இது நியாயமா ?

Wednesday, November 13, 2013


   +2 முடித்து கல்லூரிக்கு செல்ல வீட்டைவிட்டு வெளியேறினேன். 7 வருடங்கள் ஓடிவிட்டது. வீட்டில் இருந்தபோது வீட்டின் அருமை எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த 7 வருடத்தில் வீட்டின் அருமையை எனக்கு காலம் நன்றாகவே உணர்த்திவிட்டது. 

   தொலைக்காட்சியை ரசித்து பார்த்து 7 வருடங்களுக்கு மேல் ஆகிறது. எப்போதாவது வீட்டிற்கு சென்றால், தொலைக்காட்சியில் நகைச்சுவை, செய்திகள், சோட்டா பீம், டிஸ்கவரி இவைகளில் எதாவது ஒன்றைத்தான் பார்ப்பேன். ஒருமுறை தமிழ் நகைச்சுவை சேனல் ஒன்றில் நகைச்சுவை நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்நிகழ்ச்சி தொடங்கும் முன்பு, தமிழ் நகைச்சுவை நடிகர்களை விலங்குகள், மற்றும் சில சகிக்கமுடியாத கதாபாத்திரங்களாக சித்தரித்தனர். எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது.

  நகைச்சுவை நடிகர்கள் திரைப்படங்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தில் நடிப்பவர்கள். அதற்காக அவர்கள் வாழ்விலும் அப்படி இருப்பார்களா என்ன? அப்படியே அவர்கள் நகைச்சுவை உணர்வோடு இருந்தாலும் அவர்களை உங்கள் நிகழ்ச்சிகாக அவர்களை இப்படி சித்தரிப்பது எந்தவகையில் நியாயம். இதை அவர்களின் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார் ரசிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா ?

  நகைச்சுவை என்பது பிறர் மனதை புண்படுத்தாமல் சிரிக்கவைக்க வேண்டும். இந்த உண்மையை நகைச்சுவை சேனல்கள் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்.

* தினேஷ்மாயா *

0 Comments: