ஒரு பூகம்பம் தேவை

Monday, August 31, 2015



உலகில் உள்ள

அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் சரிசெய்ய

ஒரு பூகம்பம் தேவை !!

* தினேஷ்மாயா *


வண்ணம் கொண்ட வெண்ணிலவே

Sunday, August 30, 2015



வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ

விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை
விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே

பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
சுவாசிக்க ஆசையில்லை

பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
சுவாசிக்க ஆசையில்லை

கண்டுவந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளித்தள்ளி நீயிருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்கை இல்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே

நங்கை உந்தன் கூந்தலுக்கு 
நட்சத்திரப் பூப்பறித்தேன் 
நங்கை வந்து சேரவில்லை 
நட்சத்திரம் வாடுதடி 

நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி

கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால்கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம்போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே

படம் : சிகரம்
பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசை : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இயற்றியவர் : வைரமுத்து

* தினேஷ்மாயா *

ஏய் மான்புரு மங்கையே



தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை

தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை

ஏய் மான்புரு மங்கையே
நில்லாயோ
செம்மாதுழை வாய் மொழி
சொல்லாயோ

ஏய் மான்புரு மங்கையே
நில்லாயோ
செம்மாதுழை வாய் மொழி
சொல்லாயோ

ஏய் மான்புரு மங்கையே
ஏய் மான்புரு மங்கையே
ஏய் மான்புரு மங்கையே

தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை

ஏன் கலித்தொகை மொழியில் பாடுகிறாய்
ஏன் கலித்தொகை மொழியில் பாடுகிறாய்
ஏன் குறுந்தொகை மொழியை தேடுகிறாய்
என் பாமர மொழியில் பாடாயோ

கண்கள் பார்தேன் கவி ஆனேன்
இன்னும் பார்த்தால் எங்கே போவேன்
உன்னாலே கம்பன் தாண்டுவேன்
உன் இதழ்மேலே எழுதுவேன்

ஏய் மான்புரு மன்னவா
நில்லாயோ
என் பாமர வார்தையில்
சொல்லாயோ

ஏய் மான்புரு மன்னவா
ஏய் மான்புரு மன்னவா
ஏய் மான்புரு மன்னவா

நம்தர நம்தர நம்தர
நம்தர நம்தர நம்தர
நம்தர நம்தர நம்தர

உன் வாட்டடங்கண் என்னை வாட்டுதடி
உன் வளைவுகளோ என்னை வளைக்குதடி
என் வாழ்கையின் தேவை தீர்ப்பாய் வா

உந்தன் சேவை இவள்
செய்யும் போது
உந்தன் சேவை இவள் 
செய்யும் போது
என் தேவை அது தீருமே
என் வாழ்வே மாறுமே

ஏய்
ஏய் மான்புரு மங்கையே
நில்லாயோ
செம்மாதுழை வாய் மொழி
சொல்லாயோ

ஏய் மான்புரு மன்னவா
நில்லாயோ
என் பாமர வார்த்தையில் சொல்லாயோ

ஏய் மான்புரு மன்னவா
ஏய் மான்புரு மங்கையே
ஏய் மான்புரு மன்னவா

தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை

தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை

படம் : குரு
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : சுஜாதா, ஸ்ரீநிவாஸ்

* தினேஷ்மாயா *

யாருமில்லா தனியரங்கில்


யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சைக் கேட்காமல் உன்னைத் தேடும்

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

இசையால் ஒரு உலகம்
அதில் நீ நான் மட்டும் இருப்போம்
கனவால் ஒரு இல்லம்
அதில் நாம்தான் என்றும் நிஜமாய்
ஓ அது ஒரு ஏகாந்த காலம்
உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் எனும் படி வழியில்
இதயத்துக்குள் இறங்கியது
காதல் காதல் காதல் காதல்

யாருமில்லா தனியரங்கில்
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
ஹா எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

ஓ என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சைக் கேட்காமல் உன்னைத் தேடும்
யாருமில்லா தனியரங்கில்

பேச மொழி தேவை இல்லை
பார்த்துக்கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா மணிக்குயில் நானுமே
சிற்பம் போல செய்து என்னை சேவித்தவன் நீயே நீயே
மீண்டும் என்னை கல்லாய் செய்ய
யோசிப்பதும் ஏனடா சொல்

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

ஓ என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சைக் கேட்காமல் உன்னைத் தேடும்

திரைப்படம்: காவியத்தலைவன்
பாடியவர்: ஸ்வேதா மோகன் & ஸ்ரீநிவாஸ்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
குரல்: ஸ்வேதா மோகன், ஸ்ரீனிவாஸ்

* தினேஷ்மாயா *

ஏயா என் கோட்டிக்காரா



ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டைக்காரா

குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டக்காரா

செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரா

யே ஏட்டி என் கோட்டிக்காரி
அடி ஏழா என் வேட்டைக்காரி

குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டைக்காரி

செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரி

தேடி சேர்த்த காச போல்
காதல் இருக்குதா

கொஞ்சமாக எடுக்குற
கஞ்சம் தடுக்குதா

காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்க கஞ்சன் இல்லட்டி

சின்ன புள்ள நான்தான்
பெண்ணே உண்மை அல்லோ

என்ன தாங்க இப்போ
மூணு அம்மை அல்லோ

பாலருவியும் தேனருவியும் ஐந்தருவியும்
உன் நேசத்தின் முன்னே முன்னே தோத்தே போகும்
மண்ணில் சொர்கமிது

ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டைக்காரா

குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டக்காரா

செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரா

காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சன் இல்லட்டி

தட்டான் பூச்சி போல
வண்ணம் அள்ளி தார

கண்ணில் இன்னும் வேற
ஏதோ சொல்லி தார

நான் நினைச்சதும் நீ நினைச்சதும்
நூழிலையில் தான் வழுக்கிட
பேசி பேசி இன்னும் பேசி
பேசா நிலை வருமோ

தேடி சேர்த்த காச போல்
காதல் இருக்குதா

கொஞ்சமாக எடுக்குற
கஞ்சம் தடுக்குதா

காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சன் இல்லட்டி

படம்: பாபநாசம்
இசை: ஜிப்ரான்
வரிகள்: நா.முத்துகுமார்
குரல்: சுந்தர் நாராயணராவ், மாளவிகா

* தினேஷ்மாயா *

யார் எழுதியதோ ?



யார் எழுதியதோ ? எனக்கென ஓர் கவிதையினை !
நான் அறிமுகமா ? மறைமுகமா ? அகம் புறமா ?
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் .. பறந்தேன் ..

யார் எழுதியதோ ?
எனக்கென ஓர் கவிதையினை !
நான் அறிமுகமா ? மறைமுகமா ? அகம் புறமா ?
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் .. பறந்தேன் ..

நிழலில் இருந்தேன் நிலவில் நனைந்தேன்
எதையோ இழந்தேன் எதையோ அடைந்தேன்

ஓர் பனித்துளியும் மழைத்துளியும் கலந்தது போல்
என் இருவிழியில் இருவிழியை இணைத்தது யார்
அருகே ஒரு வானவில்
நடுவே ஒரு மோகமுள்
முதலா முடிவா ?
விடிவா ? விடிவா ? ...
விடிவா ? விடிவா ? ...

படம்: தெகிடி
இசை: நிவாஸ் ப்ரசன்னா
குரல்: சத்யா பிரகாஷ்
வரிகள்: கபிலன்

* தினேஷ்மாயா *

கவிதை

Thursday, August 27, 2015


பிரம்மன் எனக்காக எழுதிய கவிதைக்காக

நான் இங்கு கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்..

* தினேஷ்மாயா *

சிந்திக்க வைக்கும்..

Friday, August 14, 2015


நாம் சிந்திக்காமல் செய்யும் ஒவ்வொரு விஷயமும்

நடந்து முடிந்த பின்னர்

நம்மை அதிகம் சிந்திக்க வைக்கும்..

* தினேஷ்மாயா *

ஷீரடி சாய் பாபா


   நேற்று சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள சாய் பாபா அலயம் சென்றிருந்தேன். இங்கு பலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் நேற்றுதான் எனக்குள் அப்படி ஒரு நிம்மதி, அமைதி, ஆனந்தம் கிடைத்தது. தொடர்ந்து படித்துக்கொண்டிருந்ததால், மனம் கொஞ்சம் ஓய்வு எதிர்பார்த்தது. எதாவது கோவிலுக்கு செல்வோம் என்று நினைத்தேன். மனதில் நொடிப்பொழுதில் வந்தார் பாபா. வா என்று அவர் என்னை அழைத்தது போன்ற ஒரு உணர்வு. வியாழக்கிழமை என்றால் அதிகம் பேர் வருவார்கள், புதன்கிழமை என்றால் அவரை கொஞ்சம் மனதார பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன். ஆலயம் வந்து சேர்ந்ததும், அலங்காரம் ஆரத்தி செய்யும் நேரம் சரியாக இருந்தது. நான் வரிசையில் அமர்ந்துக் கொண்டேன். அவருக்கு பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்து, ஆரத்தி முடித்து பஜனை முடித்து அவரை தொட்டு தரிசிக்கும் போது மனதில் அப்படியொரு ஆனந்தம். கண்கள் நீரைவார்க்க தயாராய் இருந்தது. என்னை அழைத்து வந்து, உன் தரிசனமும் ஆசியும், ஆனந்தமும் அளித்தார் பாபா. நின் கருணைக்கு நன்றி.

     பாபாவின் தரிசனம் முடித்ததும் ஆலயத்தை சுற்றி வரும்போது ஒரு பலகையில் எழுதியிருந்தார்கள். அவர் ஏற்றிய துனி என்னும் அக்னியும் உதி என்னும் சாம்பல் பற்றிய வரலாறும் எழுதப்பட்டிருந்தது. 

    தன்னை காணவரும் அன்பர்களுக்கு பாபா ஒரு கைப்பிடி சாம்பலை பிரசாதமாக தருவாராம். மனிதனின் வாழ்க்கை கடைசியில் ஒரு கைப்பிடி சாம்பலில்தான் முடியும் என்பதை உணர்த்த ! 

        அந்த வாசகம் என்னை நிறையவே சிந்திக்க வைத்தது. எல்லாம் மாயை என்பதை எனக்கு திரும்ப திரும்ப உணர்த்துகிறது. நன்றி பாபா !!

* தினேஷ்மாயா *

ஈர்ப்பு

Tuesday, August 11, 2015



வீணை உன் அழகைக்கண்டு

உன்பால் ஈர்க்கப்பட்டு

உன் மடியில் இப்போது

மையம் கொண்டிருக்கிறது காண்..

* தினேஷ்மாயா *

உன் மூச்சில் நான் வாழ்ந்தால்


“உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்..”



   இந்த வரிகளை கேட்கும்போதெல்லாம், மனதிற்குள் ஒரு மாதிரி தென்றல் வீசுகிறது. எத்தனைமுறை கேட்டாலும், மனசு ரொம்ப லேசாக இருக்கிறது. இந்த பாடலே அப்படித்தான்... சில நேரங்களில் இப்பாடல் எனக்கு கண்ணீரையும் அளிக்கும்..

* தினேஷ்மாயா *

அத்தனை அழகு


நாணல்கள் வளைவதும்

நாணத்தால் நீ நெளிவதும்

அத்தனை அழகு தெரியுமா !

* தினேஷ்மாயா *

கொஞ்சம் அசைந்து நில்.



கொஞ்சம் அசைந்து நில்.

உன்னை சிலையென்று நினைத்து

பறவைகள் வந்தமர்ந்து செல்கின்றன..

* தினேஷ்மாயா *


நேரில் !!!


இல்லாத உன்னை

கனவிலேயே இவ்வளவு காதலிக்கிறேனே !

நேரில் நீ வந்தால்

என் அன்பு முழுவதையும் கொட்டி தீர்ப்பேனடி..

* தினேஷ்மாயா *

உயிருடன் இருப்பது


நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை

இதயம் வலிப்பதனால் மட்டுமே உணர்கிறேன்..

* தினேஷ்மாயா *

மகிழ்ச்சியாக வாழ்வோம்

Monday, August 10, 2015


பிறந்தாச்சு..

இறக்கத்தான் போகிறோம்..

மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு இறப்போமே !

* தினேஷ்மாயா *

மாயா


தேவதையின் கால்கள்

மண்ணில் படுவதில்லையோ ?

*தினேஷ்மாயா *

வெழுக்கும்


வானம் கருத்தால் தான்

இப்பூமி வெழுக்கும்..

* தினேஷ்மாயா *

தென்றல்


கடலில் புயல் மையம் கொல்வதை

பார்த்திருக்கிறேன்..

நாணலின் நடுவே தென்றல் ஒன்று

மையம் கொண்டிருப்பதை இங்குதான்

பார்க்கிறேன்..

* தினேஷ்மாயா *

சேதாரம்


உன் பற்களில் படும்

நகைகளுக்கு மட்டும்

ஒருபோதும் சேதாரமில்லை..

* தினேஷ்மாயா *

மகிழ்ச்சிக்கான சாவி


உன் மனதை யாரிடம் வேண்டுமானாலும் கொடுத்துக்கொள்..

ஆனால் , உன் மகிழ்ச்சி துன்பம் இவற்றின் சாவியை மட்டும்

நீயே வைத்துக்கொள்..

பிறரிடம் அதை ஒருபோதும் கொடுக்காதே..

* தினேஷ்மாயா *

நீ பிறந்தபோது


நீ பிறந்தபோது

நான் என்ன செய்துக்கொண்டிருந்தேன் என்றெனக்கு

தெரியுமடி..

அன்றுவரை பிறர் துணையோடு

நடைபழகிய நான், 

அன்றிலிருந்து நானாகவே நடக்க ஆரம்பித்தேன்..

எப்படி என்று கேட்கிறாயா ?

25 வருடங்கள் கழித்து

என்னோடு துணையாய் நடக்க ஒருத்தி

இன்று பிறந்துவிட்டாள் என்கிற நம்பிக்கையில்..

* தினேஷ்மாயா *

சொல்லத்தெரியவில்லை


சிறிது நேரமென்றாலும்

நீ தரும் முத்தம்

“.....................................”

சொல்லத்தெரியவில்லை எனக்கு..

* தினேஷ்மாயா *

அன்பின் பெயரால் ஏமாற்றாதே



நம்பிக்கை துரோகத்தைவிட

மிகவும் கொடியது..

அன்பு துரோகம்..

அன்பின் பெயரால்

ஏமாற்றப்படுவது..

* தினேஷ்மாயா *

நல்லுலகம்


   கற்பனைக்கூட செய்துப்பார்க்க முடியாத அளவிற்கு துன்பங்கள் உங்கள் வாழ்க்கையில் வரும். அதை துணிச்சலோடு கடந்து ஜெயித்துப்பாருங்கள். நீங்கள் கற்பனை செய்யாத ஓர் நல்லுலகம் உங்களுக்காக நிச்சயம் அங்கு காத்திருக்கும்.

* தினேஷ்மாயா *

என் சூரியனே



என் சூரியனே..

உன்னையே நான் சுற்றிவர 

காரணம் என்னவோ ?

உன் விழியீர்ப்பு விசையா ?

* தினேஷ்மாயா *

அன்பளிப்பு


இந்த தேவதையும்

குட்டி தேவதையும்

தேவன் அளித்த அன்பளிப்பு..

* தினேஷ்மாயா *

குழந்தைப் பருவம்


இவ்வாழ்க்கையினை

நாம் சிறப்பாக வாழ்வது

நம் குழந்தைப்பருவத்தில் மட்டுமே..

* தினேஷ்மாயா *

நன்றி தீனா..


  நேற்று தீன்பந்து என்றொரு நண்பர் என்னை அழைத்திருந்தார். என் வலைப்பக்கத்தை படித்துவிட்டு, என்னை அலைப்பேசியில் தொடர்புக்கொண்டு பேசினார். பல நாட்களுக்குப்பிறகு ஒரு வாசகரிடம் இருந்து, ஓர் அழைப்பு. 

   இப்போதெல்லாம், மனம் விட்டு பாராட்டக்கூட ஒரு பெரிய மனம் தேவைப்படுகிறது. அவரும் நானும் நேற்று சரியாக பேசமுடியவில்லை. இருப்பினும் இன்னொருமுறை உங்களுடன் நன்றாக பேசுகிறேன் தோழரே. என்னை அழைத்து உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி தீனா.

* தினேஷ்மாயா *

உண்மையான உறவு


உண்மையான உறவுக்கிடையில்

எந்த பொய்யும் இருக்காது,

எந்த இரகசியமும் இருக்காது,

இருக்கவும் கூடாது..

* தினேஷ்மாயா *

தடுமாற்றம்



என்னடி நான் எழுதட்டும்..

உன்னை பார்த்ததும்

நான் மட்டுமல்ல,

என் எழுத்துக்களும் அல்லவா

தடுமாறுகின்றன..

* தினேஷ்மாயா *

இரக்கம் காட்டு


மனசாட்சியே இல்லாமல்

என் இதயத்தை கிழித்தெடுத்து

என்னைவிட்டு பிரிந்து செல்கிறாயே !

உனக்கு இரக்கமே இல்லையா ?

* தினேஷ்மாயா *

ஓய்வு தேவை


எனக்கு என் வாழ்க்கையில் இருந்து

ஓர் மிகப்பெரிய ஓய்வு தேவை..

அது மரணம் என்று இல்லை,

அதுவாக இருந்தாலும் பரவாயில்லை..

* தினேஷ்மாயா *

சத்யமேவ ஜெயதே


எது சரியோ, அதையே செய்வோம்..

அது எவ்வளவு கடினமாக இருந்தாலும்..

* தினேஷ்மாயா *

தலைநிமிர்ந்து

Sunday, August 09, 2015



என் பேனா தலைக்குனிந்த பின்புதான்

நான் தலைநிமிர்ந்து நடக்க ஆரம்பித்தேன்.

* தினேஷ்மாயா *

துடிப்பு

Saturday, August 08, 2015


நான் உயிரோடிருக்க என் இதயம் துடிக்கவில்லை..

உன்னிடம் என் காதலை சொல்வதற்காகவே

துடித்துக்கொண்டிருக்கிறது..

* தினேஷ்மாயா *

மன்மதக்கலை


சொல்லித் தெரிவ தில்லை - மன்மதக் கலை..

- பாரதியார்

* தினேஷ்மாயா *

போடா


நீ சொல்லும் “போடா”என்னும் ஒரு வார்த்தை

என் கவிதைகள் அனைத்தையும்

ஒன்றுமில்லாமல் செய்துவிடுகிறதடி..

* தினேஷ்மாயா *

புன்னகைப் பூவே..


பூக்கள் வாசம் வீசும் என்று

அனைவருக்கும் தெரியும்..

பூக்கள் பேசும் என்பது

எனக்கு மட்டுமே தெரியுமடி

என் புன்னகைப் பூவே..

* தினேஷ்மாயா *

மலேசியா பத்து மலை முருகன்.


மலேசியா பத்து மலை முருகன்.

* தினேஷ்மாயா *

நன்றி முருகா !!


   ஆடிக்  கிருத்திகை தினத்தன்று முருகனின் அறுபடை வீட்டுக்கு சென்று தரிசனம் செய்வதை நான் வழக்கமாக கொண்டிருக்கிறேன். 2006 ஆம் ஆண்டு முதல் ஆடிக் கிருத்திகைக்கு முருகனின் அறுபடை வீட்டிற்கு சென்று தரிசித்து வருகிறேன். இன்றும் திருத்தணி சென்று வந்தேன். பத்து வருடங்களாக தொடர்ந்து முருகனின் தரிசனம் எனக்கு கிடைத்துவருகிறது. பல தடைகள் வந்தபோதிலும் எனக்கு ஆடிக் கிருத்திகை அன்று தொடர்ந்து உன் தரிசனம் கொடுத்தமைக்கு நன்றி முருகா. இது என் ஆயுள் உள்ளவரை தொடர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் முருகா..



சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் குடும்பம் ஒருவருடன் சேர்ந்து காவடி எடுத்தபோது..



இன்று திருத்தணி சென்றபோது...

* தினேஷ்மாயா *

அழுதுக்கொண்டிடுக்கிறது வானவில்...

Thursday, August 06, 2015


கீழே இறங்கி வராதே என்று சொன்னேன்..

எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை - நீ..

அங்கே பார்..

தன்னிடம் மஞ்சள் நிறத்தை காணவில்லை என்று

அழுதுக்கொண்டிடுக்கிறது வானவில்...

* தினேஷ்மாயா *

வந்துவிடு



சூரியனுக்கு ஒளியை -

கடன் கொடுத்துக்கொண்டிருக்கிறாள் என்னவள்..

போதும் பெண்ணே..

விஷயம் அறிந்து நிலவும்

உன்னைத்தேடி வருகிறானாம்.

வந்துவிடு.. சென்றுவிடுவோம் !!

* தினேஷ்மாயா *

மாயா


உத்தரவு கொடு..

இன்றே பிரகடனப்படுத்துகிறேன்..

நீ தான் என்னவள் என்று..

* தினேஷ்மாயா *

நிராயுதபானி


ஆயுதம் ஏதுமின்றி கொல்கிறாய் என்னை..

நிராயுதபாணியாய் நான் !!

* தினேஷ்மாயா *

பூத்தாள் தேவதை



நேற்று பெய்த

காதல் மழையில்

என் மனதில் - இன்று பூத்த

தேவதை - நீ !

* தினேஷ்மாயா *

தவணை முறையில் கொல்கிறாய்

Wednesday, August 05, 2015



இதென்ன புதுப்பழக்கம்..

எதற்கு என்னை தவணை முறையில் கொல்கிறாய் !!

ஓ..

திருமணத்திற்கு பிறகு  உன் அன்பால் கொல்ல

என்னை மிச்சம் வைக்கிறாயோ ?

* தினேஷ்மாயா *

எனக்கு நீ..


இசைக்கு ஏழு சுவரங்கள்..

எனக்கு உன் பெயரின் எழுத்துக்கள்..

* தினேஷ்மாயா *