என் வாழ்வில் மறக்கமுடியாத தருணங்கள்...

Monday, March 22, 2010


இதெல்லாம் என் வாழ்வில் எத்தனை வயதானாலும் எனக்கு எப்போதும் அதிகம் பிடிக்கும் விஷயங்கள்... என்னால் மறக்க முடியாத தருணங்கள்.. இதயத்தில் என்றும் பசுமையாய் இருக்கும் நினைவுகள்...




  • ஒவ்வொரு வருஷமும் கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலை சென்றுவிடுவேன்.. நான் எங்கே இருந்தாலும் எப்படிபட்ட வேலையாய் இருந்தாலும் சென்றிடுவேன்.. இறைவனை தீபமாக காணும்போது என்னையும் மறந்து கண்களில் கண்ணீர் வரும்.. அந்த ஆனந்த நிலைக்காகவே வருடந்தவறாமல் திருவண்ணாமலை சென்றிடிவேன்...


    அதே போல ஒவ்வொரு வருஷமும் ஆடி கிருத்திகை தினத்தன்று திருத்தணி சென்றுவிடுவேன்.. எனக்கு முருகனுக்கு காவடி எடுக்க வேண்டுமென்று ஆசை.. வீட்டில் நாம் என்ன சொன்னாலும் ஒத்துக்கப் போறதில்லை.. அதனால நானே வீட்டுக்கு தெரியாம விரதம் இருந்து என் நண்பனுடன் அவன் குடும்பத்தாருடன் சேர்ந்து காவடி எடுத்து செல்வேன்..
    இந்த 2 விஷயங்கள் தான் என் மனசுக்கு ரொம்ப பிடிச்ச முதல் விஷயம்..


  • Bus-ல ஜன்னலோர சீட்ல உட்கார்ந்துக்கொண்டு வேடிக்கைப் பார்ப்பது..
    {பனிக்காலத்தில் இரவில் Bus-ல ஊருக்கு போகும்போது ஜன்னலை சாத்தும்படி யார் சொன்னாலும் அவர்களிடம் சண்டை போடுவேன்...
    ஜன்னலை சாத்த முடியாது என்று...}

  • ரொம்ப தூரம் பயணம் செல்ல பிடிக்கும்.. Bus அல்லது Train எதுவானாலும்...
    எந்த இடமானாலும், எந்த விஷயத்திற்காக இருந்தாலும்...
    Travel-னு சொன்னா அதற்காக எதையும் செய்வேன் தெரியுமா...
  • இரவில் வெகு நேரம் தூங்காமல் FM-ல பாட்டு கேட்பேன்.. Laptop வாங்கியதிலிருந்து என் PC-லேயே பாடல்களை கேட்க ஆரம்பித்துவிட்டேன்...
  • மனசு பாரமா இருந்துச்சுனா கோயிலுக்கு போய் ரொம்ப நேரம் அமைதியா உட்கார்ந்துட்டு இருப்பேன்...

  • மைலாப்பூரில் இருக்கும் இராமகிருஷ்ண மடத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று 2-3 மணி நேரம் தியானம் செய்வது பிடிக்கும்...
  • எப்போதாவது நேரம் கிடைக்கும்போது தனியாக கடற்கரைக்கு சென்று ரொம்ப நேரம் அலைகளில் நின்றுவிட்டு அப்படியே காலார நடந்துவிட்டு வருவேன்.. சில நேரங்களில் சும்மா உட்கார்ந்து கடற்கரை காற்றில் என்னை நானே தொலைத்திருப்பேன்...
  • இரவில் Late-ஆக தான் தூங்குவேன்... அதுவரை கவிதைகள், கதை எழுதிக்கொண்டிருப்பேன்... எதையாவது வரைந்துக் கொண்டிருப்பேன்... எதைப் பற்றியாவது யோசித்துக் கொண்டிருப்பேன்.. உங்களுக்குத் தெரியுமா நான் 6 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து யோசித்து கொண்டிருந்திருக்கிறேன்..
  • குழந்தைகளை தூக்கி கொஞ்ச பிடிக்கும்...
  • அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு TV பார்க்க பிடிக்கும்...
  • நான் விட்டுக்குப்போனா அம்மா என்னை குளிப்பாட்டுவாங்க... தலைக்கு ஒழுங்கா எண்ணெய் வெக்க சொன்னா கேட்டாதான...தலையெல்லாம் ஒரே பொடுகு என்று திட்டிக்கொண்டே தலைக்கு சீயக்காய் போட்டு விடுவாங்க... அம்மா கண் எரியுது என்று நான் கத்தினாலும் என்னை திட்டிக்கொண்டே என்னை குளிப்பாட்டிவிடுவது ரொம்ப பிடிக்கும்...
  • வீட்டில் இருக்கும்போது Night 3 மணி வரை TV-ல பாட்டு கேட்டுட்டு Late-ஆ தூங்கி, அதிகாலை 11 மணிக்கு எழுவது பிடிக்கும்... :)  {அம்மா அப்பா தங்கை யார் திட்டினாலும் கண்டுக்கொள்வதில்லை..}
  • வீட்டில் நான், அம்மா, அப்பா, தங்கை நால்வரும் ஒன்றாக அமர்ந்து TV பார்த்துட்டே சாப்பிடுவோம்... அது ரொம்ப ரொம்ப பிடிக்கும்...
  • ஊரில் இருக்கும்போது வண்டியை எடுத்துக்கொண்டு எந்த ஒரு வேலையும் இல்லாமல் ஊர் சுற்றுவது பிடிக்கும்...
  • New Year, Pongal, Deepavali  வந்தால் ஊருக்கு கிளம்பி போய் விடுவேன்... அம்மாவும் தங்கையும் வீட்டின் வாசலில் கோலம் போடும்போது கோலத்திற்கு கலர் நான்தான் தருவேன்னு அடம் பிடிப்பேன்... அவர்களும் சரி அசிங்கப்படுத்தாதனு சொல்லிட்டு எனக்கு அதை Allot செஞ்சிடுவாங்க... நானும் என் கைவண்ணத்தை காண்பிப்பேன்.. மறுநாள் காலை பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கோலம் நல்லா இருக்குனு ஒரு வார்த்தை சொல்லிட்டா போதும்.. எல்லாம் என் திறமைதான் என்று அம்மவிடமும் தங்கையிடமும் சொல்லி பெருமைப் பட்டுக்கொள்வேன்.. :)
  • அதே போல இந்த விசேஷ தினங்களில் அம்மாவும் தங்கையும் எனக்கு கையில் போட்டி போட்டுக்கொண்டு மருதானி வைத்துவிடுவார்கள்..
  • காதலின் வலியையும் அதன் இனிமையான அனுபவத்தையும் உணர்ந்துக்கொண்டிருக்கும் தருணம் இது... நிச்சயம் என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் இது...

  • விண்ணைத்தாண்டி வருவாயா படம் முதல்முதலாய் பார்த்தது... தனியாக சென்று பார்த்தேன்... படம் அப்படியே என் வாழ்வை Xerox எடுத்து வைத்ததுபோல இருந்தது... படம் பார்த்துமுடிச்சிட்டு தியேட்டரைவிட்டு எழுந்துவர மனமில்லாமல் நான் மட்டும் தனியாக அமர்ந்திருந்தது...
  • என் மனத்தின் பதிவுகளை இங்கே Blog-ல் பதிவு செய்வது ரொம்ப பிடிக்கும்...
  • நண்பர்களுடன் சேர்ந்து “இமயம் அறக்கட்டளை” என்றொரு இயக்கம் உருவாக்கி சமூக சேவை செய்துக் கொண்டிருகிறோம்... என்னைப் பொறுத்தவரை என் வாழ்வில் நான் சாதித்த மிகப்பெரிய விஷயம் இது...
  • நண்பர்களுடன் கல்லூரியில் எந்த தலைப்பும் இல்லாமல் மணிக்கணக்கில் அரட்டை அடிப்பது பிடிக்கும்..
  • நான் படித்த பள்ளிக்கு மீண்டும் சென்று பார்க்கும் போது, நான் படித்த வகுப்பில் நான் அமர்ந்த இடத்தில் மீண்டுமொருமுறை அமர்ந்துவிட்டு கொஞ்ச நேரம் என்னையறியாமலேயே கண்ணீரை அங்கே நிரப்பிவிட்டு வந்தேன்..
  • Anna University-ல் இடம் கிடைத்து Admission-க்காக நானும் அப்பாவும் வந்தபோது, நான் இடம் தெரியாமல் சைதாப்பேட்டைக்கு பதிலாக தேணாம்பேட்டையில் இறங்கி, Cell Phone அவ்வளவு பரிச்சயமாகாத காலம் அது... அப்படியிருந்தும் நான் அவரை ஒரு Auto-வில் சென்று பின் தொடர்ந்து கண்டுடித்து College Admission வாங்கியது மறக்க முடியாது... :)
  • ஆயிரம் சொன்னாலும் நான் படித்த SCHOOL DAYS போல சொர்க்கம் வேறு எங்கும் இல்லை எனக்கு.. அதை இங்கே சொல்ல வார்த்தைகள் வரவில்லை... வெறும் கண்ணீர் துளிகளை தவிர...
  • பேய்தனமா மழையில் நனைய பிடிக்கும்.. இயற்கை என்றுமே என்னை எதுவும் செய்யாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு.. அதனால் மழையை பார்த்துவிட்டால் போதும் எதையும் கண்டுகொள்ளமாட்டேன்.. நனைய ஆரம்பிச்சுடுவேன்.. இப்படி மழையில் நனைஞ்சு 2 Phone-அ Waste செய்திருக்கேன்... :)
  • இயற்கையை ரசிக்க பிடிக்கும்... அதிகாலையில் கடற்கரையில் அமர்ந்திருக்க பிடிக்கும்.. அந்த மாசு இல்லாத காற்றை சுவாசிக்க பிடிக்கும், அந்த அதிகாலையில் கடற்கரையில் நடக்கும் போது ஒரு சின்னஞ்சிறு பிள்ளையாய் மாறி போய்விடுவேன்..
  • ஊருக்கு செல்கையில் பேருந்தில் ஜன்னலொர இருக்கையில் அமர்ந்து தூங்கியபடி செல்வேன்.. Night 1 மணி இருக்கும்... வேலூர் Bus Stand-ல் Bus நிற்கும்போது தூக்கத்திலிருந்து எழுந்து, ஒரு சுக்கு காபி குடிச்சிட்டு, அப்படியே அவசரமா பக்கத்திலிருக்கும் கடைக்கு ஓடிப்போய் 3 Lays Packet வாங்கிவந்து ஊர் செல்லும் அந்த 2 மணிநேரமும் தூங்காமல் அதை சாப்பிட்டவாறே வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்வேன்...
  • நான் பத்தாவது படிக்கும்போது Public Exam-காக ஒரு Hero Pen வாங்கினேன்... அதை இன்றுவரை பத்திரமாக வைத்திருக்கிறேன்... ஒருமுறை சென்னையின் நெருக்கமான பேருந்தில் படியில் தொங்கிக் கொண்டுபோனபோது அது தவறி கீழே விழுந்துவிட்டது... அடுத்த நிறுத்தத்தில் இறங்கி கீழே விழுந்த பேனாவை தேடி 2 கிலோமீட்டர் நடந்து சென்று ஒருவழியாக கண்டு பிடித்துவிட்டேன்... நான் போகும் வழியெல்லாம் அந்த Pen எனக்கு கிடைச்சிடனும் என்று இறைவனை வேண்டிக்கொண்டே சென்றேன்.. நல்ல வேலையாக கிடைத்துவிட்டது... :)
  •  எங்க ஊர் பக்கத்தில் ஒரு கிறிய அருவி இருக்கின்றது... Bore  அடிச்சா என் நண்பர்களுடன் வண்டியில் அங்கே சென்றுவிடுவோம்... 4-5 மணி நேரம் தண்ணீரில் விளையாடியிருக்கிறோம்...

  • நான் ஊரில் இருக்கும் போது Saturdays-ல தவறாமல் 5 கோவில்களுக்கு மாலையில் சென்றிடுவேன்..
    1. கோட்டை சிவன் கோவில்..
    2. பெருமாள் கோவில்..
    3. ஆஞ்சநேயர் கோவில்..
    4. மாயபிள்ளையார் கோவில்..
    5. தண்டபாணி முருகர் கோவில்..
    இந்த கோவில்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப இரவு 9 மணி ஆகிவிடும்.. அம்மா என் மேல கோவமா இருப்பாங்க.. சாமி குங்குமத்தையும், பிரசாதத்தையும் தந்து சமாதான படுத்திவிடுவேன்...
  • நான் ஏதாவது மனதளவில் சோர்ந்து போயிருக்கும்போது அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு அம்மாவிடம் சொல்லி கண்ணீர் விட்டு அழுவேன்.. அம்மா என்னை சமாதானப் படுத்தி, “அப்பு, உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியாதான் நடக்கும்டா.. எதுக்கும் கவலைப்படாதே.. நாங்க இருக்கோம்ல.. எதுக்கும் Feel பண்ணாதேப்பா.. எதுவாயிருந்தாலும் பார்த்துக்கலாம்”னு ஆறுதல் சொல்வாங்க.. அப்பதான் ஒரு தெளிவு வரும் மனதில்.. நான் இப்படி அம்மாவின் மடியில் பலமுறை கண்ணீர் வடித்ததையும் அம்மாவின் ஆறுதல் வார்த்தைகளையும் என்னால் மறக்கவே முடியாது...
  • அம்மா சமைக்கும்போது எப்படி சமையல் செய்யனும்னு கத்துக்குவேன்.. அப்பா திட்டுவார்.. என்ன பழக்கம் இது அப்படினு.. அதற்கு அம்மா உங்க அம்மாதான் உங்களுக்கு சமைக்க சொல்லி தரல.. என் மருமகளை நான் கஷ்டப்படுத்த விரும்பல அதான் இவனுக்கு கொஞ்சம் சமைக்க சொல்லிதரேன்னு சொல்வாங்க.. எனக்கும் அம்மாவுக்கும் ஒரே சிரிப்பா இருக்கும்..
  • ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாதபோது ரொம்ப பசித்தது.. அம்மாகிட்ட Phone- பண்ணி கேட்டேன்.. Shelf-ல மாவு இருக்கு சப்பாத்தி செஞ்சு சாப்பிடு நாங்க வர நேரமாகும்னு சொன்னாங்க.. நானும் ஒரு ஆர்வத்தில் மாவு பிசைஞ்சு அதை ஒருவழியா உருட்ட Try பண்றேன்.. உருட்டவே முடியல..
    தண்ணி கம்மியா இருக்குனு நினைச்சு அதிகம் தண்ணி ஊத்தி, அப்புறம் தண்ணி அதிகமாகி மாவு கொஞ்சம் போட்டு ஒருவழியா பதமாக ஆக்கிட்டேன்.. அதை உருட்டலாம்னு ஆரம்பிக்கும்போது அம்மா வந்துட்டாங்க.. பாருங்க.. இந்த வேலை செய்யவே நான் 1 மணி நேரத்துக்கும் மேல எடுத்துகிட்டேன்.. அம்மா வந்து அதைஉருட்ட முயற்சி பண்றாங்க... அவங்களாலேயே முடியல.. என்னடானு பார்த்தா அப்புறம்தான் அவங்களுக்கு தெரிஞ்சுச்சி நான் கோதுமையும் மைதாவும் கலக்கறதுக்கு பதிலா, மைதாவும் கேழ்வரகு மாவையும் ஒன்றாக சேர்த்து ஏதோ ஒருவழி ஆக்கி வெச்சிருக்கேன் என்று.. அதுவும் சப்பாத்தி செய்றேனு எல்லா மாவையும் காலி செஞ்சதுதான் மிச்சம்.. மறக்க முடியாத நிகழ்வு இது..
  • நாங்கள் இருவரும் அன்று பார்வைகளால் பேசிக்கொண்ட அந்த தருணங்கள்...
வாழ்க்கை என்பது சின்ன சின்ன சந்தோஷங்களில்தான் மறைந்திருக்கு என்பதை எனக்கு உனர்த்திய தருணங்கள் இவை.. 
உங்களுக்கு இது எப்படி இருந்ததோ தெரியவில்லை.. இன்னமும் என் மனதில் பசுமையாய் இருக்கிறது இந்த நினைவுகள்..

இன்னொரு வேண்டுகோள்.. இதை மட்டும் அல்ல, என் மற்ற பதிவுகளையும் படித்துப்பார்த்துவிட்டு தங்களின் கருத்துக்களையும் விட்டு செல்லுங்களேன்.. :)

சரிங்க Friends... Time ஆச்சி.. தூக்கம் வருது.. இதை இன்னொரு நாள் Continue பண்றேன்... மீண்டும் சந்திப்போம்..


நட்புடன் -

தினேஷ்மாயா

1 Comments:

SabanaSuthan said...

வாழ்கைய வாழாம விட்டேனோனு தோனுது.......... நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி தெரியுமா?