ஆப்பிள் பெண்ணே நீ யாரோ

Sunday, October 07, 2012



ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ
பூவின் மகளே நீ யாரோ
புன்னகை நிலவே நீ யாரோ
பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ
என்ன நீ பார்க்கவில்லை என் உயிர் நொந்ததடி
பென்ணே நீ போன வழியில் என் உயிர் போனதடி
எங்கோ ஓர் சாலை வளைவில் உன் பிம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி

மின்னலை கண்டு கண்கள் மூடி கண்களை திறந்தேன் காணவில்லை
மின்னல் ஒளியை கையில் கொள்ள ஐயோ ஐயோ வசதியில்லை
என்னை நோக்கி சிந்திய மழைத்துளி எங்கே விழுந்தது தெரியவில்லை
எந்த சிப்பியில் முத்தாய் போச்சோ இதுவரை ஏதும் தகவலில்லை
அழகே உன்னை காணாமல் அன்னம் தண்ணீர் தொடமாட்டேன்
ஆகாயத்தின் மறுபக்கம் சென்றால்கூட விடமாட்டேன்
உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும்
கடவுளை தொழ மாட்டேன்
எங்கோ ஓர் சாலை வளைவில் உன் பிம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

பெண்ணே
உன்னை மறுமுறை பார்த்தால் லவ் யூ லவ் யூ சொல்வாயா
பாவம் ஐயோ பைத்தியம் என்று பார்வையினாலே கொல்வாயா
உலகின் விளிம்பில் நீ இருந்தாலும் அங்கும் வருவேன் அறிவாயா
உயிரை திருகி கையில் தந்தால் ஓகே என்று சொல்வாயா
ஆமாம் என்று சொல்லிவிட்டால் ஆண்டுகள் நூறு உயிர்த்தரிப்பேன்
இல்லை என்று சொல்லிவிட்டால் சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன்
நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும் மீண்டும் காதலிப்பேன்..
எங்கோ ஓர் சாலை வளைவில் உன் பிம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ
பூவின் மகளே நீ யாரோ
புன்னகை நிலவே நீ யாரோ
பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ

படம்: ரோஜா கூட்டம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்

என் பள்ளிப்பருவத்தில் அதிகம் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த படமும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். மென்மையான காதலை அற்புதமாக வெளிப்படுத்திருப்பார் இயக்குனர். அதிகம் ரசித்த படம், அதிகம் ரசித்த பாடல் இது. பாடல் வரிகளும் அருமையாக அமைந்திருக்கிறது.


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: