
சமீபத்தில் என்னை கலங்கவைத்த பாடலின் வரிகள்...
நாட்கள் நகர்ந்து
வருடங்கள் கடக்கும்
நம் வாழ்க்கைப் பாதையில்..
என்றென்றும் நிழலைப்போலே
தொடரும்-
நம் நட்பின் பெருமைகள்..
கண்சிமிட்டி ஒரு
ஓரப்பார்வைப் பார்க்கும்
அந்த விண்மீன்கூட்டம்..
கதைகதையாய் சொல்லும்
அதன் காலம் முடியும்வரை..
சிறுபிள்ளை சண்டையாய்
சில சமயம் சிலிர்க்கிறோம்..
அன்பென்னும் கவசத்தால்
காத்து கொண்டோம்
நம் நட்பை..
ஒரே பிரசவத்தில்
என்னற்ற மலர்களை தந்த
இந்த கல்லூரித்தாயை-
நினைத்தாலே இனிக்கும்..
நினைத்தாலே இனிக்கும்..
நினைத்தாலே இனிக்கும்..
நினைத்தாலே இனிக்கும்.
நினைத்தாலே இனிக்கும்....
நம் நட்பின் தூரம்
அந்த அடிவானம் செல்லும்..
நம் நட்பின் தூரம்
அந்த அடிவானம் செல்லும்..
நட்புடன் -



தினேஷ்மாயா


0 Comments:
Post a Comment