மூன்று கனவுகள்

Wednesday, July 30, 2014

கடந்த வாரமும் இந்த வாரமும் எனக்கு வந்த மூன்று கனவுகளைப் பற்றி இங்கே பதிவு செய்கிறேன்.



முதல் கனவு : சென்ற வாரம் வந்த கனவு இது. நான் ஒரு மொட்டைமாடியில் நின்றுக்கொண்டிருக்கிறேன். Telescope வைத்துக்கொண்டு நிலவை பார்த்துக்கொண்டிருக்கிறேன். நிலவு மிகவும் அருமையாகத் தெரிகிறது. சிறிது ஓய்வு எடுக்கலாம் என்று நிலவை பார்ப்பதை கொஞ்ச நேரம் நிறுத்தி வைக்கிறேன். நிலவை நான் Telescope வழியாக பார்த்தபோது எப்படி தெரிந்ததோ அதைவிட பல மடங்கு பெரிதாக என் கண்ணுக்கு தெரிகிறது. அதுவும் சில மைல் கிலோமீட்டர் தூரமே இருக்கிறது எனக்கும் நிலவுக்கும். நிலவின் மொத்த ஒருவமும் எனக்கு வட்ட வடிவில் அழகாக தெரிகிறது. அவதார் படத்தில் வருவதுபோல நிலவு கொஞ்சம் நீல நிறத்தில் என்னருகில் தெரிகிறது. இந்த ஆச்சரியத்தை யாரிடமாவது சொல்லலாம் என்று நினைக்கிறேன். அதற்குள் கனவு கலைந்துவிட்டது. அடுத்து என்ன நடந்தது என்று தெரியவில்லை.




இரண்டாம் கனவு : இதுவும் சென்றவாரம் வந்த கனவு. நானும் என் நண்பனும் எதோ ஒரு விஷயத்தை செய்துக்கொண்டிருக்கிறோம். அந்த நண்பன் யாரென்று தெரியவில்லை. அவனும் நானும் ஏதோ ஒரு வேலையை செய்துக்கொண்டிருக்கிறோம். அது என்ன வேலை என்றுகூட தெரியவில்லை. எனக்கு அவனுக்கும் அந்த வேலை தொடர்பாக வாக்குவாதம் ஏற்படுகிறது. சிறிது நேரத்தில் நான் கைலாயத்தில் இருக்கிறேன். என் கண் முன் சிவனும் பார்வதிதேவியும் அமர்ந்திருக்கிறார்கள். நான் பக்தியோடு அவர்களை வணங்குகிறேன். அவர்கள் இருவரும் என்னை ஆசிர்வதிக்கிறார்கள். நான் அவர்களை வணங்கிவிட்டு வருகிறேன். அடுத்து என்ன நடந்தது என்று தெரியவில்லை.


மூன்றாம் கனவு: நேற்றிரவு வந்த கனவு இது. கனவு எங்கிருந்து ஆரம்பமாகிறது என்று தெரியவில்லை. எனக்கு நினைவில் இருப்பது என்னவென்றால், நான் ஒரு காவி உடையில் இருக்கிறேன். பாறைகள் நிறைந்த பாதையில் நான் நடந்துக்கொண்டிருக்கிறேன். என் முன்னர் சில யோகிகள் நடந்து சென்றுக்கொண்டிருக்கின்றனர். இமயமலைக்கு செல்கிறேனா அல்லது காசியில் இருக்கிறேனா என்பது எனக்கு தெரியவில்லை. ஒரு பெரிய பாறையின் மீது நடக்கிறேன். அதுமட்டும் நினைவில் இருக்கிறது. அடுத்து நான் அதே காவி உடையில் என் வீட்டில் இருக்கிறேன் நான். என் மாமாவை சந்திக்கிறேன். நான் காசிக்கு அல்லது இமயமலைக்கு சென்று வந்தேன் என்று கூறுகிறேன். அவரிடம் நான் எதையோ கொடுக்கிறேன். அதை அவர் வாங்கிவிட்டு, நீ அங்கேயே இருந்துவிடலாமே என்றார். பின்னர் அவரே, அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. அவசரப்படாதே என்கிறார். அதோடு, இன்று காலை இங்குதான் இருந்தாய். மாலை இங்கு இருக்கிறாய். அதெப்படி ஒரே நாளில் காசிக்கோ அல்லது இமயமலைக்கோ சென்று வரமுடியும் என்று கேட்டார். நான் ஏதும் பேசாமல் மௌனம் காத்தேன். பிறகு கனவு கலைந்தது.

* தினேஷ்மாயா *

0 Comments: