உன் கண்களுக்கு கீழ் இருக்கும்
கருவளையம்
அழகுதான்...
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நட்சத்திரம்போல் இருக்கும்
உன் முகப்பரு
அழகுதான்...
அதிகம் இல்லையென்றாலும்
கொஞ்சமாய் வளர்ந்திருக்கும்
உன் நகங்கள்
அழகுதான்...
சாப்பிடும்போது உனக்கே தெரியாமல்
கொஞ்சம் கீழே சிந்தியபடி
சாப்பிடுவதும்
அழகுதான்...
என்னுடன் மெசேஜ்ல பேசிட்டு இருக்கும்போது
உனக்கே தெரியாமல் நீ
தூங்கிவிடுவதும்
அழகுதான்...
காலையில் எழுந்ததும் Sorry. I Slept.3 என்று
எனக்கு மெசேஜ் அனுப்புவதும்
அழகுதான்...
இதைப்படிக்கும்போது நான் சொன்னதெல்லாம்
உண்மையா என்று நினைத்துப் பார்க்கும்
நீயும் உன் குழந்தைமனமும்
எப்போதும் அழகுதான்...
அன்புடன் -