பணம் படுத்தும் பாடு...

Friday, March 19, 2010





ஏன் இந்த மனிதர்கள் பணத்திற்காக இப்படி அடித்துக் கொள்கிறார்கள்..
மனிதன்தானே பணத்தை படைத்தான்..
ஆனால் இன்றைய நிலையில் பணம்தான் மனிதனை ஆட்டி படைக்கிறது..
உறவுகளுக்கு நாம் தந்து வந்த முக்கியத்துவம் பணம் நம் வாழ்வில் வந்ததும் மறைந்து போயிற்று..
நல்வழியிலோ தீயவழியிலோ பணத்தை சேர்ப்பதிலேயே பெரும்பாலான மக்கள் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றனர்..
கல்வியையும் வியாபாரம் ஆக்கி விட்டார்கள்..
மருத்துவத்தையும் சேவையென்னும் பாதையிலிருந்து வியாபார பாதையில் மாற்றிவிட்டார்கள்..
அன்பு என்பது காணாமலேயே போய்விட்டது..
நன்றாக படிக்கும் ஏழை சிறுவனுக்கு பணம் இல்லை என்னும் காரணத்தால் மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு மறுக்கப் படுகிறது..
பணம் தந்தால்தான் இன்றைய அரசு அலுவலகங்களில் நமது வேலைகள் சீக்கிரம் நடைப்பெறுகிறது..
பணம் இருந்தால்தான் உறவுகளும் நம்முடன்..
பணம் இல்லையென்றால் உறவுகள் நம்மை திரும்பிகூட பார்ப்பதில்லை..
ஒரு சில நேரங்களில் காதலும்கூட பணத்தை பார்த்துவருவது வேதனையான
விஷயம்..
பணம் இருப்பவர்களிடம் அதிகமான நண்பர்கள் இருப்பார்கள்..
அது அவருக்கு தெரியாது வெறும் பணத்திற்காகவே அவர்கள் தன்னை சுற்றி இருக்கின்றனர் என்று..



இன்னும் இப்படி நீண்டுக் கொண்டிருக்கிறது இந்த பணப் பேய்களின் பட்டியல்..

”பணம் என்னடா பணம் பணம்..
குணம் தானடா நிரந்தரம்...”

நினைவிருக்கிறதா இந்த பாடல்.. இல்லையெனில் இனியாவது நினைவிருக்கட்டும்...

பணம் என்பது உற்று நோக்கினால் வெறும் காகிதம் மட்டுமே.. காகிதத்திற்கு தரும் மதிப்பும் மரியாதையும் இந்த பாவப்பட்ட மனிதனுக்கு கிடைப்பதில்லை..
பணம் சம்பாதிப்பதையே தன் வாழ்நாளின் குறிக்கோளாக வைத்திருக்கின்றனர் பலர் இங்கே..
மனிதர்களையும் மனித உணர்வுகளையும் கொஞ்சம் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்..
ஒரேயொரு எடுத்துக்காட்டு சொல்ல விரும்புகிறேன்..
நாம் இறந்துவிட்டால் நம் பணம் நம்மோடு வரப்போவதில்லை..
நம்மை இடுகாட்டிற்கு எடுத்து செல்லப்போவது மனிதர்கள்தான்..
நீ சேர்த்துவைத்த பணம் இல்லை..
வாழ்வில் நல்ல மனிதர்களை சம்பாதிக்க கற்றுக்கொள்..

அதிகமான மனிதர்களை தெரிந்திருப்பவன் அதிர்ஷ்டக்காரன் இல்லை..
நீ அறிந்திருப்பவர்களில் எத்தனைப்பேர் உன்னிடம் உண்மையாக இருக்கிறார்கள் என்பதே முக்கியம்..

வாழ்க்கையை கண் திறந்துப் பாருங்கள்.. பணம் என்னும் கோட்டையிலிருந்து வெளியே வாருங்கள்.. வாழ்வின் பயணத்தை தொடங்குங்கள் ஒரு புத்தம்புது
மனிதனாய்.....

வாழ்க மனிதநேயம்..

அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: