பிரச்சாரம் எதற்கு ?

Saturday, November 30, 2013



    சமீபத்தில் நடக்கவிருக்கும் சில மாநில சட்டசபை தேர்தலுக்காகவும், இடைத்தேர்தலுக்காகவும்  தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இந்த பிரச்சாரம் எதற்கு என்று எனக்கு தெரியவில்லை.

     எனக்கு தெரிந்தவரை பிரச்சாரம் என்பது மக்களிடம் நம் கருத்துக்களை எடுத்து சொல்லி, அவர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கு விடிவு ஏற்படுத்தி கொடுப்பதாய் மக்களின் மனதில் ஒரு நம்பிக்கையை உண்டாக்க வேண்டும்.

    ஆனால், அதெல்லாம் நடப்பதாய் தெரியவில்லை. எதிர்கட்சியினர் ஆளுங்கட்சியினரையும், ஆளுங்கட்சியினர் எதிர்கட்சியினரையும் சாடும் ஒரு களமாகவே பார்க்கப்படுகிறது இந்த மேடைகள். நாம் இந்த மக்களுக்காக என்ன செய்தோம் என்பதை விடுத்து, மற்ற கட்சியை சாடுவதென்பதே தொழிலாய் கொண்டிருக்கின்றனர்.

       இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும் ஆனால் நான் சுத்தமானவன் மற்றவன்தான் கெட்டவன் என்று இந்த அரசியல்வாதிகள் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். மக்கள் என்றோ விழிப்படைந்துவிட்டார்கள். இந்த அரசியவாதிகள் தான் இன்னமும் பழைய பஞ்சாங்கத்தையே பாடிக்கொண்டிருக்கின்றனர்.

     இந்த நிலை என்றுதான் மாறுமோ ?? ஐயோ பாவம் இந்த அரசியல்வாதிகள்.

* தினேஷ்மாயா *

0 Comments: