மர்பி விதியின் முன்னோடி

Saturday, November 30, 2013



   நீங்கள் மர்பி விதிகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். முரண்பாடான கோட்பாட்டை சொல்லும் விதிகள் இவை. இந்த விதிகள் 1940-1950 காலகட்டத்தில் எட்வர்ட் மர்பி என்பவரால் தோற்றுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபகாலமான மர்பி விதிகளை படித்து வருகிறேன். என்னை பல விதிகள் பெரிதும் கவர்ந்தது. அதில் சிலவற்றை நேரம் கிடைக்கையில் இங்கே பதிவு செய்கிறேன்.

   உதாரணத்திற்கு சில.

* ஒரு பழைய கட்டிடத்தைத் திருத்தியமக்க அதைப் புதிதாகக் கட்ட ஆகும் செலவைப் போல் இரு மடங்கும், காலத்தைப் போல் மூன்று மடங்கும் ஆகும்.

* உலகத்திலேயே மக்களை ஈர்க்கும் சக்தியுடைய இரண்டாவது வசனம், "இதைப் பாருங்கள்!".முதலாவது, "அட! இதைப் பாருங்கள்!".

* எது சரியாக ஆரம்பிக்கப்படுகிறதோ அது தவறாக முடியும். எது தவறாக ஆரம்பிக்கப்படுகிறதோ அது மோசமாக முடியும்.

ஆனால், நம் தமிழிலும் மர்பி விதிகள் போல பல பழமொழிகள் ஏட்டிலும் வாய்மொழியாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

* பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.

* நடக்கும் என்பார் நடக்காது. நடக்காது என்பார் நடந்துவிடும்.

இப்படி இன்னும் ஏராளமாய் சொல்லிக்கொண்டே போகலாம். உலகில் இருக்கும் அனைத்து தத்துவ மேதைகள் சொன்னதெல்லாம் நம் தமிழ் மொழியில் என்றோ சொல்லப்பட்டுவிட்டது என்பதை முதலில் தமிழர்களாகிய நாம் உணர வேண்டும்..

* தினேஷ்மாயா *

0 Comments: