யாரை கேட்பது எங்கே போவது

Thursday, October 11, 2012




யாரை கேட்பது எங்கே போவது
தூண்டில் புழுவென ஆனாய்
ஏதோ நடக்குது கண்ணை இருட்டுது
நெஞ்சம் நொறுங்கி தான் போனாய்
நதியோடு பயணம் போனால்
அலை வந்து மோதுமே
அதை போல வாழ்க்கை கூட போராட்டமே
விதி என்னும் நூலில் ஆடும்
பொம்மை போல வாழ்கிறோம்
வழிதொரம் கானல் நீராய்
ஏமாற்றும் தோற்றம் காட்டும்

யாரை கேட்பது எங்கே போவது
தூண்டில் புழுவென ஆனாய்
ஏதோ நடக்குது கண்ணை இருட்டுது
நெஞ்சம் நொறுங்கி தான் போனாய்

பனி புகை காற்றே தான் நெருப்பென்று தவறாக
பறவைகள் நினைத்தாலே வழி இல்லையே
துயரங்கள் எப்போதும் நிரந்தரம் கிடையாது
கிழக்கினில் விடிந்தாலே இருள் இல்லையே
அடை மழை அடித்தாலும்
மண் சாயும் மரம் சாயும்
மலை என்றும் சாயாதடா…
இன்பம் மட்டுமே வாழ்க்கை இல்லையே
கொஞ்சம் துன்பமும் வேண்டும்
மழை துளியிலே வெயில் சேர்ந்த பின்
தானே வானவில் தோன்றும்
நதியோடு பயணம் போனால்
அலை வந்து மோதுமே
அதை போல வாழ்க்கை கூட போராட்டமே
விதி என்னும் நூலில் ஆடும்
பொம்மை போல வாழ்கிறோம்
விதி மாற்றும் விதிகள் செய்தால்
உன் வாழ்க்கை உந்தன் கையில்

இன்பம் மட்டுமே வாழ்க்கை இல்லையே
கொஞ்சம் துன்பமும் வேண்டும்
மழை துளியிலே வெயில் சேர்ந்த பின்
தானே வானவில் தோன்றும்

திரைப்படம்: வாமனன்

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: