வாழ்த்து அட்டைகள்

Tuesday, January 08, 2013





    எந்தவொரு விசேஷமானாலும் முன்பெல்லாம் வாழ்த்து அட்டைகள் பரிமாறிக்கொள்வோம். ஆனால் இப்போது அந்த வாழ்த்து அட்டைகள் எங்கே போய்விட்டது என்றே தெரியவில்லை. சமீபத்தில் பொங்கல் வாழ்த்து அட்டைகளை வாங்கி இந்த பொங்கலுக்கு நண்பர்கள் அனைவர்க்கும் வாழ்த்து அட்டைகளை அளித்து சற்று வித்தியாசமாக வாழ்த்தலாம் என்றிருந்தேன். ஒரு வாழ்த்து அட்டை பத்து ரூபாய் என்று சொன்னார்கள். எனக்கோ கிட்டத்தட்ட ஐம்பது வாழ்த்து அட்டைகள் தேவை. அப்போது அந்த கடைக்காரரிடம் சொன்னேன், பொங்கல் தினத்தில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பவே ஒரு ரூபாய்தான் செலவாகிறது. இன்னமும் இதன் விலையை குறைக்காமல் இருந்தால் எப்படி வாங்குவார்கள் என்று சொல்லிவிட்டு பத்து வாழ்த்து அட்டைகளை மட்டும் வாங்கிவந்தேன்.

        நவீனமயமாகிவிட்ட இந்த உலகத்தில் வாழ்த்து அட்டைகளுக்கு சற்றும் இடமில்லை என்பதை நன்கு உணர்ந்தேன். ஆனால் இன்னமும் வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொண்டு வாழ்த்தும் உள்ளங்கள் இருக்கின்றன. நீங்களும் ஒருமுறையாச்சும் எதாவது விசேஷத்திற்கு உங்கள் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்து அட்டை கொடுத்து வாழ்த்து தெரிவியுங்கள்.

- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: