விக்கிபீடியா

Saturday, October 08, 2011




விக்கிபீடியா    
     உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனே தெரிந்துக்கொள்ள விக்கிபீடியா மிகவும் உதவியாய் இருக்கிறது. இதன் சிறப்பம்சமே நம்மைப்போன்றோர் யார் வேண்டுமானாலும் ஒரு பக்கத்தை உருவாக்கலாம் அல்லது ஏற்கெனவே இருக்கும் பக்கத்தில் இருக்கும் பிழைகளை திருத்தி அமைக்க முடியும். இப்போதெல்லாம் நம்மில் பலர் பல உலக  விஷயங்களை தெரிந்து வைத்திருக்க காரணம் இந்த விக்கிபீடியாதான். நான் என் படிப்பிற்கு அதிகம் பயன்படுத்துவது விக்கிபீடியாதான். இதுபோல பல வலைத்தளங்கள் இருந்தாலும் இதுதான் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம். இதற்கு இதன் தனித்துவமும் இதன் தகவலில் இருக்கும் உண்மைத்துவமும்தான் மிக முக்கியக் காரணம். இப்போதெல்லாம் கல்லூரியில் பேராசிரியர் சொல்வது தவறு என்று நம் மாணவர்கள் அவரிடம் வாதிடுகின்றனர். உடனே அவர் நீ சொல்வது தவறு நான் சொல்வதுதான் சரி என்று சொல்லி, உனக்கு யார் இப்படி சொன்னார்கள் என்று கேட்டால், உடனே நம் மாணவர் நான் விக்கிபீடியாவில் படித்தேன் சார் என்று சொன்னால் போதும். அவர் அப்படியே அமைதியாகிவிடுகிறார். அந்த அளவிற்கு விக்கிபீடியா மக்கள் மத்தியில் குறிப்பாக நம் மாணவர்கள் மத்தியில் ஒரு நல்ல மாற்றத்தையும் தெளிவையும் கொண்டு வந்திருக்கிறது. இணையதளத்தை நல்ல விஷயத்திற்கும் பயன்படுத்தலாம் தீய விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம். நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தலாம் என்றால் என் நினைவில் முதலில் வருவது இந்த விக்கிபீடியாதான். இதைப்பற்றி நான் என் வலையில் எழுதும் அளவிற்கு இது என் மனதில் இடம்பிடித்து இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்……


- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: