காதலில் ஜெயிக்கனுமா வாழ்க்கையில் ஜெயிக்கனுமா

Wednesday, October 19, 2011



காதலில் ஜெயிக்கனுமா வாழ்க்கையில் ஜெயிக்கனுமா
     காதல் என்னும் பெயரை சொல்லி அதிகம் விளையாடுவது ஆண்கள் தான் என்ற எண்ணம் ஓங்கி இருக்கிறது. அதனால் அதிகம் ஏமாறுவது பெண்கள்தான் என்று நினைக்க வேண்டாம். இந்த விஷயத்தில் இருபாலரும் சமம்தான். கல்லூரியில் காதல் என்பது ஒரு சுகமான அனுபவம். இதுப்போல ஒரு சுகமான அனுபவம் வேறு எங்கும் இருக்காது. பள்ளியில் காதல், வேலை செய்யுமிடத்தில் காதல், எதிர்வீட்டு காதல், சொந்தபந்தத்தில் காதல், இன்னும் பல இருந்தாலும் கல்லூரியில் தோன்றும் காதல் போல வராது.
     கல்லூரி காதல் பெரும்பாலும் வெற்றியடையும். ஒரு சில காதல் கல்லறைவரை மனதில் தொடரும். இன்னும் ஒரு சில சங்கதிகள் இருக்கு. காதல் என்னும் பெயரில் நடக்கும் சத்தமில்லாத கொலைகள்.
     ஒரு சில பெண்கள் கல்லூரியில் உருகி உருகி காதலிப்பார்கள். ஒரு வேளை அது ஒருதலை காதலாக இருப்பின், அவன் இவளை காதலிப்பது இவளுக்கு தெரியும் இருந்தும் தெரியாமல் இருப்பதுபோல் காட்டிக்கொள்வாள். கல்லூரி முடியும்போது இவன் தன் காதலை சொன்னால், வீட்டை காரணம் காட்டி முடியாது என்பாள். இன்னும் சிலர், இருதலை காதலாக இருப்பின், வீடு அல்லது வேறு எதாச்சும் காரணம் சொல்லி பிரிய முயல்வாள்.
     இது போன்ற பெண்களைப்பற்றி என் தனிப்பட்ட கருத்து, இது யாரையும் கஷ்டப்படுத்த சொல்லவில்லை. என் நண்பர்களின் வாழ்வில் நடந்த, நான் பார்த்த அனுபவங்களையே அவர்களின் உள்ளக்குமுறல்களை இஙே பதிய முற்படுகிறேன். இது போன்ற பெண்களுக்கு, கல்லூரி காலத்தில் நேரம் போக்க ஒரு காதல் தேவை. இவள் காதலிக்கிறாள் என்பதைவிட, இவளை ஒருத்தன் காதலிக்கிறான் என்று அவள் தோழிகள் மத்தியில் சொல்லிக்கொள்ள ஒரு காதலன் அல்லது காதல் தேவை. இவள் காதலிக்கிறாளோ இல்லையோ, இவளுக்கு பிடித்து இருக்கிறதோ இல்லையோ, இவளை(யும்) ஒருவன் காதலிக்கிறான் என்று இவள் தம்பட்டம் அடித்துக்கொள்ள ஒரு காதல் தேவை. அதனால்தான் காதலிக்கிறாள். நான் சொல்வது, உண்மையாக காதலிக்கும் பெண்களை அல்ல, இப்படி காதலின் பெயரைச் சொல்லி மற்ற ஆண்களின் மனதை கொலை செய்யும் பெண்களைத்தான். ஆண்கள் செய்யும் தவறு காதலை இதயம் திரைப்படத்தில் வரும் முரளி போல பல வருடங்களாய் சொல்லாமலே இருந்தால் எப்படி. காதல் என்று வந்துவிட்டால் அதை துணிந்து சொல்லிடலாமே. கோழைக்கு எதற்கடா காதல். தோல்வியை சந்திக்க பயமோ. அட, போங்கடா. காதலாவது கத்திரிக்காயாவது. போய் பொழப்ப பாருங்கடானா அதை கேட்காம, காதல் கீதல்னு பொலம்பிட்டு. அவளை காப்பாத்த அப்பா, அம்மா, அக்கா, மாமா, இப்படி பலர் இருப்பாங்க. உன்னை காப்பாத்திக்க நீ மட்டும்தான். நீதான் உன்னை சேர்ந்தவர்களை காப்பாற்ற வேண்டும். ஒரு வேளை, உன் காதலை அவள் மறுத்துவிட்டு இன்னொருவனை மணந்தால் நிச்சயம் அவள் சந்தோஷமாகத்தான் இருப்பாள். ஆனால், அவள் காதலை மறுத்துவிட்டாள் என்பதற்காக நீ உன் எதிர்காலத்தை இழக்கலாமா. காதலை பெண் மீது வைக்காதே. உன் இலட்சியத்தின் மீது வை. இலக்கை அடையும்போது யார் உன் கூட துணையாய் இருந்தாளோ  அவளை மணந்துக்கொள்.. அதுதான் உண்மையான காதல். அப்போது காதலும் வெல்லும், நீயும் வாழ்க்கையில் வென்றிருப்பாய்…

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

1 Comments:

Dinesh Kumar A P said...

super dinesh ....neinga sonnathel unmai iruku.....na ippa tha paddu thurunthuna............