மௌனம்…

Thursday, September 22, 2011





பொது இடங்களில் கொஞ்சம் தங்கள் குரலை உயர்த்திப் பேசினால் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்று நினைப்பவர்கள் அதிகம் உண்டு. இன்று என் வங்கிக்கு ஒருவர் வந்தார். மேனேஜரின் அறைக்குள் சென்றார். அவரும் என் மேனேஜரும் என்ன பேசினர் என்று எனக்கு தெரியவில்லை.சிறிது நேரம் கழித்து மேனேஜர் அறையில் இருந்தபடியே சத்தம் போட ஆரம்பித்துவிட்டார். அப்புறம் அறையைவிட்டு வெளியே வந்து சத்தம்போட்டார். வங்கியில் மற்ற வாடிக்கையாளர்களும் இருந்தனர். அவரவர் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டிருந்தோம். இவர் இப்படி கூச்சல்போட்டது கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது. அப்புறம் அந்த பிரச்சனையை ஒருவழியாக தீர்த்து அனுப்பிவைத்தோம். குரலை உயர்த்திப் பேசுவதால் எங்கேயும் எப்போதும் உங்கள் வேலை உடனே முடிந்துவிடாது என்பதை மட்டும் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.
நான் சொல்லவருவது என்னவென்றால், தேவையில்லாமல் கத்தி எதற்காக தன் சுயமரியாதையை இழக்க வேண்டும். நான் எப்போதுமே என் பொறுமையை இழக்க மாட்டேன். என்ன நடந்தாலும் சரி யார் என்ன சொன்னலும் சரி. அதை அமைதியாகவும் புன்சிரிப்புடனும்தான் கேட்டுக்கொண்டிருப்பேன். இதனால் எனக்கு உணர்ச்சிகளே இல்லை என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். நான் எப்போதும் உணர்ச்சிகளை விட உணர்வுகளைத்தான் அதிகம் மதிக்கிறேன். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தையை விட நான் முட்டாள் இல்லை. சொன்ன வார்த்தையை திரும்ப எடுப்பது முடியாத காரியம். எல்லோரும் ஒருநாள் முடிவில்லாத மௌனத்தில்தான் இருக்கப்போகிறோம் என்பதை நான் நன்றாக உணர்ந்துவிட்டேன். அதனால்தான் நான் என்னை இப்போதிருந்தே அதற்காக தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதிகம் பேசுபவன் புத்திசாலியும் இல்லை அதிகம் பேசாதவன் முட்டாளும் இல்லை. சாது மிரண்டால் என்னவாகும் என்பது அனைவருக்கும் தெரியும். மௌனமாய் இருப்பது என்றும் உங்களுக்கு நன்மையையே தரும் என்பதை என் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். நீங்களும் முடிந்தால் மௌனத்தை உங்கள் நண்பனாக ஏற்றுக்கொள்ளுங்கள்…

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: