பூ பூக்கும் ஓசை

Friday, July 09, 2010





      நான் எதையாவது கற்றுக் கொண்டே இருப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுவேன். அது எதுவாக இருந்தாலும் சரி. எல்லாவற்றையும் கற்றறிந்திருதால் அது என்றாவது ஒரு நாள் உபயோகப்படும் என்பது என் கருத்து. ஒரு நாள் என் அம்மா பூ கட்டிக் கொண்டிருந்தார். நான் அவரிடன் பூ எப்படி கட்டுவது என்று கேட்டேன். அது எல்லாம் உன்னக்கு எதுக்குடா அதெல்லாம் ஒன்னும் வேணாம் என்று சொன்னாங்க. நாம எப்ப அவங்க பேச்ச கேட்டு இருக்கோம் சொல்லுங்க. அடம்பிடிச்சு அவங்ககிட்ட பூ கட்டுவது எப்படினு கத்துகிட்டேன். அம்மா எனக்கு ரொம்ப பொறுமையா சொல்லி தந்தாங்க. நானும் நல்லா கத்துகிட்டேன். எங்கள் வீட்டில் பூச்செடி வளர்த்து வரோம். அதில் பூக்கும் பூவை அம்மாதான் கட்டுவார். இன்று ஒருநாள் நான் கட்டினேன். அதை ஒரு போட்டோ எடுத்தேன். உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள.. சொல்லுங்க Friends.. நான் நல்லா பூ கட்டி இருக்கேனா… ???? J


அன்புடன் -


தினேஷ்மாயா 

1 Comments:

தினேஷ்மாயா said...

”கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்.
கவலை உனக்கில்லை ஒற்றுக்கொள்.”
- நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை