கண்ணாடி வளையல்

Tuesday, October 02, 2012





    என்னவோ தெரியலை, எனக்கு கண்ணாடி வளையலைப் பற்றி என் வலையில் பதிவு செய்யனும் என்று தோனுச்சு. கண்ணாடி வளையல் அணிவது நம் தமிழ் பெண்களின் வழக்கம் அன்று. ஆனால் இன்றைய பெண்களோ வளையல் என்பதையே மறந்துவிட்டனர் என்றுகூட சொல்லலாம். நாகரிகம் வளர்கின்றது என்று சொல்லிக்கொண்டு நம் கலாச்சாரத்தை அழித்து வருகிறோம் என்பதை கண்கூடாக பார்க்க நேர்கிறது. 

   முன்பெல்லாம். சந்தைக்கு செல்லும் கணவனிடம் ஒரு வெள்ளைத்தாளில் தன் வளையலை பென்சிலில் வரைந்து கொடுத்து அதே அளவிற்கு ஒரு டசன் கண்ணாடி வளையல் வாங்கிவரச் சொல்வாள் நம் தமிழச்சி. பின்வந்த நாட்களில் கண்ணாடி வளையல் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கி பின்னர் பிளாஸ்டிக் வளையல்களுக்கு நம் பெண்கள் இடம்கொடுக்க ஆரம்பித்தனர். அப்புறம், உலோகங்களில் கண்ணைக் கவரும் விதமாக இருந்த வளையல்களை விரும்பினர். ஆனால் ஆறுதலான ஒரே விஷயம் என்னவென்றால், தங்க வளையல்களுக்கு மட்டும் என்றும் ஆர்வம் நம் பெண்களிடத்தில் குறைந்ததாய் தெரியவில்லை. தங்கம் என்பதாலோ இந்த ஆர்வம்?
   எது எப்படியோ, ஆயிரம் ஆயிரம் விலை கொடுத்து தங்க வளையல்களோ, கண்ணைக் கவரும் வளையல்களை வாங்கினாலும், கண்ணாடி வளையல்களுக்கு இருக்கும் சிறப்பே தனிதான். எனக்கு துணையாய் வருபவளுக்கு கண்ணாடி வளையல் பிடிக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இயன்றவரை நான் நமது கலாச்சாரத்தை காக்கும்படி வலியுறுத்துவேன். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை மறந்துவிட்டு நமக்காக வாழ்வோம் என்பேன்..


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: