கண்கள் கலங்கிட கண்கள் கலங்கிட

Sunday, May 02, 2010



கண்கள் கலங்கிட கண்கள் கலங்கிட
காலச்சக்கரம் திரும்பிடுதே!
கைகள் கோர்த்திட கைகள் கோர்த்திட
கல்லும் மண்ணும் உயிர்பெறுதே!

கண்கள் கலங்கிட கண்கள் கலங்கிட
காலச்சக்கரம் திரும்பிடுதே!
கைகள் கோர்த்திட கைகள் கோர்த்திட
கல்லும் மண்ணும் உயிர்பெறுதே!

மரத்தில் இருந்து உதிர்ந்த பூக்கள்
மீண்டும் கிளைக்கு சென்றிடுதே!
கடந்த காலத்தை திருப்பித்தந்து
கடவுளை நட்பு வென்றிடுதே!

மரத்தில் இருந்து உதிர்ந்த பூக்கள்
மீண்டும் கிளைக்கு சென்றிடுதே!
கடந்த காலத்தை திருப்பித்தந்து
கடவுளை நட்பு வென்றிடுதே!

ஒன்றாய் சிரித்து அழுத இடத்தில்
மறு ஜென்மம் எடுக்கிறோமே!

தோற்றம் மாறலாம்! தொலைவில் போகலாம்!
ஞாபக 
மேகம் கலையாதே!
முகங்கள் மாறலாம்! முகவரி மாறலாம்!
நட்பின் கற்பு என்றும் மாறாதே!

படித்த நாட்கள் இங்கு பாத்திரமாக

பிடித்த நாடகம் நடக்கிறது..
வாழ்ந்த வாழ்க்கையை திருப்பித்தான் வாழ
வரங்கள் நமக்கு மட்டும் கிடைக்கிறது..

அட தொப்புள் கொடியின் உறவெல்லாம்

வெறும் பத்தே பத்து மாசம்..
நாம் தீயில் சேர்ந்து வேகும் வரை
இந்த கல்லூரி நம்முடன் பேசும்..

ஒன்றாய் சிரித்து அழுத இடத்தில்

மறு ஜென்மம் எடுக்கிறோமே!

வார்த்தை சங்கிலி அறுந்து போகலாம்

விழியின் மொழிகள் மட்டும் மாறாதே..
காற்றில்பேசிதான் விதைத்த வார்த்தைகள்
விருட்சம் ஆகி நிற்கும் அழியாதே..

வானம் தாண்டி எங்கும் பறந்திடும்போதும்

வேர்கள் நமக்கு என்று இதுவல்லவா..
கடலை பிரிந்த நீர் கார்முகிலாகும்
மீண்டும் மழையாய் தொடும் அல்லவா..

நாம் கனவுகள் வளர்த்து திரிந்தோமே

பல இரவும் பகலும் இங்கே.
இரு கைகள் குவித்துக் கும்பிடுவோம்
அட இதைவிட கோவில் எங்கே..

ஒன்றாய் சிரித்து அழுத இடத்தில்

மறு ஜென்மம் எடுக்கிறோமே!

கண்கள் கலங்கிட கண்கள் கலங்கிட

காலச்சக்கரம் திரும்பிடுதே!
கைகள் கோர்த்திட கைகள் கோர்த்திட
கல்லும் மண்ணும் உயிர்பெறுதே!

கண்கள் கலங்கிட கண்கள் கலங்கிட

காலச்சக்கரம் திரும்பிடுதே!
கைகள் கோர்த்திட கைகள் கோர்த்திட
கல்லும் மண்ணும் உயிர்பெறுதே!

மரத்தில் இருந்து உதிர்ந்த பூக்கள்

மீண்டும் கிளைக்கு சென்றிடுதே!
கடந்த காலத்தை திருப்பித்தந்து
கடவுளை நட்பு வென்றிடுதே!

மரத்தில் இருந்து உதிர்ந்த பூக்கள்
மீண்டும் கிளைக்கு சென்றிடுதே!
கடந்த காலத்தை திருப்பித்தந்து
கடவுளை நட்பு வென்றிடுதே!

ஒன்றாய் சிரித்து அழுத இடத்தில்
மறு ஜென்மம் எடுக்கிறோமே!

படம் : ஒரு கல்லூரியின் கதை..



இந்த பாடலை எழுதி முடிக்கும்போது என் கண்கள் குளமாகி மாறிவிட்டது..


- தினேஷ்மாயா



0 Comments: