கள்ளி அடி கள்ளி....

Tuesday, March 16, 2010

இலங்கை தமிழர்களும் நம் சொந்தம் தான்.. அவர்கள் நம் இரத்தம்.. அவர்கள் நம் உடன்பிறப்பு.. அவர்களை நாம் தான் நேசக்கரம் நீட்டி உதவவேண்டும்..
அதை அருமையாக விலக்கும் பாடல்..
இதை முதன்முதலில் கேட்டபோது கண்ணீர் சிந்தினேன்..
மேலும் நான் என் மனதை அதிகம் பாதித்த பாடலின் வரிகளைத்தான் இங்கே என் வலைப்பூவில் பதிவு செய்து வருகிறேன்...
எப்போது கேட்டாலும் மனதில் ஒரு உணர்ச்சி குவியல்களே எழுகிறது...



கள்ளி அடி கள்ளி
எங்கே கண்டாய்
முதல் என்ன கரைச்சாய்
உண்மை எல்லாம் சொல்லு

சிரித்திடும் வாவி கரையோரம்
காத்து நான் கிடந்தனன்
பதிங்கி மெல்ல வந்தவன்
பகுடி பகுடி என்ன போங்கடி

முழு நிலவு காயும்
நிலவில் மீன்கள் வாடும் தேன்நாடு
அங்கே இருந்து இங்கே
வாழ வந்த  பெண்ணே நீ பாடு

நம்மை அணைக்க ஆளில்லை
என்று பதறிக் கிடந்தோம் நெஞ்சுக்குள்ளே
தமிழர் சொந்தம் நாம் என்னாளும்

ஓ.. நல்லூரின் விதியென்று
திரிந்தோமடி
தேரின் பின்னே
அலைந்தோமடி

கடலொன்று நடுவிலே
இள்ளை என்று கொல்வினம்
எங்கள் நாடும் இந்த நாடும்
ஒன்றுதான்

தமிழன் தமிழந்தான்


புது உடுப்புகள் கிடைக்குமா அக்கா?

நமது உறவெல்லாம் நம் நாட்டில்தான்
என்றும் நினைத்தோம் தவறாகத்தான்
இங்கும் உறவு உள்ளது
தமிழர் மனது பெரியது

அட உனக்கென்ன வந்த இடத்தில்
மருமகள் ஆகினாய்..

ஏய் புதிய பாலம் கண்ணில் தெரிகிறதே

எந்த கலங்கமும் இல்லை என்று
ஆகுதே தெருடி வாழ்வாயே

கள்ளி அடி கள்ளி உங்கள் கைகள்
இணையும் அந்தப்பொழுதில் எங்கள் வாழ்க்கை விரியும்
மேற்கே மறைந்தாலும் கிழக்கே உதிக்கும்
அந்த கதிரின் சுடராய் எங்கள் விடியல் தெரியும்
கனவுகள் எனது என நினைத்தேன்
இன்று நான் அறிந்தனன்
இருளின் கரம் விலகுமே
உங்கள் கனவும் நனவாகும்...


உயிர்ப்புடன் -



தினேஷ்மாயா 

0 Comments: