இதுதான்டா இந்தியா..

Monday, November 04, 2013


       சமீபகாலமாக, அமெரிக்கா அனைத்து நாட்டினரையும் உளவு பார்க்கின்றனர் என்கிற செய்தி பரவலாய் இருக்கிறது. ஜெர்மனியின் தலைவர் ஏஞ்செலா அவர்களின் தொலைப்பேசி கடந்த சில வருடங்களாக ஒட்டு கேட்கப்பட்டு வந்துள்ளது என்கிற செய்தி வெளியாகி பரபரப்பை கிளப்பியவேளையில், நம் பிரதமரின் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டதாக செய்தித்தாளில் படித்தேன்.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு தனிப்பட்ட விதத்தில் அலைப்பேசி எதுவும் இல்லை மின்னஞ்சல் முகவரியும் இல்லை அதனால் ஒட்டு கேட்க வாய்ப்பே இல்லை என்று. இந்த செய்தியை படித்ததும் எனக்கு சிரிப்பதா இல்லை நம் இந்தியர்களின் “திறமையை” எண்ணி பெருமைப்படுவதா என்று தெரியவில்லை. நீங்களே சொல்லுங்கள்..

* தினேஷ்மாயா *

0 Comments: