போராளிகள்

Sunday, July 06, 2014



  இன்று ஒரு செய்தி படித்தேன். ஈராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த 46 செவிலியர்கள் பத்திரமாக இந்தியா வந்து சேர்ந்தனர் என்று. அதில் ஒரு செவிலியர் பேட்டி கொடுத்திருந்தார். அந்த தீவிரவாதிகள் இவர்களிடம் கண்ணியமாக நடந்துக்கொண்டனர் என்று.

 அப்போது எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. போராளிகள் எப்போதும் கண்ணியமாகவே நடந்துக்கொள்வார்கள். ஒரு கொள்கைக்காக போராடும் எந்த ஒரு மனிதனும் ஒரு நிமிடம் கூட தன் கொள்கையில் இருந்து கண்ணியம் தவறும் வண்ணம் நடந்துக்கொள்ள மாட்டான்..

அவர்களின் கொள்கை சரியானதாக இருந்தாலும் அதை அடைய அவர்கள் கையில் எடுத்துக்கொண்ட வழிகள் தவறாக இருக்கலாம். சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால் சேகுவேரா, பகத் சிங் போன்ற போராளிகள் இன்னமும் மக்கள் மனதில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். போராளிகள் எப்போதும் போற்றப்பட வேண்டியவர்களே. 

* தினேஷ்மாயா *

0 Comments: