செய்ய. இறைவனேகூட இப்படி நினைத்திருக்கலாம், யாரும் தன்னை எளிதில் அடைந்துவிடக்கூடாது என்று மக்களுக்குள் வேறுபாட்டை கொண்டுவர மதம் என்றொரு ஆயுதத்தை கையில் எடுத்திருப்பானோ என்றும் சில சமயங்களில் தோன்றுகிறது.
      மதத்தால் இங்கே எவ்வளவு சண்டைகள், போர்கள், உயிரிழப்புகள், அகதிகள, வாழ்க்கை கைதிகள். சில சமயம் இந்த இறைவனால் உருவாக்கபட்ட மனிதன் மதத்தின் பெயரால் செய்யும் பல விஷயங்களால் அந்த மதத்தையும் இறைவனையுமே வெறுக்க தோன்றுகிறது.
     மிருகத்தில் இருந்துதான் மனிதன் வந்தான் என்றாலும், இன்னும் அந்த மிருக குணம் நம்மில் பலருக்கு மாறவே இல்லை என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு தான் இந்த மதம்.

          அன்பை வெளிப்படுத்துவோம். அன்பை அனைவர்க்கும் பரிசாய் கொடுப்போம். மதம் பிடிக்கும் என்பதைவிட எனக்கு அன்பு பிடிக்கும் என்று சொல்லிப்பாருங்கள். அனைவருக்கும் உங்களை பிடிக்கும்…..

- அன்புடன்
****தினேஷ்மாயா****

வாரிசு

                     




இந்த உலகத்தில் பொதுவாக நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயம் தான் இந்த வாரிசு விஷயம்.

தொழிலதிபரின் வாரிசு தொழிலதிபராகிறான்.
அரசியல்வாதியின் வாரிசு அரசியல்வாதி ஆகிறான்.
ஆசிரியரின் வாரிசு ஆசிரியர் ஆகிறான்.
அதிகாரியின் வாரிசு அதிகாரி ஆகிறான்.
நடிகனின் வாரிசு நடிகன் ஆகிறான்.
கலைஞனின் வாரிசு கலைஞன் ஆகிறான்.
அதே போல
ஒரு ஏழையின் வாரிசு ஏழையாக ஆகிறான்.

இதுதான் இன்று உலகத்தில் இருந்துவரும் வழக்கம். ஏழையின் வாரிசு ஒருபோதும் வாழ்க்கையில் உயர இவர்களைப்போன்றோர் விரும்புவதில்லை. இது பல நூற்றாண்டுகளாய் இவ்வுலகில் இருந்துவரும் கொடுமைதான். இதில் சில காலமாகத்தான் அதீத மாற்றங்களை காணமுடிகிறது. வாய்ப்புகளுக்காக காத்திருந்த காலங்கள் மலையேறிவிட்டன. வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டு முன்னேறும் எண்ணம் நம் ஏழை மக்களின் மத்தியில் வந்துவிட்டது. இருப்பினும் அவர்களின் முன்னேற்றத்திற்கான உதவிகள்தான் இன்னும் அவர்களை சரிவர சென்று சேரவில்லை. 

“ஏழையாய் பிறந்தது உன் குற்றமில்லை
ஆனால்,
ஏழையாய் இறந்தால் அது நிச்சயம் உன் குற்றம்தான்” என்று படித்திருக்கேன்.

அனைவரும் சமமாய் இருக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால் ஏற்றம் தாழ்வு நிறைந்ததுதான் இவ்வுலக வாழ்க்கை என்பது கசப்பான உண்மை என்றானபோது அதை மாற்ற முடிந்தவரை முயல்வோமே. முன்னேற துடிக்கும் வசதியற்ற இளைய தலைமுறைக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்து அவர்கள் வாழ்விலும் கொஞ்சம் விளக்கேற்ற முயல்வோமே..

- அன்புடன்
****தினேஷ்மாயா****

நானே தொலைந்த கதை

Sunday, September 16, 2012


நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே
காதல் நுழைந்த வழி கண்டறிவாய் காதலியே

விண்ணில் மழை துளிகள் மின்னலாய் நின்றுவிட
மண்ணில் எனது நிழல் உன்னைப்போல மாறி விட
விரலோரம் கவிதை ஊறியதே
விழியோரம் காதல் கசிகிறதே
நதி மேலே ஓற்றை காலில் மழை ஆடும் ஆனந்தமாய்
கனவு ஊறும் மனசுக்குள்ளே
காதல் வந்து ஓற்றை காலில் சுற்றி சுற்றி மூழ்கடிக்குதே

நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே

உன் இதயம் நான் படிக்க கள்வனாய் மாறி வந்தேன்
என்னைப் போல நீயும் ஓரு கள்ளி என கண்டு கொண்டேன்
என் விரலை உன் விரலாய் இரவினில் தீண்டுகிறேன்
முத்தமென்று தண்ணீரை முகத்தினில் ஊற்றுகிறேன்
உன் முகம் தேடி காலையில் வெயிலாகிறேன்
உன் குரல் தேடி சாலையில் குயிலாகிறேன்

தேர்வு அறை முழுதும் தேவதையே உன் நினைவு
நாளை விடுமுறையாம் காதல் வதை உன் பிரிவு
கண்கள் எனை மறந்து உன்னையே தேடியது
சுவாசம் உன் பெயரை என்னுள்ளே பாடியது
லேசாக சண்டை போடவா
பேசாமல் முத்தம் கேட்கவா
வெயில் காயும் சாலையிலே மழை தூவும் ஆனந்தமாய்
தனிமை நீங்கும் வேளையிலே
காதல் நம்மை காற்றைப் போல எங்கோ எங்கோ கொண்டு செல்லுதே...

திரைப்படம்: தவமாய் தவமிருந்து
இசை: சபேஷ் முரளி
பாடியவர்: ப்ரசன்னா

- அன்புடன்
****தினேஷ்மாயா****

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்




நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

படம் : நெஞ்சில் ஓரு ஆலயம்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர் : PB ஸ்ரீநிவாஸ்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்

- அன்புடன்
****தினேஷ்மாயா****

யாரை நம்பி நான் பொறந்தேன்




யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்லே

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையைப் பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போ
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும்

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

திரைப்படம்: எங்க ஊர் ராஜா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தர்ராஜன்
வரிகள்:  கவிஞர் கண்னதாசன்

- அன்புடன்
****தினேஷ்மாயா****

தரைமேல் பிறக்க வைத்தான்








உலகத்தின் தூக்கம் கலையாதோ..
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ..
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ..
ஒரு நாள் பொழுதும் புலராதோ..

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவை கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடி நீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சாண் வயிறை வளார்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரைமேல் பிறக்க வைத்தான்

படம் : படகோட்டி
இசை : விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம்.சௌந்தர்ராஜன்
வரிகள் : வாலி

அன்புடன்
****தினேஷ்மாயா****