skip to main |
skip to sidebar
வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.
தினேஷ்மாயா....
முள்ளை முள்ளால்
Saturday, November 10, 2012
Posted by
தினேஷ்மாயா
@
11/10/2012 11:57:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
தூசி
Posted by
தினேஷ்மாயா
@
11/10/2012 11:53:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
தனித்து நில்
இந்த உலகத்தில் வாழ உனக்கு இடமே இல்லை என்றாலும், நீயாக உன் இருப்பிடத்தை உருவாக்கு. சந்தர்ப்பங்களை எதிர்பார்க்காமல் சந்தர்ப்பங்களை உருவாக்குபவனுக்கே இந்த உலகம் வாரி வாரி கொடுக்கும். தேடுபவனுக்குத்தான் பொருள் கிடைக்குமே தவிர, பொருள் தானாக தேடிவரும் என்று நினைப்பவனுக்கு கிடைக்காது. உன் பாதையை நீதான் அமைத்துக்கொள்ள வேண்டுமே தவிர, உன் பாதையை இன்னொருவன் இட்டுசெல்ல நீ விடக்கூடாது. எதிலும் கொஞ்சம் தனித்து நில். அதாவது தனித்தன்மையுடன் நில். வெற்றி உன் காலடியில்.
- அன்புடன்
****தினேஷ்மாயா****
Posted by
தினேஷ்மாயா
@
11/10/2012 11:48:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
படிச்ச மக்கா...

சில வாரங்களுக்கு முன்னர் ஒரு செய்தி படித்தேன். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மூன்றுபேரை கண்காணிப்பு கருவியின் உதவியுடன் காவல்துறையினர் பிடித்தனர் என்று. எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், பிடிப்பட்ட மூன்றுபேருமே படித்த பட்டதாரிகள். அதில் ஒருவர் MCA பட்டதாரி, இன்னொருவர் BSc, மற்றொருவர் கல்லூரி முதலாமாண்டு மாணவர். எனக்கு அப்போது மனசு சுருக்கென்று குத்தியது. படித்த இளைஞர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று. வெறும் வயிற்றுப்பிழைப்புக்காக ஒன்றும் இவர்கள் இதை செய்திருக்க மாட்டார்கள். திருட்டு என்பது வேறு கொள்ளை என்பது முற்றிலும் வேறு. படித்தவர்கள்தான் இன்றைய காலகட்டத்தில் அதிக குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் என்கிறது காவல்துறை. இது யாருடைய தவறு என்றுதான் தெரியவில்லை. ஒரு நல்ல மாணவனை உருவாக்க தவறியது ஆசிரியரின் குற்றமா இல்லை ஒரு நல்ல மனிதனை உருவாக்காதது இந்த சமூகத்தின் குற்றமா. குற்றங்களை நாம் செய்துவிட்டு தவறு செய்த அவர்களை குறைகூறக்கூடாது. ஒருவன் திருடுகின்றான் என்றால், அவன் அதை முதலில் செய்தபோதே அவனை திருத்தாமல் விட்டுவிட்ட சமூகம் தானே அவன் செய்யும் அடுத்தடுத்த திருட்டுகளுக்கும் காரணம். படித்தவர்கள்தான் அதிக குற்றங்களை செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள், சரி. படித்தவர்கள் என்றால் எதை படித்தவர்கள் ? வெறும் புத்தகங்களை மட்டுமல்லவா இன்றைய மாணவர்கள் படிக்கிறார்கள். நல்ல பண்பை சொல்லித்தரவும் ஆளில்லை, இப்படி இருக்க கூடாது என்று சுட்டிக்காட்டவும் ஆளில்லை. மக்களுக்கும் மாணவர்களுக்கும் சின்ன குழந்தைகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய பல சமூக சாதனங்கள் எல்லாம் ஊனமாகிவிட்டதை எண்ணி வருந்தத்தான் முடிகிறதே தவிர சமூகத்தின் அடிவரை இறங்கி தூர்வார கைக்கோர்க்க யாரும் முன்வருவதில்லை.
- ரௌத்திரத்துடன்
****தினேஷ்மாயா****
Posted by
தினேஷ்மாயா
@
11/10/2012 11:37:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
புயலோடு விளையாடி..
Posted by
தினேஷ்மாயா
@
11/10/2012 11:10:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
நீ.......ல வானம்..
Posted by
தினேஷ்மாயா
@
11/10/2012 01:36:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
நல்ல முன்னேற்றம்தான்
Posted by
தினேஷ்மாயா
@
11/10/2012 01:34:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
இதயம் என்ன செய்தது
Posted by
தினேஷ்மாயா
@
11/10/2012 01:31:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
தெம்பு இல்ல
Posted by
தினேஷ்மாயா
@
11/10/2012 01:30:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
வாழ்க்கைப் பயணம்
Sunday, November 04, 2012

இரண்டு
மிகப்பெரிய மலைகளின் நடுவே மிக நீண்ட
பாலம். அந்த பாலம் கடல்மட்டத்தில்
இருந்து பல ஆயிரம் அடி
உயரத்தில் இருக்கிறது. அதன்மீது நாம் நடந்து செல்கிறோம்.
கையில் நமக்கு மிகவும் பிடித்த
ஒரு பொருளை எடுத்து செல்கிறோம்.
பலத்த காற்று வீசுகிறது. நம்
மனதிற்கு மிகவும் பிடித்த அந்த
பொருள், நாம் உயிராய் கருதிய
அந்த பொருள் கை தவறி
கீழே விழுந்து விடுகிறது. நாம் என்ன செய்வோம்.
ஒரு நிமிடம் நின்று தவறவிட்ட
தருணத்தை எண்ணி வருந்துவோம். அந்த
பொருளை இழந்த வலியுடன் இருப்போம்.
ஆனால், அடுத்த நொடி நம்
பயணத்தை தொடர வேண்டும் என்று
அடுத்த அடியை எடுத்து வைப்போம்.
இழந்த பொருளை நினைத்து அங்கேயே
நின்றுக்கொண்டிருந்தால், கீழே விழுந்தது திரும்ப
வந்துவிடாது, நாமே அதனுடன் கீழே
விழுந்தாலும் அதை திரும்ப பெற்று
அந்த பாலத்திற்கு திரும்பிவர முடியாது. தவறவிட்டது யார் தவறு, நம்
தவறா இல்லை காற்றின் தவறா
என்று ஆராயாமல் அடுத்த செயலை நோக்கி
செல்வதுதான் வாழ்க்கை.
இதைத்தான்
நான் செய்துக்கொண்டிருக்கிறேன்.....
- அன்புடன்
****தினேஷ்மாயா****
Posted by
தினேஷ்மாயா
@
11/04/2012 01:08:00 AM
2
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
கேள்வி
Friday, November 02, 2012
Posted by
தினேஷ்மாயா
@
11/02/2012 02:19:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
பேய் இருக்கா
Posted by
தினேஷ்மாயா
@
11/02/2012 02:10:00 AM
2
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
பாகற்காய் தோட்டம்
Posted by
தினேஷ்மாயா
@
11/02/2012 02:09:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
தூக்கம்
Posted by
தினேஷ்மாயா
@
11/02/2012 02:00:00 AM
2
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
சுமைதாங்கி
Posted by
தினேஷ்மாயா
@
11/02/2012 12:46:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
தெரிதலும் புரிதலும்
Thursday, November 01, 2012
என்னை இங்கு பலருக்கு தெரியும். ஆனால் வெகு சிலருக்கு மட்டுமே புரியும். வாழ்க்கையில் தெரிதலைவிட புரிதல்தான் மிக முக்கியமானது. மாணவர்களும்கூட, தெரிந்துக்கொள்ள படிப்பதைவிட புரிந்துக்கொள்ள படிக்க வேண்டும். இது மாணவர்களின் கல்விக்கு மட்டுமல்ல நம் வாழ்க்கைப்பாடத்திற்கும் பொருந்தும். ஆயிரம் நண்பர்கள் இருந்தும் யாரும் நம்மை புரிந்துக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் வெறும் பேச்சுக்காக நண்பர்களாக இருக்கின்றனர் என்றே அர்த்தம். நம்மை உண்மையாக புரிந்துக்கொண்டவர் ஒருவராக இருந்தாலும் அவரே அந்த ஆயிரம் நண்பர்களுக்கு சமமானவர். எப்போது பழகினாலும் ஒருவரை தெரிந்துக்கொள்வதைவிட அவரை புரிந்துக்கொள்ள முயலுங்கள்.
- அன்புடன்
****தினேஷ்மாயா****
Posted by
தினேஷ்மாயா
@
11/01/2012 11:19:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
2008 New Year
2008-ஆம் ஆண்டு புத்தாண்டின் முதல் தினத்தன்று அவளும் நானும் கோயிலுக்கு சென்றோம். அவள் அதிகம் மல்லிப்பூ தான் விரும்புவாள் என்று எனக்கு தெரியும். அன்று விசேஷ நாள் என்பதால் பூக்கள் சீக்கிரமே விற்பனையாகிவிட்டது. அவள் என்னிடம் கேட்டிருந்தாள், இந்த புத்தாண்டிற்கு நீ எனக்கு பூ வாங்கி தா அது போதும் என்று. அவளின் ஆசைக்காக, ஒருவழியாக மல்லிப்பூவை தேடி கண்டுபிடித்து வாங்கிவிட்டேன். அவளுக்கு ரோஜாப்பூவும் பிடிக்கும். அதையும் வாங்கிக்கொண்டேன். கோயிலுக்கு சென்று இருவரும் அம்மனை வழிப்பட்டோம். இந்த கோயிலுக்குத்தான் நானும் அவளும் பன்னிரண்டாவது படிக்கும்போது வாராவாரம் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வணங்கிவிட்டு செல்வோம். இந்த கோயிலுக்கு நான் தனியாய் வந்ததைவிட அவளுடன் வந்ததுதான் அதிகம். அம்மனை வணங்கிவிட்டு கோயிலை சுற்றி வலம்வந்துவிட்டு, நவக்கிரகத்தையும் வலம்வந்து வணங்கிவிட்டு அங்கே இருந்த ஓர் இடத்தில் அமர்ந்தோம். அவள் ஆசைப்படி அவளுக்கு நான் பூ சூட்டிவிட்டேன். மனம் நெகிழ்ந்தாள் என்னவள். பின் என்னைப்பார்த்து புன்னகைப்பூ பூத்தாள். Happy New Year என்று வாழ்த்தினாள். வாழ்த்திவிட்டு என் நெற்றியில் அவள் திருநீறை வைத்தாள். ALL THE BEST DEAR என்று வாழ்த்தினாள். சிறிது நேரம் மனம்விட்டு பேசினோம். அம்மனுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பிவந்தோம். என்னால் மறக்க முடியாத தினம் அது. நினைவில் இன்னமும் கட்டில்போட்டு உட்கார்ந்திருக்கிறது அந்த தினம்.
பி.கு.: 10% உண்மை 90% கற்பனை. என் மனதில் இருக்கும் சின்னஞ்சிறு ஆசைகளை கற்பனையால் செதுக்கி இப்படி கதையாக மாற்றிவிடுகிறேன். இப்படி நடக்காவிட்டாலும், இதை படிக்கையில் இப்படி நடந்த சந்தோஷம் ஏற்படுகிறதே ! அது போதாதா என்ன ?!
****தினேஷ்மாயா****
Posted by
தினேஷ்மாயா
@
11/01/2012 11:14:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
அவளுடன் ஒரு சின்ன தீபாவளி..
அப்போது நான் கல்லூரி முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். அந்த தீபாவளியை அவளுடன் கொண்டாடவேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. ஆனால் அவர்கள் வீட்டிலோ அவளை வெளியே அனுப்பவில்லை. நானும் எவ்வளவோ முயற்சித்தேன் அவளை சந்திக்க. மாலை 5 மணிவரை முடியவில்லை. அப்புறம் அவளே என்னை தொலைப்பேசியில் அழைத்து அவள் வீட்டினருகே வரச்சொன்னாள். சரி, எப்படியும் அவளுடன் அதிகம் பேசமுடியாது என்று தெரிந்துக்கொண்டேன். சரியென்று, ஒரு சின்ன லட்சுமி வெடியை மட்டும் என் கையில் எடுத்துக்கொண்டேன். அவள் வீடு நோக்கி சென்றேன். அவள் வீட்டில் எல்லோரும் உள்ளே இருந்தார்கள். இவள் எனக்காக வெளியே காத்திருந்தாள். யாரும் வரும் முன்னே, சைக்கிளைவிட்டு கீழேகூட இறங்காமல், அவளிடம் கைகொடுத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தேன். எனக்கு ரொம்ப பிடிச்ச Milky Bar - சாக்லெட்டை என் கையில் திணித்தாள். சீக்கிரம் போடா என்றாள். நானும் அவள் கையில் நான் கொண்டுவந்த லட்சுமி வெடியை திணித்தேன். நான் உன் தெருவின் மூலையில் நிற்கிறேன். நீ இதை வெடிப்பதை பார்த்துவிட்டுதான் செல்வேன் என்றேன். இப்போ முடியாது நான் அப்புறம் வெடிச்சுக்கறேன் நீ சீக்கிரம் கிளம்பி போ, என்றாள். நான் முடியாது என்று சொல்லி அங்கேயே நின்றேன். அவளுக்கோ பதட்டம், வீட்டிலிருந்து யாராச்சும் வெளியே வந்துவிடுவார்களோ என்று. அவர்களை சமாளிப்பதைவிட என்னையே சமாளிச்சுடலாம் என்று, சரி நீ போ நான் வெடிக்கிறேன் என்றாள். அந்த கால்முளைத்த கத்திரிக்காய் நான் கொடுத்த லட்சுமி வெடியை திரியை கிழித்து வெடித்தை என் கண்களால் பார்த்து ரசித்தபின் அவள் தெருவை விட்டு சென்றேன். அவளுடனான என் 7 வருட காதல் வாழ்க்கையில் இதுதான் நான் அவளுடன் கொண்டாடிய முதலும் கடைசியுமான தீபாவளி. என்னால், மறக்கமுடியாத தீபாவளி.
Happy Diwali Dear !!!!
10% உண்மை 90% கற்பனை கலந்த கதை
என் மனதில் இருக்கும் சின்னஞ்சிறு ஆசைகளை கற்பனையால் செதுக்கி இப்படி கதையாக மாற்றிவிடுகிறேன். இப்படி நடக்காவிட்டாலும், இதை படிக்கையில் இப்படி நடந்த சந்தோஷம் ஏற்படுகிறதே ! அது போதாதா என்ன ?!
என் மனதில் இருக்கும் சின்னஞ்சிறு ஆசைகளை கற்பனையால் செதுக்கி இப்படி கதையாக மாற்றிவிடுகிறேன். இப்படி நடக்காவிட்டாலும், இதை படிக்கையில் இப்படி நடந்த சந்தோஷம் ஏற்படுகிறதே ! அது போதாதா என்ன ?!
****தினேஷ்மாயா****
Posted by
தினேஷ்மாயா
@
11/01/2012 10:58:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
பணம் மட்டும் வாழ்க்கையா ?
நான் எழுதிய “எங்கு நோக்கினும் பணம்” என்னும் பதிவிற்கு என் தோழி ஒருத்தர், பணம் இல்லாவிட்டால் உறவுகள், நண்பர்கள் இப்படி எல்லோரும் நம்மை உதாசீனப்படுத்துவர் என்று கருத்து தெரிவித்திருந்தார். பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை அனைவரும் அறிவர். ஆனால், பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பதை நானும் அறிவேன்.உயிர் வாழ பிராணவாயு தேவை. ஆனால், வெறும் பிராணவாயு மட்டும்போதுமா நாம் வாழ? சரி, நாம் உயிர் வாழ தண்ணீர் மிகவும் முக்கியம். சரி, நைல் நதியை உங்கள் பெயரில் எழுதி வைக்கிறேன், அந்த தண்ணீரை மட்டும் கொண்டு உங்கள் வாழ்க்கை வாழமுடியுமா. முடியாது.
நாம் உயிர்வாழ பிராணவாயு முக்கியம். தண்ணீ முக்கியம். அதே போலத்தான் பணமும் முக்கியமே தவிர, பணம் மட்டுமே முக்கியம் அல்ல. சிறந்ததொரு எதிர்காலத்தை செதுக்கும் வேலையில் நாம் இன்று கிடைக்கும் நிகற்காலத்தை இனிதாய் வாழ மறக்கின்றோம். நாளை என்பது தினமும் வரத்தான் செய்யும். ஆனால் நாளை என்ன நடக்கும் என்பது யாருக்குமே தெரியாது. இன்று இருப்பது மட்டும்தான் நிஜம். அந்த உண்மையை உணர்ந்து இன்றைய பொழுதை மனதிற்கு சந்தோஷமாய் வாழவேண்டும். நாளைய பொழுதை சிறப்பாய் அமைக்க பாடுபடுகிறேன் என்பவர்கள் என்றுமே, நாளைக்குத்தான் உழைப்பார்களேயன்றி உழைத்து சம்பாதித்ததை எப்போது அனுபவிப்பது என்பதை மறந்துவிடுகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் ஒரு செய்தி படித்தேன். இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை ஒரு செய்தித்தாள் வெளியிட்டது. சென்ற வருடம் முதல் இடத்தில் இருந்தவர் இந்த வருடமும் முதலிடம் என்று. சிரித்தேன் நான். செய்தித்தாள் என்னும் காகித்ததில் தங்கள் பெயர் இடம்பெறத்தான் இவர்கள் உழைக்கிறார்கள் போல. எல்லோரும் ஒருநாள் கல்லைறையில் இடம்பெறத்தான் போகிறோம். பணம் சம்பாதிப்பதே செலவு செய்யத்தான் என்பதை அனைவரும் பல நேரங்களில் மறந்துவிடுகின்றனர்.
எது எப்படியோ, என் கைகளால் எவ்வளவு தாங்க முடியுமோ அவ்வளவு மட்டும்தான் என்னால் தாங்க முடியும். அந்த அளவிற்கு ஈன்று, அதில் பாதியை செலவு செய்து, மிச்சத்தில் பாதியை சேவை செய்து, மிச்சமான கால் பகுதியை சேர்த்துவைத்து வாழ்வதுதான் என் பாதை.
- அன்புடன்
****தினேஷ்மாயா****
Posted by
தினேஷ்மாயா
@
11/01/2012 10:29:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
நறுமண காதலி..
சும்மா இருக்கும்போது எனக்கு வந்த யோசனை இது. ஒரு கடைக்கு Perufume- வாங்க செல்கிறோம். அங்கே பல நறுமண பொருட்கள் இருக்கிறது. பலவற்றை நுகர்ந்து பார்த்துவிட்டு, நமக்கு பிடித்த ஒரு நறுமண திரவியத்தை வாங்கி வருகிறோம். அங்கே அவ்வளவு இருந்தும் நாம் வாங்கி வந்ததுதான் அதிகமாய் நம்மை கவர்ந்திருக்கும், அதனால்தான் அதை நாம் வாங்கி வந்திருக்கிறோம். ஆனால், சில நாட்கள் சென்றபிறகு அந்த வாசனை திரவியத்தின் நறுமணம் நமக்கு பழகிப்போய்விடும். அடுத்தமுறை இதை வாங்ககூடாது, வேறொரு திரவியத்தைதான் வாங்க வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு அது நமக்கு புளித்துபோய்விடும் அல்லது சில நேரங்களில் ஏண்டா இதை வாங்கினோம் என்றும் கூட நினைக்க தோன்றும். அதுபோலத்தான் காதலும், ஆயிரம் பெண்கள் இருக்கும்போது அவள் ஒருத்தியைத்தான் மனம் விடாமல் துரத்தும். கிடைக்காவிட்டால் உயிரையும்விட துணிவோம். அவள் கிடைத்தபின்பு, ஏண்டா இவளை காதலிச்சோம், ஏண்டா இவளை கல்யாணம் செஞ்சுக்கிட்டோம் என்று தோன்றும். அதுதான் வாழ்க்கை. என்ன செய்றது சொல்லுங்க !!
