ராஜா ராணி

Monday, September 30, 2013










      ராஜா ராணி திரைப்படம் ரொம்ப நல்லா இருக்கு. இன்றைய காலகட்டத்தில் காதலர்களும், புதிதாய் திருமணம் ஆனவர்களும், அனைத்து குடும்பங்களும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

  ஆர்யா, நயன்தாரா, சந்தானம் வழக்கம்போல் கலக்கியிருக்கிறார்கள். 
ஜெய் -ன் வெகுளித்தனமும் நஸ்ரியாவின் சுட்டித்தனமும் ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனாலும், நஸ்ரியாதான் இந்த படத்தில் என்னை அதிகம் கவர்ந்த பாத்திரம். இயக்குனருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். நல்ல முயற்சி. பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். பிண்ணனி இசை பலம். 

      படம் பார்க்கும்போதும் முடியும் போதும் சில காட்சிகளில் கண்கள் வேர்க்கிறது. பிரிந்த காதலை எண்ணி வாழ்க்கையை வீணாக்காமல் அடுத்த கட்டத்தை நோக்கி வாழ்க்கையை செலுத்த வேண்டும் என்கிற கருத்தை பதிவு செய்த படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

     வழக்கம்போல் - கனத்த மனத்துடன் -

* தினேஷ்மாயா *

இனி நான் வாக்களிப்பேன்

Sunday, September 29, 2013




   மேலே மேற்கோள் காட்டியிருக்கும் என் இரண்டு பதிவுகளிலும் இந்திய தேர்தல் முறைப்பற்றி என் கருத்துக்களை பதிந்திருந்தேன். சில தினங்களுக்கு முன்னர், மதிப்பிற்குரிய உச்சநீதி மன்றம் சரித்திர முக்கியம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை அளித்தது. அது - 

   தேர்தலில் போட்டியிடும் எவர்க்கும் வாக்களிக்க எனக்கு விருப்பமில்லை என்பதை வாக்களிக்கும் இயந்திரத்திலேயே வைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. ஒருவரின் தனிமை சுதந்திரத்தை மதிக்கும் விஷயம் இது. தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது எவர்க்கும் தெரியாமல் பாதுகாக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. இதுநாள்வரை பழக்கத்தில் இருந்த 49-0 மற்றும் 17-A படிவ முறையை மாற்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. என் மனதில் வெகுநாட்களாக இருந்துவந்த ஒரு விஷயத்தை இங்கே என் வலையில் சில வருடங்களுக்கு முன்னர் பதிந்தேன். அதற்கு ஒரு நல்ல விடிவுகாலம் கிடைத்திருக்கிறது.

இனிவரும் தேர்தலில் நிச்சயம் முதல் ஆளாய் நான் சென்று வாக்களிப்பேன்..

* தினேஷ்மாயா *

சக்தி கொடு

Saturday, September 28, 2013



நம் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்

சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
இறைவா இறைவா

தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே

தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே

தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
கொடுமை அழித்துவிட கொள்கை ஜெயித்து விட
சக்தி கொடு

நம் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு

வெள்ளத்தில் வீழ்ந்தவரை கரை ஏற்ற சக்தி கொடு
பள்ளத்தில் கிடப்பவரை மேடேற்ற சக்தி கோடு
தீமைக்கும் கொடுமைக்கும் தீ வைக்க சக்தி கொடு
வறுமைக்கு பிறந்தவரை வாழ்விக்க சக்தி கொடு
எரிமலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு
ஒரு வார்த்தை சொன்னாலே ஊர் மாற சக்தி கொடு

தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
இறைவா இறைவா

முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்
முன் வைத்த காலை நான் வைக்க மாட்டேன்
என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன் - வெறும்
ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்
கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன்
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்
இறைவா இறைவா

தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே

தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே

தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
கொடுமை அழித்துவிட கொள்கை ஜெயித்து விட
சக்தி கொடு

நம் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்

சக்தி கொடு !!

படம்: பாபா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: கார்த்திக்
வரிகள்: வைரமுத்து


இந்த பாடலில் சக்தி கொடு என்று கேட்பதுபோல எனக்கும் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் ஒரு புது சக்தி கிடைக்கிறது...

* தினேஷ்மாயா *

பொதுவானது



   காதல் என்னும் அன்பு அனைவர்க்கும் பொதுவானது.  அனைத்து உயிர்களுக்கும், உயிரற்றவைகள் அனைத்திற்கும் கூட அன்பு பொதுவான ஒன்று..

* தினேஷ்மாயா *

சொல்ல முடியுமா ?


இதில் யார் பெரியவர் யார் சிறியவர் என்று எவராவது சொல்ல முடியுமா ?

* தினேஷ்மாயா *

ஒரு முறை மட்டுமே


உண்மை காதல்

வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டுமே வரும் !!

* தினேஷ்மாயா *

அமைதி பூங்கா

Thursday, September 26, 2013


இவ்வுலகம் அமைதி பூங்காவாக மாறவேண்டும்..

* தினேஷ்மாயா *

வாழ்க்கை தத்துவம் !!

Wednesday, September 25, 2013


போட்டி போட்டு ஜெயிப்பவன் தான் இந்த உலகில் நிலைத்திருக்க முடியும் !!

இதானே வாழ்க்கை தத்துவம் !

நன்றி : இணையம்

* தினேஷ்மாயா *

லைட்டா ஒரு டீ !!


நன்றி : இணையம்

* தினேஷ்மாயா *

நீரின்றி அமையாது உலகு

Sunday, September 22, 2013


நீரின்றி அமையாது உலகு 

நாம் எங்குமே செல்வதில்லை
தாமாகவே செலுத்தப்படுகிறோம்
மிதக்கும் ஜடங்களைப் போல
இக்கணத்தில் மெதுவாக
பிரிதொரு நேரம் ஆக்ரோஷமாக
ஆனால் எப்போதுமே நீரின்
அமைது மற்றும் சீற்றத்தின்
கட்டுப்பாட்டில் !

- நன்றி : இணையம்

* தினேஷ்மாயா *

தண்ணீர் அஞ்சலி


நன்றி: http://kavitamilan.blogspot.in மற்றும் இணையம்

* தினேஷ்மாயா *

நிலையாமை


குறள்:

நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.

பொருள்:

நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை என்னும் செருக்கை உடையது இவ்வுலகம்.

குறள்: 336
அதிகாரம் : நிலையாமை

இந்த உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் மரணம் பொதுவானது. ஆனால் அதை அறியா மனிதர்கள் எல்லாம் நிலையானவை என்றும் தம் வாழ்வும் நிலையானது என்றும் கருதி பலருக்கு துன்பம் தரும் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், நேற்று இருந்தவன் இன்றில்லை என்பதை தினம் தினம் இந்த உலகம் நமக்கு உணர்த்துகிறது. இந்த உண்மையை நமக்கு மட்டுமின்றி ஆண்டாண்டு காலமாய் அனைவர்க்கும் உணர்த்தும் பெருமைக்குறியது இந்த உலகம். 

* தினேஷ்மாயா *

உண்மை ஞானம் தெளிந்தவர்


பேய் போல் திரிந்து,
பிணம்போல் கிடந்து,
இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி,
நரிபோல் உழன்று,
நன்மங்கையரைத் தாய்போல் கருதித்,
தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லி
சேய் போல் இருப்பர் கண்டீர்!
உண்மை ஞானம் தெளிந்தவரே!

- பட்டினத்தார்

பொருள்:

பேய்போல் திரிந்து : பிறர் கர்மத்தை போக்கும் பொருட்டு இரவு பகலாக திரிந்து,
பிணம்போல் கிடந்து : உறங்கினாலும் யோக நிலையில் இருந்தாலும் பிணம் போல் அசைவற்று,
இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி : யாராவது இடும் பிச்சையை நாய் போல் உண்டு,
நன்மங்கையரைத் தாய்போல் கருதி : நல்ல மங்கையரை தனது தாய் போல் நினைத்து,
தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லி : அடிமைபோல் அனைவருக்கும் தாழ்வாய் இருந்து,
சேய்போல் இருப்பர்கண்டீர் : குழந்தைபோல் இருப்பவர்களை கண்டீர்கள் என்றால்,
உண்மை ஞானம் தெளிந்தவரே : அவர்தான் உண்மையாக ஞானம் அடைந்து தெளிந்தவர் சித்தன் என்கிறார்


உண்மையான ஞானம் உடையவர் எவர் என்று பட்டினத்தார் சரியாக உரைத்திருக்கிறார். இன்று இருப்பதுபோல் போலியாக காவி உடையணிந்து திரிபவர்கள் அனைவரும் ஞானம் படைத்தவர் அல்லர். மேலே சொல்லப்பட்டிருக்கும் பாடலை பொருளுணர்ந்து படித்துப்பாருங்கள். உண்மையான ஞானம் உடையவர் எவர் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்..

* தினேஷ்மாயா *

இறப்புக்கு உத்தரவாதம்

Saturday, September 21, 2013


     இந்த சித்திரம் M.F.Hussain அவர்களால், போபால் விஷவாயு விபத்தின் நினைவாக வரையப்பட்டது. அது எத்தனையோ கோடிக்கு ஏலம் போகவிருப்பதாக நாளேடுகளில் படித்தேன். அந்த விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அவர்களின் வாழ்க்கைக்கு வழிவகுக்க எவரும் முன்வராத நிலையில் இந்த ஓவியம் கோடிக்கணக்கில் ஏலத்திற்கு போய் எவரோ ஒருவர் வீட்டிலோ அல்லது அருங்காட்சியகத்திலோ அலங்கார பொருளாய் பொக்கிஷமாய் இருக்கப்போகிறது. ஆனால் இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த விடியலும் வந்தபாடில்லை. 

  இந்த ஓவியமும் கோடிக்கணக்கான ஏலத்தொகையும் ஒருபக்கம் இருக்கட்டும் விடுங்கள். இன்னொரு முக்கியமான விஷயத்தைப் பற்றி ஆலோசிக்கவே இங்கே வந்தேன்.

        அணுமின் நிலையங்கள் மக்களின் உயிருக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை அதனால் பாதிப்படையும் மக்கள் மட்டுமே உணர்ந்திருக்கின்றனரே தவிர மற்றவர்களுக்கு அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வோ அக்கறையோ இல்லை. சமீபத்தில்தான் ஜப்பானில் சுனாமியின் போது அணு உலை ஒன்று விபத்துக்குள்ளாகி அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை நாம் அனைவரும் அறிவோம். தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ஜப்பான் நாட்டிலும் அணு உலை விபத்தை கட்டுப்படுத்தவோ தடுத்து நிறுத்தவோ அல்லது விபத்தின் பின்விளைவுகளை குறைக்கவோ வழிமுறைகள் இல்லை என்பது இதில் இருந்து தெளிவாக தெரிகிறது. 

      இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் நமது நாட்டில் அமைக்கப்படும் அணு உலைகளுக்கான உபகரணங்களில் இருந்து உதிரி பாகங்கள் வரை அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தாக வேண்டி இருக்கிறது. நமது நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டப்படி அணு உலையில், வேலை செய்வோரின் கவனக்குறைவு தவிர இந்த உபகரணங்கள் அல்லது இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களில் செயலிழப்பால் விபத்து ஏதும் நேர்ந்தால், விபத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு நஷ்டஈட்டை இந்த பாகங்களை உற்பத்தி செய்த நிறுவனங்கள் ஏற்க வேண்டும். ஆனால் இந்த சட்டத்திற்கு வெளிநாட்டு பணக்கார வர்த்தக முதலைகள் பெரிதும் எதிர்க்கின்றனர்.

      சரி விடுங்கள். நஷ்டஈடு என்றால் பெரியதொகையாக இருக்கும் அதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரும் பொறுப்பை அரசு தட்டிக்கழிக்கிறது என்று சொல்வதா இல்லை வெளிநாட்டு நிறுவனங்கள், பாகங்களை விற்பனை செய்வதுடன் எங்கள் வேலை முடிந்துவிட்டது என்று சொல்கிறார்களா என்று தெரியவில்லை.

  எனக்கு இருப்பது ஒரே கேள்விதான். அணு உலை ஒன்றை அமைக்கப்போகிறோம். எதிர்காலத்தில் விபத்து ஏற்படும், அந்த விபத்துக்கு யார் நஷ்டஈடு கொடுப்பது என்று ஆலோசனை செய்கிறீர்களே. விபத்து ஒன்று நடந்தால் என்று நீங்கள் சிந்திக்கும்போது, விபத்து ஒன்று நடக்க வாய்ப்பிருக்கிறது என்றுதானே அர்த்தம். அப்படி அணு உலையினால் விபத்து ஏற்பட்டால் நாம் இழக்கப்போவது விலைமதிக்க முடியாத மனித உயிர்கள். அதுமட்டுமின்றி விபத்தால் பாதிக்கப்படும் மக்களின் 5 தலைமுறைவரையிலும் இந்த பாதிப்பை நேரடியாக உணரமுடியும். அப்படியிருக்க இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் இந்த அணு உலை எதற்கு ?

      உலகிலேயே மிகப்பெரிய சூரிய சக்தி மின் நிலையத்தை ராஜஸ்தானில் தொடங்க அடிக்கல் நாட்டும் இந்த வேளையில் , கூடங்குளத்தில் மக்களின் கல்லறைகளுக்கும் அடிக்கல் நாட்டுவது, மக்களின் இறப்புக்கு உத்தரவாதம் தருவதுபோல்தான் எனக்கு தோன்றுகிறது.

* தினேஷ்மாயா *

தந்தை சொல்மிக்க

Friday, September 20, 2013


தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

இனியவை நாற்பது நூலில் ஏழாம் பாடலை கொஞ்சம் பாருங்கள்..


“அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே;
பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே;
தந்தையே ஆயினும், தான் அடங்கான் ஆகுமேல்,
கொண்டு அடையான் ஆகல் இனிது.” 

பொருள்:

பிராமணர்க்கு வேதம் ஓதுதல் இனிது. இல்லறத்தாருக்கு பற்றுபாசம் இனிது. படையுடையானுக்கு வீரம் இனிது. தந்தையே ஆனாலும் அவர் கூறும் தவறானவற்றைச் செய்யாமை இனிது.


இந்த கருத்தையும் நாம் நம் மனதில் கொஞ்சம் வைத்திருப்போமே ..

* தினேஷ்மாயா *





யாதனின் யாதனின்

Thursday, September 19, 2013



குறள்:

“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் இலன்.”


விளக்கம்:
எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.

- திருக்குறள்: 341
பால்: அறத்துப்பால்.
இயல்: துறவறவியல்.
அதிகாரம்: துறவு.


காதலை ஒருவன் விரும்பாமல் இருந்தானேயானால், காதலால் அவனுக்கு துன்பம் ஏதுமில்லை என்பதை இந்த குறளின் வாயிலாக 
அறிந்துக்கொண்டேன்.

* தினேஷ்மாயா *

எங்கள் கடமையல்ல


    தமிழை வளர்ப்பதும், வாழவைப்பதும் எங்கள் கடமையல்ல என்கின்றனர் இன்றைய தமிழ்நாட்டு மக்கள். முன்னொரு காலத்தில் தமிழகத்தில் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். இன்றோ, தமிழகத்தை தவிர மற்ற நாடுகளிலும், ஊர்களிலும் தமிழ் சங்கங்கள் இருக்கிறது தமிழை வளர்க்க. 

வந்தாரை வாழவைக்குமாம் தமிழகம். ஆனால், தமிழகத்தில் தமிழை வாழவைக்கத்தான் எவரும் இல்லை..

* தினேஷ்மாயா *

யாருக்குத்தான் கஷ்டமில்லை


     யாருக்குத்தான் கஷ்டமில்லை சொல்லுங்கள். எப்போதும் கஷ்டங்களால் சூழப்பட்டதுதான் நமது வாழ்க்கை. வருங்காலத்தில் இது நடந்தால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்று ஒரு இலக்கை வைத்துக்கொண்டு நம் மகிழ்ச்சியை நாம் எப்போதும் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறோம். தற்போது இருக்கும் சூழநிலைக்கேற்ப போதும் என்ற மனம் கொண்டு எப்போதும் மன நிறைவோடு இருக்க பழகிக்கொண்டவன் மட்டுமே இவ்வுலகில் என்றென்றும் மகிழ்ச்சியாய் இருப்பான்..

* தினேஷ்மாயா *

எதிர்பார்ப்பு


   இவ்வுலகில் பெரும்பாலும், எல்லோரும் நம்மிடையே எதையாச்சும் எதிர்பார்த்துதான் பழகுகின்றனர். நான் அப்படியில்லை, உன் நட்புக்காக அல்லது உன் அன்புக்காகத்தான் பழகுகிறேன் என்பர்கள்கூட நட்பையோ அன்பையோ எதிர்பார்க்கின்றனர் என்று வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது. 
   
   நம்மிடம் எவரும் எதையும் எதிர்பார்த்து பழக கூடாது என்று நாமும் எதிர்பார்க்கிறோம் தானே. இருந்தும் என்ன செய்ய, இதுதானே உலக நடைமுறை. 

* தினேஷ்மாயா *

மூடத்தனம்



நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்காமல், இறக்குமதியை அதிகப்படுத்த முயல்வதும், இறக்குமதிக்கு அதிக வரி விதிப்பதும், அது சந்தையில் அதிக விலையில் விற்கப்படுவதும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. சரியான பொருளாதார கொள்கைகளை கையாண்டாலே நாட்டை வளர்ச்சிப்பாதையில் இட்டு செல்லலாம். 

உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவதும், இறக்குமதியை குறைத்துக்கொள்வதும்தான் இன்றைய நம் பொருளாதார மந்த நிலைக்கு ஒரு தீர்வாக அமையும். வெறுமனே வரியை மக்கள் மீது திணிப்பது மூடத்தனம். 

* தினேஷ்மாயா *

எந்தன் காதல்


எந்தன் காதல் என்னவென்று

சொல்லாமல் ஏங்க ஏங்க 

அழுகை வந்தது..

எந்தன் சோகம் உன்னைத்தாக்கும்

என்றென்னும்போது வந்த

அழுகை நின்றது..

மனிதர் உணர்ந்து கொள்ள

இது மனித காதல் அல்ல..

அதையும் தாண்டி புனிதமானது !!

- குணா - திரைப்பட பாடல்..

பாடலைக்காட்டிலும் சில பாடலின் வரிகள் என்னை அதிகம் கவர்ந்திழுக்கிறது. அப்படியான வரிகளை எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இங்கே பதிகிறேன்.

* தினேஷ்மாயா *

எதிர்பாராதே



எதிர்பார்க்காமல் அன்பையும் பக்தியையும் வெளிப்படுத்து...

* தினேஷ்மாயா *

விதை



நண்பர் ஒருவர் வீட்டுக்கு சென்றேன். அவர் பையன் ஆறாவது படிக்கிறான். CBSE பள்ளி அது. எப்போதும் எனக்கு அந்த பள்ளியின் மீது ஒரு நன்மதிப்பு உண்டு. குழந்தைகளை மாணாக்கர்களாக உருவாக்காமல் நல்ல குடிமகனாக உருவாக்கும் பொறுப்பை அவர்கள் கையில் எடுத்துள்ளனர் என்று நினைத்து பெருமிதம் கொண்டேன்.

தற்போது தமிழக அரசின் சமச்சீர் கல்வியும் அதற்கு நிகராக வந்துவிட்டது மனதிற்கு மிகவும் ஆறுதலாய் இருக்கிறது. 

இன்று அச்சிறுவனிடம் உரையாடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் வருங்கால இந்தியா எந்த பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது. நாம் படிக்கும் போது இருந்த சூழல்தான் இன்றும் இருக்கிறது என்றாலும், அந்த சூழலைக் காட்டிலும் இன்றைய சூழல் பெரிதும் மாறியிருப்பதைக் கண்டேன்.

அப்படியென்ன மாற்றத்தைக் கண்டேன் என்கிறீர்களா. அது வெறுமனே வார்த்தையில் சொல்லிவிட முடியாது. 

அவனது தாய்மொழி தமிழ். ஆனால், இதுநாள் வரையில் அவனுக்கு தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாது. பேச மட்டும் தெரியும். இதற்கும், அவனது தாய்மொழி தமிழ். அவன் வசிப்பதோ சிங்கார சென்னையில்தா வேறு மாநிலத்திலும் அல்ல.

குழந்தைகளுக்கு சிந்திக்கும்படியான சூழலை நமது பள்ளிக்கூடம் உருவாக்குகிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். எந்த சந்தேகமும் எழாமலே குழந்தைகள், வெறுமனே ஆசிரியர் சொல்வதை கேட்டுவிட்டு காலம் தள்ளுகின்றனர். அப்படியே கேள்வி எழுந்தாலும் அதை ஒருசில ஆசிரியர்கள்தவிர பெரும்பாலானோர் மாணவர்களின் சந்தேகங்களை சட்டை செய்வதே இல்லை.

சில நாட்களுக்கு முன்னர், அவன் என்னிடம் சில கணக்கு சந்தேகங்களை கேட்டான். நானும் அவனுக்கு எளிதாக புரியும் வண்ணம் எடுத்துச்சொல்லி விளக்கினேன். அவனது வீட்டுப்பாடத்திற்கும் அந்த எளிய நடைமுறையையே பயன்படுத்தி கணக்குப்போட சொன்னேன். இன்று மீண்டும் அவனைப்பார்க்கும்போது அவன் சொன்னான், அன்று நீங்கள் சொல்லிக்குடுத்த கணக்கு வழிமுறையை என் ஆசிரியரிடம் காட்டினேன். அவர்கள் என் தலையில் கொட்டி, நான் உனக்கு இந்த வழிமுறையை சொல்லித்தரவே இல்லையே என்று அவன் வீட்டுப்பாடம் முழுவதையும் அழித்துவிட்டு மீண்டும் எழுதிவர சொன்னார்களாம். எனக்கு அந்த ஆசிரியர் மீது பரிதாபம்தான் வந்தது. 

ஒரு மாணவனுக்கு புரியும் வண்ணம் பாடம் நடத்தவேண்டும், ஆனால் அதை செய்யாமல் புத்தகத்தில் இருப்பதையே நடத்திவிட்டு செல்வதற்கு எதற்கு ஆசிரியர் எதற்கு பள்ளிக்கூடம் ?

பாடப்புத்தகம் இருந்தால் போதுமே, நானே எல்லா பாடங்களையும் எடுத்துவிடுவேனே. பள்ளிக்கு பிள்ளைகளை பாடம் கற்க மட்டும் அனுப்பவில்லை. ஆனால் பல பள்ளிகள் மாணவர்களுக்கு வெறும் பாடத்தை மட்டுமே திணிக்கின்றனர். விளையாட்டு, இதர திறமைகளை வளர்ப்பதில் எவரும் ஆர்வம் காட்டுவதில்லை. 

இன்னும் ஒரு விஷயம் அவனிடம் பேசும்போது எனக்கு அதிர்ச்சியளித்தது. உனக்கு வயசு என்ன என்றேன். 11 என்றான். ஆறாவது படிக்கும் அவன் ஒரு நாளுக்கு 3 முறை சாப்பிடுவதாக சொன்னான். பார்ப்பதற்கு சராசரி உடம்புடன் இருந்தான். உன் வயதிற்கு நீ ஒரு நாளுக்கு 5 முறை சாப்பிட வேண்டும். நன்றாக ஓடி ஆடி விளையாட வேண்டும். மற்ற திறமைகளை எல்லாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னேன்.

அவன் சொன்னான், நான் அதிகம் சாப்பிட்டால் குண்டாக ஆகிடுவேன். அப்புறம் எல்லோரும் என்னை குண்டு என்று கேலிசெய்வார்கள் என்றான். மற்றவர் கேலி செய்வார்கள் என்பதற்காக இவ்ன் உணவை பெரும்பாலும் தவிர்க்கிறான் என்ற உண்மை என்னை அதிகம் பாதித்தது. பள்ளியில் மாணவர்களுக்கு தன் உடல்நலத்தைப்பற்றி ஆசிரியர்கள் கண்டிப்பாக சொல்லித்தர வேண்டும். பாடப்புத்தகத்தில் இருப்பதை மட்டுமே நடத்திவிட்டு போவது அல்ல ஒரு ஆசிரியரின் கடமை. அதற்கும் மேல் பல கடமைகள் உள்ளது. 

பள்ளியில் விளையாட்டு வகுப்பு நேரத்திலும்கூட விளையாட விடாமல் படிக்க சொல்கிறார்களாம். 24 மணிநேரமும் படிப்பு படிப்பு என்றிருந்தால் மாணவர்களுக்கு படிப்பு மீது ஒரு வெறுப்புணர்ச்சிதான் வரும். 

மாற்றத்திற்கான விதையை மாணவர்களின் மனதில் விதைப்பது ஆசிரியரின் கடமை. அது நம் சமூகத்தின் கடமையும் கூட..

* தினேஷ்மாயா *

அன்பான வார்த்தைகள்


தேடித்தான்

பெற

வேண்டியிருக்கிறது

அன்பான

வார்த்தைகளை

கூட !!

- நன்றி : இணையம்

* தினேஷ்மாயா *

காதல் காயங்களே

Wednesday, September 18, 2013


காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே
பெண்கள் உள்ளங்கள் நிலைமாறி கிளைமாறுமே
ஆண்கள் உள்ளம் கண்ணீரோடு அலைபாயுமே
காதல் பொய்யானது
வாழ்க்கை மெய்யானது
ஆனது ஆகட்டும் கோப்பை ஏந்துங்களே..

காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே

வானம் அது ஓன்று தான்
வானில் நிலவொன்று தான்
காதல் கலைந்தாலும் மனதில்
என் நினைவோன்றுதான்

வானம் அது ஓன்று தான்
வானில் நிலவொன்று தான்
காதல் கலைந்தாலும் மனதில்
என் நினைவோன்றுதான்

தாளம் இல்லாமலே பாடல் நான் சொல்கிறேன்
தெய்வம் இல்லாமலே பூஜை நான் செய்கிறேன்
உண்மை காதல் என்றும் கட்சி மாறி போகாதடா
காதலின் வேதனை என்றும் தீராதடா..

காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே

பெண்மை பொல்லாதது நேர்மை இல்லாதது
உண்மை தெரியாத மனிதா உன் மனம் ஏங்குது

பெண்மை பொல்லாதது நேர்மை இல்லாதது
உண்மை தெரியாத மனிதா உன் மனம் ஏங்குது

உண்மை காதல் என்று இங்கு ஒன்றும் இல்லை
நீயும் காதல் கொள்ள வேறு பெண்ணா இல்லை

நீயும் வாழும் போது வாழ வேண்டும் வழியா இல்லை
இன்னும் நீ ஊத்தடா பாட்டில் சுதியே இல்லை..
இன்னும் நீ ஊத்தடா பாட்டில் சுதியே இல்லை..

காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே
பெண்கள் உள்ளங்கள் நிலைமாறி கிளைமாறுமே
ஆண்கள் உள்ளம் கண்ணீரோடு அலைபாயுமே
காதல் பொய்யானது
வாழ்க்கை மெய்யானது
ஆனது ஆகட்டும் கோப்பை ஏந்துங்களே..

காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே

திரைப்படம் : ஆண்களை நம்பாதே
பாடகர்கள் : K.J. யேசுதாஸ்
இசை : இளையராஜா

   மலை மலை என்னும் திரைப்படத்தில் இருந்து ஒரு நகைச்சுவை காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அந்த காட்சியில் இந்த பாடலை கேட்டேன். இதற்கு முன்னர் இந்த பாடலை கேட்டேனா என்று தெரியவில்லை. அந்த காட்சியில் ஓரிரு வார்த்தைகள்தான் ஒலித்தது. பின்னர் இணையத்தில் தேடி பதிவிறக்கம் செய்து கேட்டேன். இங்கே பதியும் அளவிற்கு மனதில் பதிந்துவிட்டது இந்த பாடல்.

* தினேஷ்மாயா *

காதல் என்பது பொது உடமை




காதல் என்பது பொது உடமை
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை

காதல் என்பது பொது உடமை
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை

அப்பனும் ஆத்தாளும் சேராம போனா
 நீயும்தான் பொறக்கமுடியுமா
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா

காதல் என்பது பொது உடமை
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை

அப்பனும் ஆத்தாளும் சேராம போனா
 நீயும்தான் பொறக்கமுடியுமா
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா

ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு
அந்த வழி போகாத ஆள் இங்கு யாரு
புத்தனும் போன பாதைதான்
பொம்பள என்னும் போதைதான்
அந்த வேகம் வந்திடும் போது
ஒரு வேலி என்பது ஏது
இது நாளும் நாளும் தாகம்தான்
உண்மைய எண்ணி பாரடா
இது இல்லாட்டா உலகம் இங்கே ஏதடா

காதல் என்பது பொது உடமை
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை

அப்பனும் ஆத்தாளும் சேராம போனா
 நீயும்தான் பொறக்கமுடியுமா
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா

ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும்
உள்ளுக்குள்ள ஏதேதோ சங்கீதம் பாடும்
ஒன்னாக கலந்த உறவுதான்
எந்நாளும் இன்பம் வரவுதான்
இது காதல் என்கிற கனவு
தினம் காண எண்ணுர மனசு
இத சேர துடிக்கும் வயசுதான்
வாழ்க்கையே கொஞ்சக் காலம்தான் இந்த வாழ்க்கைல
வாலிபம் கொஞ்ச நேரம்தான்

காதல் என்பது பொது உடமை
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை

அப்பனும் ஆத்தாளும் சேராம போனா
நீயும்தான் பொறக்கமுடியுமா
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா

நீயும்தான் பொறக்கமுடியுமா
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா

படம் : பாலைவன ரோஜாக்கள்
பாடியவர் : இளையராஜா
இசை : இளையராஜா

இப்பாடலின் முதல் இரண்டு வரிகள்தான் என்னை அழவைத்த வரிகள். என் கண்ணீரை இங்கே பதிந்தபிறகுதான் கண்ணீரும் முற்றுபெற்றது..

* தினேஷ்மாயா *

மயக்கம் என்ன ?

Saturday, September 14, 2013


உன்னைக் கண்டபின்

எனக்கு

மயக்கம் என்ன ?

* தினேஷ்மாயா *

வாழ்க்கை எனப்படுவது



வாழ்க்கை எனப்படுவது கருவறையில் ஆரம்பித்து கல்லறையில் முடிவதே !!

வாழ்க்கை என்றால் என்ன, வாழ்க்கையின் உண்மையை அறிவது எப்படி என்றெல்லாம் பெரிதாய் யோசிக்க வேண்டியதில்லை.

எல்லோரும் ஒருநாள் மீளா உறக்கத்துக்கு செல்லத்தான் போகிறோம். அதுவரை உங்களால் எவ்வளவு ஓட முடியுமோ ஒடிக்கொள்ளுங்கள்...

* தினேஷ்மாயா *

வலிக்கிறதடி

Friday, September 13, 2013



வலியில் எத்தனை வகை இருக்கிறதென்று எனக்கு தெரியாது..

ஆனால் உன் பிரிவு அனைத்து வகையான வலிகளையும் எனக்கு தந்துவிட்டது..

உன் பிரிவு - என் உயிர் வரை வலிக்கிறதடி..

* தினேஷ்மாயா *

எங்கே இருக்கிறாயடி


எங்கே இருக்கிறாயடி ?

எப்படி இருக்கிறாய் ??

கண்ணீருடன் ...

* தினேஷ்மாயா *

OBJECTS IN MIRROR


OBJECTS IN MIRROR ARE CLOSER
THAN THEY APPEAR..

இந்த வாசகத்தை நாம் அனைவரும் வண்டி ஓட்டும்போது வண்டியின் கண்ணாடியில் பார்த்திருப்போம்.

பின்னால் வரும் வாகனங்களை பார்க்க உதவும் இந்த கண்ணாடியில் எழுதப்பட்டிருக்கும் இந்த வாசகம் நம் வாழ்க்கையையும் நன்றாக எடுத்து காட்டுகிறது.

பின்னால் பார்ப்பது என்பது இறந்தகாலத்தை குறிக்கும். முடிந்த விஷயங்களைப்பற்றி சிந்தித்துக்கொண்டே இருந்தால் அது எப்போதும் உங்கள் அருகிலேயே அதாவது உங்கள் நினைப்பிலேயே இருக்கும்.

முன்னால் பார்த்து ஓட்ட வேண்டிய வண்டியை வெறுமனே பின்னால் மட்டும் பார்த்துக்கொண்டே ஓட்டினால் விபத்துதான் ஏற்படும்.

அதுபோல, வாழ்க்கையின் நிகழ்காலம் சரிவர இயங்கவேண்டுமானால், நிகழ்காலத்தைப் பற்றிய கசப்பான நினைவுகளை விடுத்து இன்றைய நாளுக்கு திரும்புங்கள்..

நிமிர்ந்து நடைப்போடுங்கள்.. வாழ்க்கைக்கான பாதை உங்களுக்கு முன்னரே விரிந்து கிடக்கிறது.

* தினேஷ்மாயா *

காற்றாடி


காதலை காற்றாடியைப்போல கையாண்டால் எவர்க்கும் பிரச்சனை இல்லை.

      காற்றடியின் நூல் எப்போதும் நம் கையில்தான் இருக்கும். ஆனால், நிலைத்தடுமாறி, காற்றாடி திசை மாறி செல்லும்போதோ அல்லது நம்மால் அதை கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை என்கிற நிலை வரும்போது காற்றாடியின் நூலை பிய்த்து விடுவதுதான் காற்றாடிக்கும் நல்லது, நமக்கும் நல்லது. இது பலருக்கு நெருடலாக தோன்றும். ஆனால், இந்த நிலையை கடந்து வந்தவர்களுக்கு புரியும் இதுதான் சிறந்த முடிவு என்று..

* தினேஷ்மாயா *

மிர்தாதின் புத்தகம்


    சமீபத்தில் இப்புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். நண்பர் ஒருவரிடமிருந்து இப்புத்தகத்தை வாங்கிப்படித்தேன். இன்னும் முழுதும் படித்து முடிக்க நேரமில்லை. ஆனாலும், படித்த வரையில் என் மனதை வெகுவாக ஈர்த்தது. ஓஷோ அவர்கள் தன் வாழ்க்கையில் பெரிதும் போற்றிய புத்தகம் இது. இயன்றால் புத்தகம் வாசக்கும் நண்பர்கள் இப்புத்தகத்தை ஒருமுறை வாசித்துப்பாருங்கள்.

* தினேஷ்மாயா *

அதன்போக்கில்..



விஷயங்களைப் பற்றி பெரிதும்

கவலைப்பட வேண்டாம்...

அதை அதன் போக்கில் விட்டு விடுங்கள்..

* தினேஷ்மாயா *

எல்லாம் கடந்து போகுமடா



எல்லாம் கடந்து போகுமடா
இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா

எல்லாம் கடந்து போகுமடா
இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா

தடைகள் ஆயிரம் வந்தாலும்
நடை தளராமல் முன்னே சென்றிடுவோம்
ஹோ ஹோ..

செய்யும் தொழிலே தெய்வம் என்போம்
நித்தம் வேர்வை தீர உழைத்திடுவோம்
சோம்பலின்றி வேலையை செய்திடுவோம்
உழைத்திடு தம்பி என உரக்கச் சொல்வோம்
தம்பி உரக்கச் சொல்வோம்
தம்பி உரக்கச் சொல்வோம்

உழைப்பில் கொஞ்சம் மதி வேண்டும்
மனிதரை மதிக்கும் குணம் வேண்டும்
தோல்வியை எண்ணி அச்சமில்லை என்றால்
வெற்றி நிச்சயம் உனக்கு வெற்றி நிச்சயம்
தம்பி வெற்றி நிச்சயம்

எல்லாம் கடந்து போகுமடா
இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா

இரவும் பகலும் இல்லையென்றால்
ஒரு நாளிங்கு முடிந்திடுமா
நிலவை கையால் மூடிவிட்டால் அதன்
ஒளி தான் குறைந்திடுமா

வாழ்க்கை ஒரு வட்டம்
கேள்வி கேட்பதொரு குற்றம்
இதை அறிந்துவிட்டால் புவி தாங்காதடா
கண் தூங்கதடா தம்பி

எல்லாம் கடந்து போகுமடா
இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா

தடைகள் ஆயிரம் வந்தாலும்
நடை தளராமல் முன்னே சென்றிடுவோம்

எல்லாம் கடந்து போகுமடா
இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா
ஹோ....

படம்: சூது கவ்வும்
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடல்: RR
பாடியவர்: கோவை ஜலீல்

* தினேஷ்மாயா *

நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே




அப்பாக்களை பிரியா மகள்கள், அதிர்ஷ்டசாலிகள். 
மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள். 
ஆனால், அப்படியெல்லாம் தந்துவிட, 
வாழ்க்கை ஒன்றும் 
தோழன் இல்லை.

நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய 
பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய 
மென்சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்
அடி என் கண்ணின் இரு கருவிழிகள்
உன் முகத்தைத் தேடுதடி
கண்ணீர்த்துளிகள் காட்சியை மறைக்குதடி
என் காட்டில் ஒரு மழை வந்தது
மகரந்த ஈரங்கள் காயும் முன்னே
இடிமின்னல் விழுந்து காடே எரிந்ததடி

நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய 
பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய 
மென்சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்

அலைந்திடும் மேகம் 
அதைப் போல இந்த வாழ்க்கையே
காற்றின் வழியில் போகின்றோம்
கலைந்திடும் கோலம் 
என்றபோதிலும் அதிகாலையில்
வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்
உயிரே உன்னைப் பிரிந்தேன்
உடனே நானும் இறந்தேன்
உடல் நான் அங்கு வாழும் நீதானே 
எந்தன் உயிரே

நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய 
பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய 
மென்சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்

மலர் ஒன்று வீழ்ந்தால் 
அதை ஏந்த பலர் ஓடுவார்
இலைகள் வீழ்ந்தால் சருகாகும்
வறியவன் வாழ்க்கை 
இலை போல என்றபோதிலும்
சருகுகள் ஒரு நாள் உரமாகும்
உயிரே உன்னைப் பிரிந்தேன்
உடனே நானும் இறந்தேன்
உடல் நான் அங்கு வாழும் நீதானே 
எந்தன் உயிரே

நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய 
பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய 
மென்சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்

படம்: தங்க மீன்கள்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: ராகுல் நம்பியார்

* தினேஷ்மாயா *

அப்பாக்களுக்கும் பிரிந்து தவிக்கிற மகள்களுக்கும்

Sunday, September 08, 2013



* அப்பாக்களும் பிள்ளைகளும் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிற ஒரே இடம், பள்ளிக்கூடம் மட்டும்தான்.

* இறந்தபின்னும் அப்பாக்கள் கதாநாயகனாய் வாழ்வது, மகள்களின் மனதில் மட்டும்தான்.

* மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும், முத்தம், காமத்தில் சேர்ந்ததில்லை என்று.

* அப்பாக்களை பிரியா மகள்கள், அதிர்ஷ்டசாலிகள். மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள். ஆனால், அப்படியெல்லாம் தந்துவிட, வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை.

* மகள்கள் கேட்பவற்றை முடிந்தவரை முடியாது என்று சொல்லிவிடக்கூடாது என்கிற வாழ்க்கையைத்தான் அப்பாக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்.

* பொருள்தேடி பணம்தேடி மகள்களை எல்லாம் விட்டுவிட்டு வெகுதூரத்தில் செவித்துக்கொண்டிருக்கிற அனைத்து அப்பாக்களுக்கும் பிரிந்து தவிக்கிற மகள்களுக்கும் ...

நேற்றிரவு தங்கமீன்கள் படத்தைப்பார்த்தேன். படத்தைப்பற்றி பதிய விரும்பினேன். ஊருக்கு சென்றுக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும் அந்த அவசரத்தில்கூட இந்தப்படத்தின் TRAILER-ல் வந்த சில வசனங்களை பதிய விரும்பினேன். திரைப்படத்தைப்பற்றிய என் பதிவுகளை ஊரில் இருந்து வந்ததும் பதிகிறேன்.

நன்றி..

* தினேஷ்மாயா *

அன்புடன் வரவேற்கிறது

Saturday, September 07, 2013




   மூன்று நாட்கள் விடுமுறை. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிடைக்கும் விடுமுறையில் என் நண்பனின் திருமணத்துக்காக நாகர்கோவில் செல்லவிருக்கிறேன். நாகர்கோவில் சந்திப்பு என்னை அன்புடன் வரவேற்கிறது. திருமணத்திற்கு சென்றுவிட்டு விழாவை சிறப்பித்துவிட்டு வருகிறேன். விரைவில் சந்திப்போம்..

* தினேஷ்மாயா *

வருத்தப்படாத வாலிபர் சங்கம்




   ரொம்ப நாள் கழிச்சு இரவு பத்துமணி காட்சியில் நண்பர்களுடன் இன்று ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் பார்த்துவிட்டு வந்தேன். எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு. படத்தில் கதை அது இது எதுனு எதையும் எதிர்பார்க்காம படத்தின் போக்கிலேயே பயணித்தேன். படம் பார்த்த 3 மணி நேரமும் விசில் அடிச்சு, ஆட்டம் போட்டு, கத்தி கும்மாளம் போட்டு நல்லா படம் பாத்துட்டு வந்தோம்.  படத்தைப்பற்றி அதிகம் எழுத இங்கே எதுவும் இல்லாட்டியும், இந்த படம் பார்க்கும்போது எனக்கு சில வயசு குறைஞ்சு இன்னும் சின்னப்பையனாகி படத்தை ரசிச்சதை நானே உணர்ந்தேன். அதனால்தான் இந்த படத்தைப்பற்றி படம் பார்த்துட்டு வீடு வந்ததும் இங்கே பதிய விரும்பினேன். சரி. தூங்கும் நேரமாச்சு.. நாளைக்கு என்ன நடந்தா என்ன சொல்லுங்க. நாமதான் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் ஒரு அங்கம் ஆகியாச்சே. நான் தூங்குறேன்பா.. 

இரவு வணக்கம் :-)

பி.கு.: இனிமே எல்லாம் அப்படித்தான் !! ஆஹ்!!

* தினேஷ்மாயா *

கடவுள் இருக்கானா இல்லையா ?

Thursday, September 05, 2013


கடவுள் இருக்கானா ? இல்லையா ?

இந்த கேள்வியை மனிதன் தன் வாழ்நாளில் ஒருமுறையாச்சும் கேட்கும் சூழ்நிலை வரும்.. அந்த சூழ்நிலை மிகவும் கொடியதாகவே நிச்சயம் இருக்கும். ஆனால் அந்த சூழ்நிலையை தன் சுய முயற்சியால் தாண்டி வருபவன் கட்டாயம் வாழ்க்கையை வென்றவனாகத்தான் இருப்பான்..

* தினேஷ்மாயா *

மக்கள்தொகை



உலக மக்கள்தொகை 700 கோடி !!

உலகம் எந்த பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது என்று ஒரு சிறிய பார்வை ..

மக்கள்தொகை அதிகமானால், அவர்களுக்கு உறைவிடமும் உணவும் கொடுத்தாக வேண்டும். ஆனால், இந்த உலகுக்கே உணவு கொடுப்பது தாவரங்கள்தான்.

ஆனால், மக்களுக்கு உறைவிடம் கொடுக்க அந்த தாவரங்களை அழித்துவிட்டுதான் இடம் அமைத்துதர வேண்டும். அப்படியானால் அனைவருக்கும் உணவுக்கு எங்கு செல்ல !!??

இன்று யோசிக்காமல் செய்யும் பல செயல்கள் நாளை நம்மை வருத்தப்பட செய்யும் !!

* தினேஷ்மாயா *

யார் கண் பட்டு


நம் இருவர் கண் பட்டு

வந்த நம் காதல்

இன்று யார் கண் பட்டு

பிரிந்ததோ ?

- நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

பிரணவ மந்திரம்


* தினேஷ்மாயா *


ஏற்றுக்கொள்


   இந்த உலகம் எப்படி இருக்கிறதோ, அதை அப்படியே ஏற்றுக்கொள். 

மாற்றம் வருகிறதா நீயும் மாறு..

போர் வருகிறதா போரிடு..

ஆனால், எதையும் செய்யும் முன்னர் ஒரு முறை உன் மனதை கேள். உன் மனம் சரி என்று சொல்வதை செய். மற்றவர் செய்கிறார்களே என்பதற்காக நீயும் சென்று குழியில் விழாதே. சிந்தித்து செயல்படு.. உலகை இயற்கையின் கையில் விட்டுவிடு. இயற்கையில் வழிகாட்டுதலில் வாழ்ந்திடு..

* தினேஷ்மாயா *

எனக்குள் ஒரு சாத்தான்


    எனக்குள் ஒரு சாத்தான் இருக்கிறது. எனக்குள் மட்டுமல்ல அனைவருக்குள்ளும் நிச்சயம் ஒரு சாத்தான் இருந்தேதீரும். பல நேரங்களில் தூங்கியே கிடக்கும் அது எப்போதாவது சில நேரங்களில் மட்டும் விழித்துக்கொள்கிறது. அது எப்போது விழிக்கும் என்று நமக்கும் தெரியாது அந்த சாத்தானுக்கும் தெரியாது. நமக்குள் ஒரு சாத்தான் இருக்கிறது என்கிற உண்மையை வெகுசுலாமாக எவராலும் உணர்ந்துவிட முடியாது. அதை உணர்ந்தவரும் அதை கட்டுப்படுத்த முடியாது.

          சரி, இந்த சாத்தானை என்னத்தான் செய்வது என்று கேட்கிறீர்களா. இதற்கு ஒரே பதில் - அதை அப்படியே அதன்போக்கில் விட்டுவிடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. இல்லையேல் அந்த சாத்தான் உங்களுக்கு எதிராகவே திரும்பவும் செய்யும். இயன்றவரை அந்த சாத்தானை விழிக்கவைக்காமல் இருக்க உங்கள் சிந்தனைகளை நல்ல விஷயங்களை நோக்கி செலுத்துங்கள். அதுவே போதும். 

               மனிதனுக்கு எப்படி இரண்டு கைகள், இரண்டு கால்கள் இப்படி எல்லாவற்றையும் ஆண்டவன் படைத்திருக்கிறானோ, அதுப்போலவே நமக்குள்ளும் ஒரு சாத்தானை வைத்து படைத்திருக்கிறான் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை..

* தினேஷ்மாயா *