கோடீஸ்வர பிச்சைக்காரர்கள்

Monday, November 11, 2013


   மொபைல் ஆப்பரேட்டர்கள் ஒரு வருடத்திற்கு சராசரியாக 10000 கோடிக்கு மேல் லாபம் சம்பாதிக்கிறார்கள். ஒரு நிமிடத்திற்கு இத்தனை காசுகள் என்று தொடங்கி, ஒரு நொடிக்கு இத்தனை காசுகள், ஒரு குறுஞ்செய்திக்கு இத்தனை காசுகள் என்றெல்லாம் என்னென்னவோ சலுகைகளை அள்ளி வீசுகிறார்கள். நம் மக்களும் அந்த வீண் விளம்பரங்களை நம்பி அந்த சலுகைகளை உபயோகிக்கிறார்கள்.

   உதாரணமாக, 25ரூ முதல் 50ரூ வரை செலுத்தினால் 30 முதல் 90 நாட்களுக்கு நாளொன்றுக்கு 100 குறுஞ்செய்தி என்று குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு மொபைல் நிறுவனமும் வருடத்தில் சில தினங்களுக்கு இந்த சலுகைகள் செல்லுபடியாகாது என்றும் அந்த நாட்களில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கு 1ரூ வசூலிக்கப்படும் என்றும் விதிமுறைகளை விதித்திருக்கிறது. உதாரணமாக சமீபத்தில் தீபாவளி தினத்தன்றும் அதற்கு முந்தைய தினத்தன்றும் குறுஞ்செய்திகள் அனுப்பினால் 1ரூ பிடித்தம் செய்தார்கள்.

  கோடிக்கணக்கில் கொள்ளையடித்தாலும், அற்பத்தனமாய் 1ரூ என்று ரூபாய் கணக்கில் பிச்சை எடுக்கிறார்கள் இந்த கோடீஸ்வர பிச்சைக்காரர்கள். நம் மக்களின் நலனுக்காக எவனும் இங்கே வியாபாரம் செய்யவில்லை. எல்லோரும் அவனவன் வியாபாரத்தை வளர்க்கவும் கொள்ளையடிக்கவும்தான் இங்கே வந்திருக்கிறான். இந்த வியாபாரிகளின் பொய்யான விளம்பரங்களில் இருந்து காத்துக்கொள்வது மிகவும் கடினமே. இந்தியாவில் பெரும்பாலும் எல்லோரிடத்திலும் செல்பேசி இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு இன்றைய நிலை மாறிவிட்ட பிறகு இந்த மொபைல் நிறுவங்களின் அராஜகம் தாங்கமுடியவில்லை. முடிந்தமட்டும், செல்போனில் வாழ்க்கையை கழிக்காமல், மக்களிடம் மனம்விட்டு நேரில் பேசும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். தொலைவில் இருப்பவர்களிடம் மின்னஞ்சலில் பேசுங்கள். 

  எது எப்படியிருந்தாலும் மொபைல் நிறுவனங்கள் தங்கள் பிச்சையை எடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

* தினேஷ்மாயா *

0 Comments: