எது சிங்கார சென்னை ?

Monday, March 29, 2010







சில தினங்களுக்கு முன்னர் வரும் வழியில் செய்தித்தாளில் ஒரு செய்தியை படித்தேன்..
இன்னமும் 4 மாதங்களில் சென்னை சிங்கார சென்னையாக மாறிவிடும் என்று..
அதுவும் தமிழகத்தின் தற்போதைய துணை முதல்வர் அதை தெரிவித்ததாக படித்தேன்..

எது சிங்கார சென்னை..

  • இன்றும் வீடில்லாமல் கூவத்தின் அருகே வசிக்கின்றனர் மக்கள்.. 
  • குப்பைகள் கண்ட இடங்களில் வீசுகின்றனர் மக்கள்..
  • பேருந்துகள் எப்போதுமே கூட்டமாகத்தான் செல்கிறது..
  • ஒழுங்கான உள்கட்டமைப்பு இல்லை..
  • சட்டம் ஒழுங்கு மீறப்பட்டுத்தான் வருகிறது..
  • மக்கள் நிம்மதியாய் வாழ்வதாக தெரியவில்லை..
  • குடிநீர் வசதி சரியாக இல்லை..
  • சாலை வசதி பல இடங்களில் மோசமாக இருக்கிறது..
  • தெருக்களில் குப்பைத் தொட்டிகளை வைப்பதோடு சரி.. அதை அள்ளிச் செல்ல முறையான வாகனங்கள் இல்லை.. Germany-ல் இருந்து வாகனம் வாங்கினாலும் குப்பைகளை சாலையெங்கும் தூவியபடியேதான் செல்கிறது..

சொல்ல வேண்டுமென்றால் இப்படி இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்..சொல்வதை விடுத்து செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவோம்..
மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த முன்னேற்றத்தையும் கொண்டு வர முடியாது.. மக்களும் சேர்ந்து உதவ வேண்டும்..
நம் சென்னையை நாம் தான் சிங்கார சென்னையாக மாற்ற வேண்டும்.. அரசை மட்டுமே நம்பி கொண்டு சும்மா இருக்க வேண்டாமே..


நட்புடன் -

தினேஷ்மாயா 

1 Comments:

elamthenral said...

சொர்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா??