வாழ்க ஜனநாயகம்....

Monday, March 15, 2010





இன்றைய இந்தியாவின் நிலையைப் பார்க்கும்போது என்ன சொல்வதென்று தெரியவில்லை.. கோபமும் ஆத்திரமுமே வருகிறது..

1947
யாருக்காவது நினைவிருக்கிறதா.. நாம் இந்த வருடத்தில்தான் விடுதலை பெற்றோமாம்..
ஆனால் இந்தியாவில் வாழும் பலரைப் பார்த்தால் அவர்கட்கு விடுதலை இன்னமும் கிடைக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது..
ஒரு வேலை உணவிற்கு கூட தினமும் கஷ்டப்படும் மக்கள் இருக்கிறார்கள்..



வசிப்பிடம் ஏதும் இன்றி வாழும் மக்கள் ஏராளமாக உள்ளனர்.. பட்டினி சாவுகள் இன்னமும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்கதையாகவே இருக்கிறது..




குழந்தை தொழிலாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.. சென்னையில் பழைய தலைமைச் செயலகம் அருகில் ஒரு சிறுவன் ஷூ பாலிஷ் செய்து கொண்டிருந்தான்.. 14 வயது வரை இலவச கல்வி அளித்தும் அது இன்னமும் இவன் போன்ற ஏழைச் சிறுவர்களுக்கு எட்டா கனியாகவே இருந்து வருகிறதே..



வன்முறைகள் எல்லா திசைகளிலும் ஒரு பொழுதுபோக்காக மாறிவிட்டது..
எதற்க்கெடுத்தாலும் அரசின் உடமைகளை சேதம் செய்தால் அவர்களின் இலட்சியம் நிறைவேறிவிட்டதாக வன்முறையாளர்கள் நினைக்கிறா
ர்கள்..






இன்றைய அரசும் தங்கள் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றும் விதமாக இலவச வண்ணத்தொலைக்காட்சியை வழங்கி வருகிறது.. மக்களின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி அடைந்தால் மட்டுமே ஆடம்பர தேவைகளை நாம் செய்து தரலாம்.. எனக்கு தெரிந்த ஒரு மலை மேல் இருக்கும் ஊரில் மின்சார வசதியே இல்லை.. ஆனால் அங்கே இருக்கும் அனைத்து வீட்டிற்கும் இலவச தொலைக்காட்சி தந்திருக்கிறார்கள்.. இது அவர்களுக்கு எந்த விதத்திலும் உபயோகப்படப் போவதில்லை.. இதையெல்லாம் தாண்டி..
தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு ரேஷன் கார்டிற்கும் அரசு ஒரு கலர் டிவி தந்துக் கொண்டிருப்பதாக கேள்விப் பட்டேன்..
நினைத்தால் கொஞ்சம் அல்ல நிறைய சிரிப்புதான் வருகிறது..
ஆயிரக்கணக்கில் போலி ரேஷன் கார்டுகள் குவிந்து கிடக்கிறது இங்கே..
போலி ரேஷன் கார்டுகளுக்கும் சேர்த்துதானே அரசு டிவி தரப்போகிறது...

முதலில் மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளையும் அன்றாடம் சந்திக்கும் அவலங்களையும் தீர்க்க அரசு முன்வர வேண்டும்..




இந்த காட்சி அனைவருக்கும் பரியட்சயமானதுதான்.. நானும் பலமுறை நிற்ககூட இடமில்லாமல் இப்படி படியில் ஒற்றைக் காலில் தொங்கி கொண்டு சென்றிருக்கிறேன்.. இதற்கு ஒரு தீர்வே கிடையாதா.. அரசு அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டேதான் இருக்கிறது... இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் பேருந்து வசதி அதிகமாகவும் பயண கட்டணம் குறைவாகவும் இருப்பதாக... அதான் நீங்கள் பேருந்துகள் அதிகம் விடும் இலட்சனம் மேலே தெரிகிறதே.. இதனால் அவர்களின் உயிர் போனால் அரசு ஒன்றும் கண்டுக்கொள்வதில்லை.. காரணம் மட்டும் வாய் கிழிய பேசுவார்கள்..
இந்த பேருந்து இல்லையென்றால் அடுத்த பேருந்தில் வந்திருக்கலாமே என்று..
ஒரு பேருந்து வந்தால் அடுத்த பேருந்து எப்போது வரும் என்பது அந்த அரசிற்கே தெரியாத போது அப்பாவி மக்கள் என்ன செய்வார்கள்.. கிடைக்கும் பேருந்தில் தொங்கியபடியே செல்ல வேண்டியதுதான்.. சொகுசுப் பேருந்து என்பது வெறும் பெயரளவில் தான்.. மேலே நீங்கள் காணும் காட்சி ஒரு சொகுசுப் பேருந்தில்தான்! இந்த பிரச்சனைக்கு விரைவில் ஒரு தீர்வு வராதா..




தமிழகத்தில் பிச்சைக்காரர்களே இருக்கக்கூடாது என்பதற்காக தமிழக அரசு 1970களில் ஒரு அரசாணை பிறப்பித்ததாக ஒரு செய்தித்தாளில் படித்தேன்..
நீங்கள் ஒரு நாளில் நிச்சயம் 5 முதல் 10 பிச்சைக்காரர்களையாவது பார்த்துவிடுவீர்கள்.. நான் எங்கேயும் வெளியே போகப்போவதில்லை என்று சொல்கிறீர்களா.. உங்கள் வீடுதேடி வருவார்கள் யாசகர்கள்.. அவர்களை குற்றம் சொல்லவில்லை.. அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருந்து வருகிறதே.. தீர்வு யார்தான் தரப் போகிறார்.. 


{ ஒரு நாள் நான் கொண்டு வருவேன் இதுபோல் நம் இந்தியாவில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை.. }


மற்ற பிரச்சனைகளைப்பற்றி பிறகு அலசுவோம்...


அன்புடன் - 

தினேஷ்மாயா 

2 Comments:

Deepa said...

manithan avartham manathai ematri valvathal than intha etra thalvugal......poradinal nitsayanm sekiram solution/ nimmathiyana santhosamana vaivai avarkaluku nammal thara mudiyum anna...

தினேஷ்மாயா said...

naam thara vendiyathillai deepa.. manithan ovvoruvarum maarinal inimaiyana valvu thanagave vanthadaiyum...