இனி நான் வாக்களிப்பேன்

Sunday, September 29, 2013




   மேலே மேற்கோள் காட்டியிருக்கும் என் இரண்டு பதிவுகளிலும் இந்திய தேர்தல் முறைப்பற்றி என் கருத்துக்களை பதிந்திருந்தேன். சில தினங்களுக்கு முன்னர், மதிப்பிற்குரிய உச்சநீதி மன்றம் சரித்திர முக்கியம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை அளித்தது. அது - 

   தேர்தலில் போட்டியிடும் எவர்க்கும் வாக்களிக்க எனக்கு விருப்பமில்லை என்பதை வாக்களிக்கும் இயந்திரத்திலேயே வைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. ஒருவரின் தனிமை சுதந்திரத்தை மதிக்கும் விஷயம் இது. தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது எவர்க்கும் தெரியாமல் பாதுகாக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. இதுநாள்வரை பழக்கத்தில் இருந்த 49-0 மற்றும் 17-A படிவ முறையை மாற்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. என் மனதில் வெகுநாட்களாக இருந்துவந்த ஒரு விஷயத்தை இங்கே என் வலையில் சில வருடங்களுக்கு முன்னர் பதிந்தேன். அதற்கு ஒரு நல்ல விடிவுகாலம் கிடைத்திருக்கிறது.

இனிவரும் தேர்தலில் நிச்சயம் முதல் ஆளாய் நான் சென்று வாக்களிப்பேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: