ஜன கன மன என

Friday, October 14, 2011




ஜன கன மன என
ஜதி சொல்லும் நேரம்
ஜனனமும் மரணமும்
சந்திக்கும் காலம்
முடியும் நிகழ்ச்சி
ஆஹா
மனதில் மகிழ்ச்சி
துள்ளி எழவேண்டும்
ஏன் அழவேண்டும்
இந்த பூமிக்கு நன்றிசொல்லி
புறப்பட வேண்டும்
ஜன கன மன என
ஜதி சொல்லும் நேரம்
ஜனனமும் மரணமும்
சந்திக்கும் காலம்

ஜனிக்கும் உயிர்கள்
சாகாமல் போனால்
தாங்காது தாங்காது
பூலோகம் என்னாவது
சுழலும் பூமி சுற்றாது சாமி
சுவாசிக்க முடியாது
அப்போது என் செய்வது
காலம் வந்தால் எதுவும்
மீண்டும் நடக்கும்
நேரம் வந்தால் பறவை
ரக்கை துடிக்கும்
கிழக்கு வானம்
அழைக்கும் நேரம்
ஜதிகள் கூட்டம் பறக்கட்டும்
கீதங்கள் இசைக்கட்டும்
திசை எங்கே
அதோ அங்கேஅங்கே
இந்த தரை வாழ்க்கை….
வெறும் சிறை வாழ்க்கை
இந்த சிறைப்பட்ட சிலந்திக்கு
விடுதலை வேட்கை….

ஜன கன மன என
ஜதி சொல்லும் நேரம்
ஜனனமும் மரணமும்
சந்திக்கும் காலம்

மழையின் துளிகள்
மண்ணோடு வீழ்ந்தால்
மழைக்கொண்ட சாவென்று
வான்மேகம்தான் சொல்லுமா
நகரும் நதிகள்
கடலோடு சேர்ந்தால்
நதிகொண்ட சாவென்று
கடலென்ன தடைசொல்லுமா
சங்கமிக்க இயற்கை
கற்றுத்தந்தது
சங்கமத்தால் உலகம்
இன்னும் உள்ளது
பள்ளத்தில் சேரும்
வெள்ளத்தைப் போலே
இயற்கையோடு கலக்கலாம்
ஜகத்தையே ஜெயிக்கலாம்
திசை எங்கே
அதோ அங்கேஅங்கே
இதில் தலை எங்கேஅட வால் எங்கே
இந்த கேள்விக்கு விடை சொல்லும்
ஞானிகள் எங்கே….


திரைப்படம் : வானமே எல்லை..

நான் ரொம்ப சின்ன பையனாக இருந்தப்போ பார்த்த படம் இது. படம் பார்த்துவிட்டு என்னவோ தெரியலை கண்ணீர்தான் வந்தது. மனதை மிகவும் தொட்ட திரைப்படங்களில் இதுவும் ஒன்று.. தமிழ் திரைப்பாடல்களுக்கு இல்லாத சிறப்பு இந்த பாடலுக்கு உண்டு.. மரணத்தை வர்ணித்து பாடப்படும் பாடல் இது..

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: