புதிது புதிதாய்

Sunday, October 07, 2012



வாழ்க்கையில் என்றுமே வழக்கமான செயல்களையே செய்துக் கொண்டிருந்தால் வெறுப்புதான் வரும். புதிது புதிதாய் பல விஷயங்களை நாம் முயற்சி செய்து பார்க்க வேண்டும். ஆனால், எனக்கு ஏன் இந்த வம்பு. எனக்கு தெரிந்ததையே நான் செய்துவிட்டு போகிறேன் என்றுதான் பலர் இருக்கின்றனர். புதிதாய் யோசித்து செயல்பட்டதால்தான் இன்றைய பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காரணம். எப்போதும் ஒரேமாதிரியாய் செய்துக்கொண்டிருந்தால் அதில் என்றுமே ஒரு ஆர்வம் இருக்காது. புதிதாய் ஒரு விஷயத்தை செய்துபார்த்து அது வெற்றியில் முடிந்தாலும் சரி, தோல்வியில் முடிந்தாலும் சரி. கடைசியில் நமக்கு ஒரு நல்ல அனுபவம் கிட்டும். புதுபுது அனுபவங்களை பெற இங்கே யாரும் தயாராய் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை..

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: