சர்வே..

Tuesday, October 11, 2011




எனக்கு பிடிகாத விஷயம் ஒன்னு இருக்குங்க. எதாச்சும் குமுதம் இல்ல ஆனந்தவிகடன் புத்தகத்தை புரட்டினா கண்டிப்பா அங்கே துணுக்கு விஷயமா சர்வே ஒன்னை போட்டு இருப்பாங்க. அதாவது இதுக்கெல்லாம் கூடவா சர்வே எடுப்பாங்கனு நான் பல நேரம் கடுப்பாகியிருக்கேன்.. உங்களிடம் சொன்னா நீங்களும் கொஞ்சம் இல்ல ரொம்பவே கடுப்பாவீங்க. அது மாதிரி தேவையில்லாத விஷயங்களுக்காக எடுத்த சர்வேக்களின் பட்டியலை இங்கே சொல்றேன்..

  • குளிக்கும்போது முதலில் தண்ணீரை வலது தோளில் ஊற்றுவோர் எத்தனை பேர்..
  • வெறுங்காலில் நடக்கும்போது எத்தனைப்பேருக்கு முள் குத்தும்.. ( இது நம் நாட்டில் மட்டுமே எடுத்த சர்வேனு நினைக்கிறேன் )
  • பத்து முட்டை வேகவைக்கும்போது எத்தனை முட்டை ஓடு உடையாமல் வேகும்..
  • எதாச்சும் வலிக்கும் போது அம்மானு கத்துறவங்க , அப்பானு கத்துறவங்க, ஐயோனு கத்துறவங்க, கத்தாம இருக்குறவங்க எத்தனை பேர்னு ஒரு சர்வே..
  • பல் துலக்கும்போது முதலில் வலது பக்கம் துலக்குபவர் எத்தனை பேர், இடது பக்கம் துலக்குபவர் எத்தனை பேர்..
  • பத்து ஆண்களில் எத்தனை பேர் தன் பாக்கெட்டில் சீப்பு வெச்சு இருக்காங்க..
  • தியேட்டரில் படம் பார்க்கும்போது எத்தனை பேர் போன் பேச வெளியே எழுந்து வராங்க.
இப்படி இன்னும் அடுக்கிட்டே போகலாம். எதுக்கு தேவையில்லாம இப்படி உங்கள் உழைப்பை வீணாக்குறீங்க. தேவையில்லாத விஷயத்தை சர்வே எடுக்க யார் உங்களுக்கு சொல்லிதந்தது.. இந்தியாவில் எத்தனை விவசாயிகள் வறுமைக்கோட்டில் வசிக்கிறார்கள், பட்டினிச்சாவால் எத்தனை பேர் இறக்கிறார்கள், இப்படி நாட்டிற்கு தேவையான சர்வே எடுத்து அரசுக்கு உதவலாமே, உங்களுக்கும் ஒரு பொழுதுபோக்காகவும் இருக்கும், நாட்டிற்கும் உதவியதாகவும் இருக்கும். சம்பத்தப்பட்டவர்கள் கொஞ்சம் யோசிங்களேன்...

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: