என்னென்ன செய்தோம் இங்கு

Saturday, October 08, 2011




என்னென்ன செய்தோம் இங்கு
இதுவரை வாழ்விலே…
எங்கெங்கு போனோம் வந்தோம்
விதியென்னும் பேரிலே…
காணாத துயரம் கண்ணிலே…
ஓயாத சலனம் நெஞ்சிலே…
இறைவா…
சிலநேரம் எண்ணியதுண்டு
உன்னைத்தேடி வந்ததுமுண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா?
இறைவா…
அன்பான புன்னகை செய்வாய்…
அழகான பார்வையில் கொல்வாய்…
நீயென்பது நானல்லவா
விடைசொல்கிறாய்…
கல்லாக இருப்பவன் நீயா?
கண்ணீரைத் துடைப்பவன் பொய்யா?
உள்நெஞ்சிலே உனைவாங்கினால்
கரை சேர்க்கிறாய்…

வாழ்க்கையின் பொருள்தான் என்ன?
வாழ்ந்துதான் பார்த்தால் என்ன?
கதைசொல்கிறாய்…
பயம்கொல்கிறாய்…
காலை சூரியனின் ஆதிக்கமா?
ஆடும் பறவைகளும் போதிக்குமா?
காலை சூரியனின் ஆதிக்கமா?
ஆடும் பறவைகளும் போதிக்குமா?
உனது அரசாங்கம் பெருங்காடு
உலகம் அதிலே ஒரு சிறுகூடு
உன்னை அனைத்துக்கொண்டு
உள்ளம் அருகிநின்றால்
சுடும்தீயும் சுகமாய் தீண்டிடும்…
இறைவா..
சிலநேரம் எண்ணியதுண்டு
உன்னைத்தேடி வந்ததுமுண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா?
இறைவா…

உள்ளிருக்கும் உன்னைத் தேடி
ஓயாமல் அலைவோர் கோடி
கருவறையா நீ…
கடல் அலையா…
மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்…
நதியில் மூழ்கி எழும் பெரும்கூட்டம்…
மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்…
நதியில் மூழ்கி எழும் பெரும்கூட்டம்…
என்னில் கடவுள் யார் தேடுகிறோம்…
பொய்யாய் அவரின் பின் ஓடுகிறோம்…
கண்ணைப்பார்க்க வைத்த
கல்லைப்பேச வைத்த
பெருந்தாயின் கருணை மறக்கிறோம்..
இறைவா…
சிலநேரம் எண்ணியதுண்டு
உன்னைத்தேடி வந்ததுமுண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா?
இறைவா…
அன்பான புன்னகை செய்வாய்..
அழகான பார்வையில் கொல்வாய்..
நீயென்பது நானல்லவா
விடைசொல்கிறாய்..
கல்லாக இருப்பவன் நீயா
கண்ணீரைத் துடைப்பவன் பொய்யா
உள்நெஞ்சிலே உனைவாங்கினால்
கரை சேர்க்கிறாய்…………….

திரைப்படம் : மயக்கம் என்ன..

ஒரு நாள் நான் ’எங்கேயும் எப்போதும்’ திரைப்படம் பார்க்க எங்கள் ஊர் தியேட்டருக்கு சென்றிருந்தேன். கொஞ்சம் சீக்கிரமே தியேட்டருக்குள் வந்துவிட்டேன். அப்போது அங்கே இந்த பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. என்ன படம் என்று தெரியவில்லை. ஒரு வழியாக அந்த பாடல் இடம்பெற்ற திரைப்படத்தை கண்டுபிடித்து இந்த பாடலை பதிவிறக்கம் செய்து காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு ஒவ்வொரு வரியாக கேட்டு கேட்டு எழுதி இங்கே என் வலைப்பக்கத்தில் பதிவு செய்கிறேன். பாடல் மிகவும் இனிமையாக இருக்கிறது. பாடல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம்...



- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

1 Comments:

Anonymous said...

க்ரீட் வொர்க்... க்ஈப் இட் உப்