
இந்தியாவின் தேசிய விலங்கு புலி.
இன்னமும் 1411 புலிகள் மட்டுமே இந்தியாவில் இருக்கின்றது.
பேசாமல் நம் இந்தியாவின் தேசிய விலங்காக நரியை அறிவித்துவிடுவோமா...
அதான் 110 கோடி இருக்கிறோமே..
நம் தேவைக்காக இயற்கையை அழிக்கும் அனைவரையும் நரி என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது...
இனியாவது உங்களால் இயன்றவரை நம் இயற்கையை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுங்கள்.
தேவையில்லாத போது மின்விளக்கு, மின்விசிறி மற்றும் அனைத்து மின் சாதனங்களையும் அணைத்து வையுங்கள்.
இயன்றவரை அதிக மரக்கன்றுகளை நட்டு வளர்க்க பாருங்கள்.
தண்ணீரை அதிகம் செலவழிக்காதீர்.
மரம் வெட்டுவதை தவிர்க்கப் பாருங்கள்.
இயற்கையின் பொருட்களையே அதிகம் பயன்படுத்துங்கள்.
செயற்கை பொருட்களின் வரவால்தான் இயற்கை அதிகம் பாதிக்கப் பட்டிருக்கிறது.
பெரிய அளவில் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்காதீர்கள்.
நிச்சயம் ஒரு நாள் நம் முயற்சி இந்த உலகையே மாற்றும் என்பதில் துளியளவும் ஐயமில்லை...
என்றும் அன்புடன் -



தினேஷ்மாயா


0 Comments:
Post a Comment