கண்கள் கண்டது கண்கள் கண்டது

Sunday, May 02, 2010



கண்கள் கண்டது கண்கள் கண்டது
காணல் நீராய் மாறிடுதே
கனவுகள் அடிக்கிக் கட்டியக் கோட்டை
காற்றிம் மோதிட கலைகிறதே

கண்கள் கண்டது கண்கள் கண்டது 
காணல் நீராய் மாறிடுதே
கனவுகள் அடிக்கிக் கட்டியக் கோட்டை
காற்றிம் மோதிட கலைகிறதே

மரத்தின் கிளைகள் மலர்கள் கண்டேன்
வாசம் மட்டும் காணவில்லை
நடந்த பாதையில் திரும்பி பார்த்தேன்
காலடி எங்கே தெரியவில்லை..

மரத்தின் கிளைகள் மலர்கள் கண்டேன்
வாசம் மட்டும் காணவில்லை
நடந்த பாதையில் திரும்பி பார்த்தேன்
காலடி எங்கே தெரியவில்லை..

ஒன்றாய் சிரித்து அழுத உறவின்
விடுகதைகள் புரியவில்லை

கண்கள் கண்டது கண்கள் கண்டது
காணல் நீராய் மாறிடுதே
கனவுகள் அடிக்கிக் கட்டியக் கோட்டை
காற்றிம் மோதிட கலைகிறதே

தோற்றம் திரும்பலாம் தொட்டு நெருங்கலாம்
நிஜத்தின் காயங்கள் ஆறாதே
மாற்றம் நேரலாம் மறந்து சிரிக்கலாம்
மனதில் பெய்யும் மழை அடங்காதே
படித்த நாட்கள் இங்கு பாத்திரமாக
நடந்த நாடகம் முடிகிறதே
வாழ்ந்த வாழ்க்கையை திருப்பி தான் வாழ்ந்த
நட்பு என் மனது நெகிழ்கிறதே
அட தொப்புள் கொடியின் உறவை தான்
என் ஞாபகம் அறிந்தது இல்லை
அந்த துயரம் தீர்த்த நண்பர்களே
இந்த நட்புக்கு வானமே எல்லை

ஒன்றாய் சிரித்து அழுத உறவின்
விடுகதைகள் புரியவில்லை

கால சங்கிலி மீண்டும் இணையலாம்
காதல் சங்கிலி இணையாதே
காற்று பேசிதான் விதைத்த வார்த்தைகள்
கரைந்து போனது திரும்பாதே
பிடித்த கவிதையை எடுத்து படிக்கையில்
எழுத்து பிழை ஒன்று தெரிகிறதே
மரணம் என்பது ஒரு முறை கொல்லும்
காதல் பல முறை கொல்கிறதே
நான் கனவுகள் வளர்த்து திரிந்தேனே
பல இரவும் பகலும் இங்கே
அந்த நினைவுகள் போதும் வாழும் வரை
நெஞ்சில் துயரம் இல்லை

ஒன்றாய் சிரித்து அழுத உறவின்
விடுகதைகள் புரியவில்லை

கண்கள் கண்டது கண்கள் கண்டது 
கண்ணீர் துளியில் கரையாதே..
கனவுகள் அடுக்கிக் கட்டியக் கோட்டை
காற்றும் மோதிட கலையாதே..

கண்கள் கண்டது கண்கள் கண்டது 
கண்ணீர் துளியில் கரையாதே..
கனவுகள் அடுக்கிக் கட்டியக் கோட்டை
காற்றும் மோதிட கலையாதே..

மரத்தில் இருந்து பூக்கள் உதிரும்
மறுபடி பூத்திட மறுக்காதே..
மாலை சூரியன் மறைந்த பிறகும்
மறுநாள் உதிக்கும் மறக்காதே..

மரத்தில் இருந்து பூக்கள் உதிரும்
மறுபடி பூத்திட மறுக்காதே..
மாலை சூரியன் மறைந்த பிறகும்
மறுநாள் உதிக்கும் மறக்காதே..

ஒன்றாய் சிரித்த அழுத உறவின்
தொடர்கதைகள் தெரிந்துக் கொள்வாய்.....

படம் : ஒரு கல்லூரியின் கதை..

கண்ணில் நீருடனும் 
மனதில் நட்பின் வலியுடனும் -




- தினேஷ்மாயா

0 Comments: