விழியில் உன் விழியில்

Friday, October 19, 2012



கண்ணோடு கண் சேரும்போது
வார்த்தைகள் எங்கே போகும் ?
கண்ணே உன் முன்னே வந்தால்
என் நெஞ்சம் குழந்தை ஆகும்…

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீதான் என்று உயிர் சொன்னதே...
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன்
அந்த நொடியில் என் வழிதுணை
நீதான் என்று நிழல் சொன்னதே...

உன்னோடு வாழ்ந்திடத்தானே நான் வாழ்கிறேன்..
உன் கையில் என்னை தந்து தோள்சாய்கிறேன்
ஓ தோள்சாய்கிறேன் ..

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீதான் என்று உயிர் சொன்னதே...
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன்
அந்த நொடியில் என் வழிதுணை
நீதான் என்று நிழல் சொன்னதே...

இதுவரை என் இருதயம்
இந்த உணர்வினில் தடுமாறவில்லை
முதல்முறை இந்த இளமையின்
சுகம் உணர்கிறேன் நான் தூங்கவில்லை
குடையோடு நான் போனேன்
மழையினில் ஏனோ நனைகின்றேன்..
கடிகாரம் இருந்தாலும்
காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்..
என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து கொடுத்தாய்..

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீதான் என்று உயிர் சொன்னதே...
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன்
அந்த நொடியில் என் வழிதுணை
நீதான் என்று நிழல் சொன்னதே...

சிரிப்பிலே உன் சிரிப்பிலே
சிறையடைக்கிறாய் நான் மீழவில்லை
உறவுகள் ஒன்று சேர்கையில்
என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை
உன்னோடு நான் பேசும்
ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே
உரையாடல் தொடர்தாலும்
மௌனங்கள் கூட பிடிக்கிறதே
என் கனவுக்கு கனவுகள் நீ வந்து கொடுத்தாய்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீதான் என்று உயிர் சொன்னதே...
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன்
அந்த நொடியில் என் வழிதுணை
நீதான் என்று நிழல் சொன்னதே...
உன்னோடு வாழ்ந்திடத்தானே நான் வாழ்கிறேன்..
உன் கையில் என்னை தந்து தோள்சாய்கிறேன்
ஓ தோள்சாய்கிறேன் ..
விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீதான் என்று உயிர் சொன்னதே...

படம்: கிரீடம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: சோனு நிகம், ஷ்வேதா


இந்த பாடல் நான் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும்போதுதான் முதலில் கேட்டேன். அதிகம் மனதை தொடவில்லை என்றாலும் இந்த பாடல் ஏனோ எனக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. ஒருமுறை பேருந்தில் என் ஊருக்கு சென்றுக்கொண்டிருக்கும்போது ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துக்கொண்டு இந்த பாடலை மனதிற்குள் பாடிக்கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் பாடல் கேட்கும் வசதிகொண்ட செல்பேசி இல்லை. அன்று நினைத்துக்கொண்டேன். அடுத்தமுறை ஒரு நல்ல செல்பேசி வாங்கியதும், இப்பாடலை அதில் பதிவேற்றம் செய்துக்கொண்டு, ஊருக்கு செல்லும்போது பேருந்தில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு கேட்கவேண்டும் என்று. சின்ன ஆசைதான். இருந்தாலும் சில மாதங்கள் கழித்து அதை நிறைவேற்றிக்கொண்டேன். புது செல்பேசி வாங்கியதும் ஊருக்கு பேருந்தில் சென்றேன். அதே ஜன்னலோர இருக்கை. வெளியே மழை தூரல். என் காதில் ஹெட்செட். இந்த பாடலை கேட்டவாரே சென்றேன். என் சின்ன ஆசையை நிறைவேற்றிக்கொண்ட சந்தோஷத்துடன் இப்பாடலை கேட்டபடியே பயணித்தேன். எனக்கு அதிகம் பிடித்த ஒவ்வொரு பாடலை கேட்கும்போதும் என் மனதில் அந்த பாடல் பதிந்ததற்கான காரணம் ஒன்று இருக்கும். இந்த பாடல் என் மனதிற்குள் வந்த காரணம் இது..

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: