கூகுள்..

Saturday, October 08, 2011



கூகுள்..
கூகள்..
கூக்ளி..
இன்னும் பலவிதமாய் மக்கள் அழைக்கின்றனர். ஆனால் அதை அர்த்தம் ஒன்றேதான். இந்த தேடுதளம் மக்கள் மத்தியில் ரொம்பவே பரிச்சயம். இதற்கு முன் பல தேடுதளங்கள் இருந்தாலும் இதுதான் இன்றைக்கும் இனி என்றைக்கும் முதலில் இருக்கும். உங்களுக்கு எது வேண்டுமானாலும் அது இங்கே கூகுளில் கிடைக்கும். இணையம் மக்கள் மத்தியில் இவ்வளவு பிரபலம் அடைந்திருக்க காரணம் என்ன என்று கேட்டால் அதற்கு கூகுள்தான் முக்கிய காரணம் என்று அடித்து சொல்வேன். புள்ளி விவரம் எல்லாம் எனக்கு சரியாக தெரியாது. ஆனால் இணையதளம் வரும் அனைவரும் கண்டிப்பாக ஒருமுறையாவது கூகுளை வந்து பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அனைவரின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டது நம் கூகுள்…..

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: