ஓம் சரவணபவ

Saturday, July 10, 2010


வேலுண்டு வினையில்லை முருகையா ..
உனையன்றி துணையில்லை கந்தையா ..
நீயிருக்க பயமென்ன கந்தையா ..
ஆறுபடையிருக்க துயரென்ன வேலையா ..
வாழ்வெலாம் பசியாற வேலையா ..
பஞ்சாமிர்தம் போதுமையா அழகையா ..

ஓம்முருகா என்றழைத்தால் முருகையா ..
ஓடும்மயிலேறி வந்திடுவாய் கந்தையா ..
பிரணவத்தின் பொருளென்ன கந்தையா ..
என்சண்முகனின் பெயர்தானே வேலையா ..
அவ்வைக்கு கனிதந்தாய் வேலையா ..
இவ்வடியேனின் பிணிதீர்ப்பாய் அழகையா ..

ஆறுபடையில்தான் இருப்பாயா முருகையா ..
என்மனதிலும்நீ இருக்காயே கந்தையா ..
திருத்தணிகை மலைவாழும் கந்தையா ..
உனக்குக்காவடிகள் எடுத்துவந்தோம் வேலையா ..
உமையப்பனோடு சண்டையிட்டு வேலையா ..
பழநிமலை சென்றாயே அழகையா..

மலையிறங்கி வந்திடுவாய் முருகையா ..
என்மனக்கவலை தீர்த்திடுவாய் கந்தையா ..
திருச்செந்தூர் கடல்நோக்கி கந்தையா ..
திவ்யமாய் வீற்றிருக்க வேலையா ..
உன்ஆலயம் நாடிவந்தால் வேலையா ..
என்பாவங்கள் நீங்கிவிடும் அழகையா ..

கன்னித்தமிழ் தெய்வமையா முருகையா ..
உனைநினைத்தாலே மோட்சமையா கந்தையா ..
சூரனின்தலை கொய்தாய் கந்தையா ..
என்தலைகணத்தை இறக்கிடுவாய் வேலையா ..
சஷ்டியையே தினம்படித்தேன் வேலையா ..
என்தமிழாலே உனைதுதித்தேன் அழகையா ..

ஐங்கரனின் இளையோனே முருகையா ..
காலனையும் விரட்டிடுவாய் கந்தையா ..
சேவக்கொடிதனை ஏந்திநிற்கும் கந்தையா ..
என்மனதில்உனை தாங்கிநிற்பேன் வேலையா ..
அழகே உருவானாய் வேலையா ..
அடியேனை ஆட்கொள்வாய் அழகையா ..

சந்தனத்தை பூசிக்கொண்டாய் முருகையா ..
வீரத்தின் பெயரானாய் கந்தையா ..
தேவாதிதேவர் தொழும் கந்தையா ..
உனைநாடிவந்தேன் தயைபுரிவாய் வேலையா ..
ஆவினன்குடி கொண்டாய் வேலையா ..
என்குலம் நீகாப்பாயே அழகையா..

ஆண்டியாக நின்றாலும் முருகையா ..
அகிலமெலாம் உன்சொந்தம் கந்தையா ..
ஞானபழமொன்றும் பெரிதில்லை கந்தையா ..
ஞாலமெலாம் உனக்கேத்தான் வேலையா ..
மஹாலட்சுமியின் அம்சம்நீயே வேலையா ..
இசைச்சரணம்யாயும் நீதானே அழகையா ..


என் முருகரை வாழ்த்தி நான் எழுதியது.....

அன்புடன் -

தினேஷ்மாயா