தேடிக் கிடைக்காத பாடல்கள்..

Friday, July 16, 2010




நான் பலமுறை பலவழிகளில் பலரிடம் பல இடங்களில் தேடியும் கிடைக்காத பாடல்கள் ஒரு சில உண்டு. அவைகளை இணையதளத்திலும் பலமணிநேரம் பலமுறை தேடியும் பார்த்து விட்டேன். ஆனால் அவை கிடைக்கவில்லை. அந்த பாடல்களை TV, FM எங்கும் கேட்க முடியவில்லை. சரி... அந்த பாடல்களை உங்களிடம் சொல்கிறேன்.. உங்கள் யாரிடமாவது இந்த பாடல் இருந்தால் என்னிடமும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

1. நிலாக்காலம் திரைப்படத்தில் வரும்

 “ஆத்தங்கரையில கூத்து நடக்குது தை தை என நீ ஆடு...
ஆலம்விழுதில் ஊஞ்சல் கட்டி வானம் தொட்டு விளையாடு...
அடடடா....
நகரம் நரகமடா... இந்த கிராமம் சொர்க்கமடா.........” என்னும் பாடல்..

2. ஊஞ்சல் - விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன்னர் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட சின்னத்திரை நாடகம். S.P.B.Charan, Pop Shalini நடித்திருப்பார்கள். இந்த தொடரின் ஆரம்ப பாடல்..

“காதலெனும் ஒரு மாயவலை...
சிக்கிக்கொண்டால் சிதையும் ஆயுள்வரை...
இது இதயத்தில் வண்ணமெல்லாம் 
காட்டும் தீயே..
இது இதயத்தில் வண்டாய்மாறி
போடும் துலை..”

3. கங்கா யமுனா சரஸ்வதி - சன் டிவியின் மிகப்பழைய நாடகம்.

“புண்ணிய நீரோடு திருவேணிப் பேரோடு,
ஊர்போற்றி நீராடும் கங்கா யமுனா சரஸ்வதி..”


4. மந்திரவாசல் - சன் டிவியில் பல வருடங்களுக்கு முன் வந்த நாடகம் இது.

“நமக்குள் ஏதோ ஒன்று அந்தரதேடல்..
நடக்கும் சத்தியவேட்டை 
மந்திரவாசல்..
உதிக்கும் சூரியனுக்கு கிழக்கே 
மந்திரவாசல்..
......................................
ப்ரம்மனின் மணிமுடி எங்கே..
பரமனிம் திருவடி எங்கே..
அந்தரதேடல் ஹோ ஹோ
மந்திரவாசல்..”

மனோ அவர்கள் பாடிய பாடல் இது.. இந்த பாடலை நான் என் சிறு வயதில் கேட்டது. ம்.... ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி கேட்டது.. இன்னமும் வரிகள் நினைவில் இருக்கிறது. பாடலும் என் காதில் கேட்ட வண்ணம்தான் இருக்கிறது. ஆனால் என்ன இந்த பாடலை இன்னொருமுறை கேட்டும் பாக்கியம்தான் இன்னும் கிட்டவில்லை.. பார்க்கலாம்.. அதுவரை என் தேடல் தொடரும்..

இந்த பாடலை உங்களில் பலர் கேட்டிருக்கவே மாட்டீர்கள். நீங்கள் இந்த பாடலை கேட்டிருந்தாலோ, அல்லது

அன்புடன் -




தினேஷ்மாயா 

2 Comments:

GUNAL said...

nanba nanum palavarudamaga nilakalam padalai thedikkondu irukkiren... kidaiththal yenakkum theriya paduththungal...

Anonymous said...

அன்புக் காதலனே உன் ஞாபகமே என்ற பாடல் கிடைத்தால் அதன் வரிகளை பதிவிடுக