- அன்புடன்
****தினேஷ்மாயா****
Posted by
தினேஷ்மாயா
@
11/01/2012 10:02:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
திருச்செந்தூர் இராஜபோபுரம்
Tuesday, October 30, 2012
Posted by
தினேஷ்மாயா
@
10/30/2012 09:09:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
பச்சைத்தமிழ்
Sunday, October 28, 2012

இவன் யார்?’ என்குவை
ஆயின், இவனே,
புலிநிறக் கவசம்
பூம்பொறி சிதைய,
எய்கணை கிழித்த
பகட்டுஎழில் மார்பின்,
மறலி அன்ன களிற்றுமிசை
யோனே;
களிறே, முந்நீர்
வழங்கு நாவாய் போலவும்,
பன்மீன் நாப்பண்
திங்கள் போலவும்,
சுறவு இனத்து அன்ன
வாளோர் மொய்ப்ப,
மரீஇயோர் அறியாது,
மைந்துபட் டன்றே;
நோயிலன் ஆகிப்
பெயர்கதில் அம்ம!
பழன மஞ்ஞை உகுத்த
பீலி
கழனி உழவர் சூட்டொடு
தொகுக்கும்,
கொழுமீன், விளைந்த
கள்ளின்,
விழுநீர் வேலி
நாடுகிழ வோனே.
புறநானூறு : 13
- நோயின்றிச் செல்க!
பாடியவர் : உறையூர்
ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்
: சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி.
திணை : பாடாண்.
துறை : வாழ்த்தியல்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இது புறநானூற்றில் இருந்து எடுக்கப்பட்ட பாட்டு. இதை நான் இங்கே எதற்காக பதிவு செய்திருக்கிறேன் என்று கேட்கிறீர்களா ?
மேலே புறநானூற்றில் இருப்பதும் தமிழ்தான், நான் இங்கே எழுதுவதும் தமிழ்தான். ஆனால், புறநானூற்றில் இருப்பது நமக்கு அவ்வளவாக புரிவதில்லையே. ஏன்??
தமிழை நாம் வாழவைக்கிறோம் என்று எவ்வளவு கொலை செய்திருக்கிறோம் என்று தெரிகிறதா. சங்க காலத்து தமிழ் என்று பிரித்து சொல்ல வேண்டாம். அதுவும் தமிழ்தான். அந்த தமிழை வேற்றுமொழிகளில் கலப்பால், நாம் கொஞ்சம் கொஞ்சமாய் அழித்துவிட்டோம் என்பதுதானே மறுக்கமுடியாத உண்மை. இன்றைய சூழலில் வெறும் ஏட்டுக்களில் மட்டுமே வாழ்ந்துக்கொண்டிருக்கிறது என் பச்சைத்தமிழ். இப்போது இருப்பதெல்லாம் சாயம் வெளுத்துப்போன தமிழ் மட்டுமே. சங்க இலக்கியத்தை அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை அறிந்துக்கொள்ள அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள். அதுதான் ஒரு பச்சைத்தமிழனுக்கு அழகு..
- அன்புடன்
****தினேஷ்மாயா****
Posted by
தினேஷ்மாயா
@
10/28/2012 11:53:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
ஆசை
என் ஆயிரமாவது பதிவில் எனது சின்ன சின்ன ஆசைகளை பதிவு செய்திருந்தேன். இன்னும் சொல்ல ஆயிரம் ஆயிரம் ஆசைகள் மனதில் ஒளிந்திருக்கிறது. இப்போது சில வித்தியாசமான ஆசைகள் சிலவற்றை இங்கே பதிய விரும்புகிறேன்.
- முற்றிலும் நான்கு சுவர்களால் மட்டுமே ஆன ஒரு அறை. அதில் கதவுகூட இருக்க கூடாது. மின்விசிறி, ஜன்னல், நாற்காலி இப்படி எதுவும் அங்கே இருக்க கூடாது. வெறும் அறையாக இருக்க வேண்டும். என்னிடமும் எந்தவொரு பொருளும் இருக்க கூடாது. அந்த அறையில் நான் ஒருநாள் இருக்க வேண்டும். என்னத்தான் நான் அப்படி செய்கிறேன் என்று நான் பார்க்க வேண்டும்.
- ஒரு தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு பொழுதில் தன்னந்தனியாய் தூரத்தில் இருக்கும் ஊர் நோக்கி என் கைப்பேசியில் பாடல்களை கேட்டவாரே நடந்து செல்ல வேண்டும்.
- ஒரு பெரிய நீர்வீழ்ச்சியின் மேலே இருந்து கீழே குதிக்க வேண்டும். பாராஷூட் உதவியுடன் !!
- ஒரு நூறு அடியாட்களின் மத்தியில் தனியாளாய் மாட்டிக்கொண்டு, ஒரு ஹீரோ போல அனைவரையும் சண்டையிட்டு ஜெயிக்கனும்.
- சஹாரா பாலைவனத்தில் ஒரு நாளை கடக்க வேண்டும்.
- Igloo-வின் உள்ளே ஓரிரவு தங்க வேண்டும்.
இனியும் நிறைய இருக்கு. அடுத்தபதிவில் சொல்கிறேன்.
- அன்புடன்
****தினேஷ்மாயா****
Posted by
தினேஷ்மாயா
@
10/28/2012 11:23:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
எவ்வளவோ முயற்சித்தேன்
“எவ்வளவோ முயற்சித்தேன்”
பெரும்பாலான மனிதர்கள் தங்கள் தோல்வியை நியாயப்படுத்த சொல்லும் வார்த்தை இது. வெற்றியாளர்கள் என்றுமே காரணங்களை சொல்வதில்லை. தோல்வியாளர்கள் மட்டுமே தங்கள் தோல்வியை ஏற்கமுடியாமல் காரணம் சொல்வார்கள். எவ்வளவோ முயற்சித்தேன் என்கிறார்கள். எவ்வளவு வரை முயற்சித்தார்கள் என்று அவர்களால் சொல்ல முடியாது. வெற்றியாளர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வரை முயற்சிப்பதில்லை. அவர்கள் வெற்றி கிட்டும்வரை முயற்சிப்பார்கள்.
NEVER GIVE UP - என்று ஆங்கிலத்தில் ஒரு நல்ல வாசகம் சொல்வார்கள்.எவ்வளவோ முயற்சித்தேன் என்று சொல்பவர்கள் எதோ ஒரு இடத்தில் முயற்சியை விட்டுவிட்டார்கள் என்று அர்த்தம். ஆனால், வெற்றி கிட்டும்வரை தொடர்ந்து முயற்சி செய்பவனே வெற்றியை முத்தமிடுவான் என்று எத்தனையோ பழமொழிகள் இருக்கு, பல்வேறு நாட்டு மேதைகளும் பலவாறு சொல்லிவைத்து சென்றாலும் அதை நம் மனது தேவைப்படும் இடத்தில் நினைவில் வைத்துக்கொள்ள மறக்கிறது, மறுக்கிறது....
- அன்புடன்
****தினேஷ்மாயா****
Posted by
தினேஷ்மாயா
@
10/28/2012 10:55:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
செத்துடலாம் போல இருக்கு
Posted by
தினேஷ்மாயா
@
10/28/2012 10:48:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
தத்துவமழை
பொதுவாக மனிதன் தனிமையில் இருக்கும்போதும், அதுவும் சோகத்தில் இருக்கும்போதும்தான் அதிகமாக தத்துவ மழை அவனுள் பெய்கிறது. ஏமாற்றமும், தோல்வியும் சில சமயங்களில் பல தத்துவங்களை ஊற்றெடுக்க செய்கிறது.
எனக்கும் ஒரு சின்ன சோகம். அப்போது உதிர்ந்த தத்துவத்தைதான் எனது “கசப்பான உண்மை” என்னும் முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்.
வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களைவிட சோகமான தருணங்கள்தான் மனிதனுக்கு வாழ்க்கையையும் , வாழ்க்கையின் மற்ற பாடங்களையும் கற்றுக்கொடுக்கிறது.
- அன்புடன்
****தினேஷ்மாயா****
Posted by
தினேஷ்மாயா
@
10/28/2012 03:18:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
கசப்பான உண்மை
Posted by
தினேஷ்மாயா
@
10/28/2012 02:42:00 PM
2
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
நம் தனி உலகம்
Monday, October 22, 2012
Posted by
தினேஷ்மாயா
@
10/22/2012 09:51:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
அன்பு
Posted by
தினேஷ்மாயா
@
10/22/2012 09:11:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
ஒருநாள்
ஒருநாள் நிச்சயம் அவளை நான் சந்திக்க நேரிடும். அப்போது எவ்வளவு பணம் நான் சம்பாதித்திருப்பேன் என்று எனக்கு தெரியாது. ஆனால், அவள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு நிறைய அன்பையும் நல்ல உள்ளங்களையும் சம்பாதித்திருப்பேன். அந்த அற்புதமான வாழ்க்கையை என்னுடன் வாழமுடியாமல் போனதற்கு அவள் தான் அன்று வருத்தப்படுவாளே தவிர அவள் பிரிந்து சென்றதற்காக நான் வருந்தமாட்டேன்.
- அன்புடன்
****தினேஷ்மாயா****
Posted by
தினேஷ்மாயா
@
10/22/2012 09:11:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
சிற்றின்பம்
Sunday, October 21, 2012
அனாதை குழந்தைகளை பார்க்கும் போது, இரண்டு உயிர்கள் அவசரத்தில் செய்யும் தவறுக்காக இன்னொரு உயிர் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறது. ஏன் இவர்களின் சிற்றின்ப சந்தோஷத்திற்காக எந்த ஒரு தவறும் செய்யாத ஒரு உயிரை தேவையில்லாமல் ஆயுசு முழுக்கவும் துன்பத்தில் விட்டு செல்கின்றனர் என்று தோன்றுகிறது.
நாம் செய்யும் ஒவ்வொரு விஷயமும் எதாவது ஒரு விஷயத்தில் மற்றவர்களை பாதிக்கத்தான் செய்யும். ஆனால், அந்த பாதிப்பு பெரிதாய் இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சில நிமிட சந்தோஷத்திற்கு ஆசைப்பட்டு அவர்கள் செய்யும் தவறை மறைக்க குழந்தைகளை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடுகின்றனர். தாய் தந்தை பெயரே தெரியாத குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன். அடிக்கடி அவர்களை பார்க்க செல்லும்போதெல்லாம் அவர்கள் அதிகம் மகிழ்வர். எங்களை வந்து பார்க்க சொந்தம் என்று யாருமில்லை, நீங்கள் எங்கள் அனைவரையும் பார்க்க வருவது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கு என்பார்கள். குழந்தையை ஆசிரமத்தில் விட்டதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாய் எண்ணுகின்றனர். பின்னர் தங்கள் வாழ்க்கையை பார்த்து ஓடத்துவங்கிவிடுகின்றனர். ஒரு குழந்தை தான் அனாதை, தனக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை என்பதை உணரும்போது அந்த தருணத்தில்அதன் மனது எவ்வளவு வலிக்கும் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. தங்கள் நண்பர்கள் வீட்டில் பெற்றோருடன் வாழும்போது அதை எண்ணி இவர்கள் எவ்வளவு துடித்துப்போவார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன். இவர்கள் பெற்றோர் செய்யும் சிறிய தவறு வாழ்க்கை முழுவதும் இவர்களுக்கு எவ்வளவு பெரிய துன்பம் என்பது அவர்கள் சந்தோஷமாக இருக்கும் அந்த தருணத்தில் தோன்றுவதேயில்லை. மனிதன் என்பவன் இன்பத்திற்கு அடிமை என்பதற்கு இதுவே ஒரு சிறந்த எடுத்துகாட்டு என்பேன் நான்.
- அன்புடன்
****தினேஷ்மாயா****
Posted by
தினேஷ்மாயா
@
10/21/2012 07:53:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
கற்றது தமிழ்..
Posted by
தினேஷ்மாயா
@
10/21/2012 12:14:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
துன்பம்
Posted by
தினேஷ்மாயா
@
10/21/2012 12:01:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
அன்பு மகனுக்கு
Saturday, October 20, 2012
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!
வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.
பொறுப்பாய்
என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!
முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி
எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!
இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது
நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!
இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.
நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…
உறவுகள் இதுதானென்று!!
இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!
முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி
எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!
இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது
நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!
இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.
நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…
உறவுகள் இதுதானென்று!!
@ படித்ததில் பிடித்தது @
- அன்புடன்
****தினேஷ்மாயா****
Posted by
தினேஷ்மாயா
@
10/20/2012 11:57:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
எங்களை வாழவிடுங்கள்
Posted by
தினேஷ்மாயா
@
10/20/2012 11:54:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
அவள் நினைவாக
Friday, October 19, 2012
Posted by
தினேஷ்மாயா
@
10/19/2012 03:29:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
சுயமுயற்சி
Posted by
தினேஷ்மாயா
@
10/19/2012 03:27:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
7/G ரெயின்போ காலனி
இந்த திரைப்படம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் எனக்கு இந்த திரைப்படத்தை பார்க்க சரியான நேரம் கிடைக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்னர்தான் இந்த திரைப்படத்தை பார்த்தேன். சாதாரண காதல் கதை என்று இதை சொல்லிவிட முடியாது. வழக்கமான காதல் கதை இல்லை இது. உண்மையான காதல் கதை என்றும் சொல்லி இதை விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் எது எப்படியோ. என் மனதை இந்த திரைப்படம் வெகுவாய் கவர்ந்துவிட்டது. கடைசியில் கண்களில் அல்ல, மனதில் கண்ணீரை வரவைத்துவிட்டது. அதுவும் இந்த திரைப்படத்தை அவள் என்னை பிரிந்து சென்றபிறகுதான் பார்த்தேன். அதனால்தானோ என்னவோ தெரியவில்லை இந்த படம் மனதில் ஆழமாய் பதிந்துவிட்டது. அதை என் வலையில் நிச்சயம் பதிந்தே தீரவேண்டும் என்று நினைத்தேன்.
காதலியை துரத்தி துரத்தி காதலிக்கும் நாயகன் நன்றாக நடித்துள்ளார். இது ரவிகிருஷ்ணாவிற்கு முதல் படம் என்றுதான் நினைக்கிறேன். வெகுளியான காதலன் கதாபாத்திரத்தில் கச்சிதமாய் பொருந்தியுள்ளார்.
காதலை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தடுமாறும் போது இன்றைய பெண்களின் மனநிலையை அப்படியே நடிப்பில் வெளிகாட்டியுள்ளார் சோனியா அகர்வால்.
முதலில் ரவிகிருஷ்ணாவின் காதலை வெறுப்பது ஒரு பெண்ணின் பக்கம் இருந்து பார்க்கும்போதுதான் அவளின் கஷ்டங்கள் என்ன என்று தெரிகிறது. இதை வெறும் படமாய் நான் பார்க்கவில்லை. இன்றைய காதலர்களின் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாய்த்தான் பார்த்தேன்.
இந்த திரைப்படம் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை அப்படியே பதிவு செய்ய என்னால் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. சில விஷயங்களை பதிவு செய்வதைவிட உணர்வதில்தான் அதிகம் இன்பம் கிடைக்கிறது.
- அன்புடன்
****தினேஷ்மாயா****
Posted by
தினேஷ்மாயா
@
10/19/2012 01:51:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
விழியில் உன் விழியில்

கண்ணோடு கண் சேரும்போது
வார்த்தைகள் எங்கே
போகும் ?
கண்ணே உன் முன்னே
வந்தால்
என் நெஞ்சம் குழந்தை
ஆகும்…
விழியில் உன் விழியில்
வந்து விழுந்தேன்
அந்த நொடியில்
என் எதிர்காலம்
நீதான் என்று உயிர்
சொன்னதே...
வழியில் உன் வழியில்
வந்து நடந்தேன்
அந்த நொடியில்
என் வழிதுணை
நீதான் என்று நிழல்
சொன்னதே...
உன்னோடு வாழ்ந்திடத்தானே
நான் வாழ்கிறேன்..
உன் கையில் என்னை
தந்து தோள்சாய்கிறேன்
ஓ தோள்சாய்கிறேன்
..
விழியில் உன் விழியில்
வந்து விழுந்தேன்
அந்த நொடியில்
என் எதிர்காலம்
நீதான் என்று உயிர்
சொன்னதே...
வழியில் உன் வழியில்
வந்து நடந்தேன்
அந்த நொடியில்
என் வழிதுணை
நீதான் என்று நிழல்
சொன்னதே...
இதுவரை என் இருதயம்
இந்த உணர்வினில்
தடுமாறவில்லை
முதல்முறை இந்த
இளமையின்
சுகம் உணர்கிறேன்
நான் தூங்கவில்லை
குடையோடு நான்
போனேன்
மழையினில் ஏனோ
நனைகின்றேன்..
கடிகாரம் இருந்தாலும்
காலடி சத்தத்தில்
மணி பார்த்தேன்..
என் தனிமைக்கு
தனிமைகள் நீ வந்து கொடுத்தாய்..
விழியில் உன் விழியில்
வந்து விழுந்தேன்
அந்த நொடியில்
என் எதிர்காலம்
நீதான் என்று உயிர்
சொன்னதே...
வழியில் உன் வழியில்
வந்து நடந்தேன்
அந்த நொடியில்
என் வழிதுணை
நீதான் என்று நிழல்
சொன்னதே...
சிரிப்பிலே உன்
சிரிப்பிலே
சிறையடைக்கிறாய்
நான் மீழவில்லை
உறவுகள் ஒன்று
சேர்கையில்
என்ன ஆகிறேன் என்று
தெரியவில்லை
உன்னோடு நான் பேசும்
ஒவ்வொரு வார்த்தையும்
இனிக்கிறதே
உரையாடல் தொடர்தாலும்
மௌனங்கள் கூட பிடிக்கிறதே
என் கனவுக்கு கனவுகள்
நீ வந்து கொடுத்தாய்
விழியில் உன் விழியில்
வந்து விழுந்தேன்
அந்த நொடியில்
என் எதிர்காலம்
நீதான் என்று உயிர்
சொன்னதே...
வழியில் உன் வழியில்
வந்து நடந்தேன்
அந்த நொடியில்
என் வழிதுணை
நீதான் என்று நிழல்
சொன்னதே...
உன்னோடு வாழ்ந்திடத்தானே
நான் வாழ்கிறேன்..
உன் கையில் என்னை
தந்து தோள்சாய்கிறேன்
ஓ தோள்சாய்கிறேன்
..
விழியில் உன் விழியில்
வந்து விழுந்தேன்
அந்த நொடியில்
என் எதிர்காலம்
நீதான் என்று உயிர்
சொன்னதே...
படம்: கிரீடம்
இசை:
GV பிரகாஷ்
பாடியவர்கள்:
சோனு நிகம், ஷ்வேதா
இந்த பாடல் நான் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும்போதுதான் முதலில் கேட்டேன். அதிகம் மனதை தொடவில்லை என்றாலும் இந்த பாடல் ஏனோ எனக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. ஒருமுறை பேருந்தில் என் ஊருக்கு சென்றுக்கொண்டிருக்கும்போது ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துக்கொண்டு இந்த பாடலை மனதிற்குள் பாடிக்கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் பாடல் கேட்கும் வசதிகொண்ட செல்பேசி இல்லை. அன்று நினைத்துக்கொண்டேன். அடுத்தமுறை ஒரு நல்ல செல்பேசி வாங்கியதும், இப்பாடலை அதில் பதிவேற்றம் செய்துக்கொண்டு, ஊருக்கு செல்லும்போது பேருந்தில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு கேட்கவேண்டும் என்று. சின்ன ஆசைதான். இருந்தாலும் சில மாதங்கள் கழித்து அதை நிறைவேற்றிக்கொண்டேன். புது செல்பேசி வாங்கியதும் ஊருக்கு பேருந்தில் சென்றேன். அதே ஜன்னலோர இருக்கை. வெளியே மழை தூரல். என் காதில் ஹெட்செட். இந்த பாடலை கேட்டவாரே சென்றேன். என் சின்ன ஆசையை நிறைவேற்றிக்கொண்ட சந்தோஷத்துடன் இப்பாடலை கேட்டபடியே பயணித்தேன். எனக்கு அதிகம் பிடித்த ஒவ்வொரு பாடலை கேட்கும்போதும் என் மனதில் அந்த பாடல் பதிந்ததற்கான காரணம் ஒன்று இருக்கும். இந்த பாடல் என் மனதிற்குள் வந்த காரணம் இது..
- அன்புடன்
****தினேஷ்மாயா****
Posted by
தினேஷ்மாயா
@
10/19/2012 01:25:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Subscribe to:
Posts (Atom)
பதிவுகள்...
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....
தினேஷ்மாயா....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !
.jpg)










.jpg)












.jpg)






