அவளுடன் ஒரு சின்ன தீபாவளி..

Thursday, November 01, 2012



       அப்போது நான் கல்லூரி முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். அந்த தீபாவளியை அவளுடன் கொண்டாடவேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. ஆனால் அவர்கள் வீட்டிலோ அவளை வெளியே அனுப்பவில்லை. நானும் எவ்வளவோ முயற்சித்தேன் அவளை சந்திக்க. மாலை 5 மணிவரை முடியவில்லை. அப்புறம் அவளே என்னை தொலைப்பேசியில் அழைத்து அவள் வீட்டினருகே வரச்சொன்னாள். சரி, எப்படியும் அவளுடன் அதிகம் பேசமுடியாது என்று தெரிந்துக்கொண்டேன். சரியென்று, ஒரு சின்ன லட்சுமி வெடியை மட்டும் என் கையில் எடுத்துக்கொண்டேன். அவள் வீடு நோக்கி சென்றேன். அவள் வீட்டில் எல்லோரும் உள்ளே இருந்தார்கள். இவள் எனக்காக வெளியே காத்திருந்தாள். யாரும் வரும் முன்னே, சைக்கிளைவிட்டு கீழேகூட இறங்காமல், அவளிடம் கைகொடுத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தேன். எனக்கு ரொம்ப பிடிச்ச Milky Bar - சாக்லெட்டை என் கையில் திணித்தாள். சீக்கிரம் போடா என்றாள். நானும் அவள் கையில் நான் கொண்டுவந்த லட்சுமி வெடியை திணித்தேன். நான் உன் தெருவின் மூலையில் நிற்கிறேன். நீ இதை வெடிப்பதை பார்த்துவிட்டுதான் செல்வேன் என்றேன். இப்போ முடியாது நான் அப்புறம் வெடிச்சுக்கறேன் நீ சீக்கிரம் கிளம்பி போ, என்றாள். நான் முடியாது என்று சொல்லி அங்கேயே நின்றேன். அவளுக்கோ பதட்டம், வீட்டிலிருந்து யாராச்சும் வெளியே வந்துவிடுவார்களோ என்று. அவர்களை சமாளிப்பதைவிட என்னையே சமாளிச்சுடலாம் என்று, சரி நீ போ நான் வெடிக்கிறேன் என்றாள். அந்த கால்முளைத்த கத்திரிக்காய் நான் கொடுத்த லட்சுமி வெடியை திரியை கிழித்து வெடித்தை என் கண்களால் பார்த்து ரசித்தபின் அவள் தெருவை விட்டு சென்றேன். அவளுடனான என் 7 வருட காதல் வாழ்க்கையில் இதுதான் நான் அவளுடன் கொண்டாடிய முதலும் கடைசியுமான தீபாவளி. என்னால், மறக்கமுடியாத தீபாவளி.

Happy Diwali Dear !!!!

10% உண்மை 90% கற்பனை கலந்த கதை

என் மனதில் இருக்கும் சின்னஞ்சிறு ஆசைகளை கற்பனையால் செதுக்கி இப்படி கதையாக மாற்றிவிடுகிறேன். இப்படி நடக்காவிட்டாலும், இதை படிக்கையில் இப்படி நடந்த சந்தோஷம் ஏற்படுகிறதே ! அது போதாதா என்ன ?!

****தினேஷ்மாயா****

0 Comments: