கொடுத்ததெல்லாம் கொடுத்தான்....

Thursday, July 15, 2010

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்...

மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்...
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்...

இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார்
கிடைத்தவர்கள் பிழைத்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ வைப்போம்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்...
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்...

படம் - படகோட்டி
வரிகள் - கவிஞர் வாலி
இசை - விஸ்வனாதன்-ராமமூர்த்தி
பாடியவர் - டி எம் எஸ்

எனக்கு மிகவும் பிடித்த பொதுவுடைமைப் பாடல் இது.....
இந்த வரிகள் உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன்...

அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: