நண்பா நண்பா நாளை உலகம் நம் கையில்

Friday, July 09, 2010









நண்பா நண்பா நாளை உலகம் நம் கையில்
அது தெரியும் தெரியும் கண்ணில் நாளைய விடியலில்
நீ பதறாதே..
நீ சிதறாதே..

நம்மை நாமே தேடி தேடி
நதிகள் போல ஓடி ஓடி
நம்மை நாமே கண்டு பிடிப்போம்
ஒன்றாக சாதிப்போம்
பொன் நாளில் சந்திப்போம்
ஒன்றாக சாதிப்போம்
பொன் நாளில் சந்திப்போம்
சந்திப்போம்..
நண்பா நண்பா நாளை உலகம் நம் கையில்
அது தெரியும் தெரியும் கண்ணில் நாளைய விடியலில்


எந்த பந்தம் இல்லாமல்
ரத்த சொந்தம் இல்லாமல்
இதயங்கள் இன்று பிரிகின்ற போது
நெஞ்சில் வலிகள் கொண்டோமே
நட்பு என்ற வார்த்தைக்குள்
ரெண்டு அர்த்தம் இங்குண்டு
தன்நலமின்மை உயிர்தரும் உண்மை
நட்பில் ஒன்றாய் வாழ்ந்தோமே
நட்பெனும் சொந்தம் உயிரினை போலே
கடவுளை விடவும் ஒரு படி மேலே
எங்கோ பிறந்தோமே
அட எங்கோ வளர்ந்தோமே
இங்கே இணைந்தோமே
இரு இதயம் நனைந்தோமே

நம்மை நாமே தேடி தேடி
நதிகள் போல ஓடி ஓடி
நம்மை நாமே கண்டு பிடிப்போம்
ஒன்றாக சாதிப்போம்
பொன் நாளில் சந்திப்போம்
ஒன்றாக சாதிப்போம்
பொன் நாளில் சந்திப்போம்
சந்திப்போம்..

நண்பா நண்பா நாளை உலகம் நம் கையில்
அது தெரியும் தெரியும் கண்ணில் நாளைய விடியலில்


காத்திருக்கக் கற்றுக்கொள்
காலம் போகும் ஏற்றுக்கொள்
ஒரு பிடி வைரம் உருப்பெறும் நேரம்
நூறு நூறு வருடங்கள்
ஊசி வந்து உயிர் தொட்டு
பாடல் பாடும் இசைத்தட்டு
வலிகளை தாங்கி வடுக்களை வாங்கி
அக்கினிகுஞ்சாய் போராடு
ஓய்ந்துவிடாதே நீ ஒரு காற்று
தளர்ந்துவிடாதே நம்பிக்கை ஏற்று
விதைகள் கிழியாமல் சிறு துளிரும் தோன்றாது
கப்பல்தான் நிற்கும் கடல் அலைகள் நிற்காது


நம்மை நாமே தேடி தேடி
நதிகள் போல ஓடி ஓடி
நம்மை நாமே கண்டு பிடிப்போம்
ஒன்றாக சாதிப்போம்
பொன் நாளில் சந்திப்போம்
ஒன்றாக சாதிப்போம்
பொன் நாளில் சந்திப்போம்
சந்திப்போம்..



படம்: பிப்ரவரி 14
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: கார்த்திக், பரத்வாஜ், ஜனனி பரத்வாஜ்


நான் +2 படிக்கும்போது Talent's Day நடந்துச்சு. அப்போ இந்த பாடலை பாடினேன். அதிகம் பாடவில்லை.. இரண்டாம் சரணம் பாடும்போது ஏதோ ஒரு தடுமாற்றம் ஏற்பட்டு பாதியிலேயே வந்துவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த Botany Miss கேட்டாங்க. பாட்டு ரொம்ப நல்லா இருந்துச்சு, நீயும் ரொம்ப நல்லா பாடின எதுக்குடா பாதியிலேயே வந்துட்ட. நீ மட்டும் முழுசா பாடியிருந்தா கண்டிப்பா உனக்குத்தான் Prize கிடைச்சு இருக்கும்னு சொன்னாங்க. அவங்க உண்மையா சொன்னாங்களோ ஆறுதலா சொன்னாங்களோ தெரியல. ஆனா நான் இந்த பாடலின் முதல் சரணத்தைப்பாடி முடித்து பாட முடியாமல் வந்ததும் அனைவரும் கைத்தட்டினர். என்னை வெறுப்பேற்றவே கைத்தட்டினார்கள் என்று நினைத்திருந்தேன். பின்னர்தான் தெரிந்தது அனைவருமே என் பாடலை பாராட்டித்தான் கைத்தட்டினார்கள் என்று.. அதைவிட இந்த பாடல் அப்போது யாருக்கும் அவ்வளவாக பரிட்சயம் இல்லை. நட்பை பற்றி நான் பாடியது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அனைவருக்கும் பிடித்து போய்விட்டது அதைவிடவும் மகிழ்ச்சி எனக்கு..


அன்புடன் -


தினேஷ்மாயா 

0 Comments: