ஷீரடி சாய் பாபா

Friday, August 14, 2015


   நேற்று சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள சாய் பாபா அலயம் சென்றிருந்தேன். இங்கு பலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் நேற்றுதான் எனக்குள் அப்படி ஒரு நிம்மதி, அமைதி, ஆனந்தம் கிடைத்தது. தொடர்ந்து படித்துக்கொண்டிருந்ததால், மனம் கொஞ்சம் ஓய்வு எதிர்பார்த்தது. எதாவது கோவிலுக்கு செல்வோம் என்று நினைத்தேன். மனதில் நொடிப்பொழுதில் வந்தார் பாபா. வா என்று அவர் என்னை அழைத்தது போன்ற ஒரு உணர்வு. வியாழக்கிழமை என்றால் அதிகம் பேர் வருவார்கள், புதன்கிழமை என்றால் அவரை கொஞ்சம் மனதார பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன். ஆலயம் வந்து சேர்ந்ததும், அலங்காரம் ஆரத்தி செய்யும் நேரம் சரியாக இருந்தது. நான் வரிசையில் அமர்ந்துக் கொண்டேன். அவருக்கு பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்து, ஆரத்தி முடித்து பஜனை முடித்து அவரை தொட்டு தரிசிக்கும் போது மனதில் அப்படியொரு ஆனந்தம். கண்கள் நீரைவார்க்க தயாராய் இருந்தது. என்னை அழைத்து வந்து, உன் தரிசனமும் ஆசியும், ஆனந்தமும் அளித்தார் பாபா. நின் கருணைக்கு நன்றி.

     பாபாவின் தரிசனம் முடித்ததும் ஆலயத்தை சுற்றி வரும்போது ஒரு பலகையில் எழுதியிருந்தார்கள். அவர் ஏற்றிய துனி என்னும் அக்னியும் உதி என்னும் சாம்பல் பற்றிய வரலாறும் எழுதப்பட்டிருந்தது. 

    தன்னை காணவரும் அன்பர்களுக்கு பாபா ஒரு கைப்பிடி சாம்பலை பிரசாதமாக தருவாராம். மனிதனின் வாழ்க்கை கடைசியில் ஒரு கைப்பிடி சாம்பலில்தான் முடியும் என்பதை உணர்த்த ! 

        அந்த வாசகம் என்னை நிறையவே சிந்திக்க வைத்தது. எல்லாம் மாயை என்பதை எனக்கு திரும்ப திரும்ப உணர்த்துகிறது. நன்றி பாபா !!

* தினேஷ்மாயா *

0 Comments: