ஒவ்வொரு
பாடலிலும்
ஒவ்வொரு
நினைவிருக்கு
உள்ளுக்குள் வழியிருக்கு நெஞ்சே…
ஒவ்வொரு
பாடலிலும்
ஒவ்வொரு
நினைவிருக்கு
உள்ளுக்குள்
வலியிருக்கு நெஞ்சே
இசை
நெஞ்சே…
காதலின்
கனவுகளை
கண்ணீரின்
நினைவுகளை
பாடல்கள்
சுமந்துவரும் நெஞ்சே
இசை
நெஞ்சே…
ஒ ஹோ ஹோ
வெட்டோடு
பொருந்தும் வார்த்தை எதுவென்று
தாய் மொழி அறியும்
நெஞ்சோடு
பொருந்தும் வாழ்கை எதுவென்று
யாருக்கு தெரியும் ?
வலி போக எந்தன்
பாடல் வார்த்தை
கொண்டு வரும்…
ஒவ்வொரு
பாடலிலும்
ஒவ்வொரு
நினைவிருக்கு
உள்ளுக்குள்
வலியிருக்கு நெஞ்சே…
யாருக்கு
மாலைகள் ஆவதென்று பூங்கொடிகள்
பூக்கள் பூப்பதில்லை
யாருக்கு
யார் சொந்தம் ஆவதென்று தேவதைகள் வந்து சொல்வதில்லை
விதியென்ற
காட்டிலே திசை
மாறும் வாழ்க்கையே
போகிற போக்கில் பாதைகள் கண்டு விடு
எண்ணம்
போல வாழ்க்கையே எவருக்கும்
வாய்ப்பதில்லை
வாழ்கை
போல எண்ணம் கொள் வாழ்வது துயரமில்லை
ஒ ஹோ ஹோ
ரோஜாவின்
கண்ணீர் தானே அர்தறாய்
வாசம் கொள்ளும்
கண்ணோடு
பொறுமை காத்தால் காலம்
பதில் சொல்லும்
ஒவ்வொரு
பாடலிலும்
ஒவ்வொரு
நினைவிருக்கு
உள்ளுக்குள் வழியிருக்கு நெஞ்சே…
பந்தங்கள்
பாசங்கள் என்பதெல்லாம்
தேகங்களை
நம்பி வாழ்வதில்லை
உயிர் கொண்ட வேர்களின் ஆழங்களில்
காதல் அன்பு என்றும் காய்வதில்லை
உருவங்கள்
தாண்டியும் உள்ளங்கள்
வாழுமே
அண்டம்
மறையும் அன்பே
நித்தியமே
எந்த
மேடை என்பதை அன்பே
மறந்துவிடு
ஏற்றுக்கொண்ட
பாத்திரம் அதிலே
கரைந்துவிடு
ஒ ஹோ ஹோ
நீர் கொண்ட மஞ்சள் வாழ்க
நிழல்
தந்த சொந்தம் வாழ்க
கல்யாண
மாலை நனைத்த கண்ணீர்
துளி வாழ்க
ஒவ்வொரு
பாடலிலும்
ஒவ்வொரு
நினைவிருக்கு
உள்ளுக்குள்
வலியுருக்கு நெஞ்சே
இசை
நெஞ்சே...
காதலின்
கனவுகளை
கண்ணீரின்
நினைவுகளை
பாடல்கள்
சுமந்துவரும் நெஞ்சே
இசை
நெஞ்சே...
திரைப்படம்: என்னவளே
இசை: S.A.ராஜ்குமார்
பாடியவர்: உன்னிகிருஷ்ணன்.
என் பள்ளிப்பருவத்தில் என்னை அதிகம் கவர்ந்த பாடல் இது, அதிகம் கவர்ந்த படம் இது. இந்த பாடல் என்னை பெரிதாய் பாதித்திருந்தது. நீண்ண்ண்ட இடைவெளிக்குப்பிறகு தேடிகிடைப்பிடித்துவிட்டேன். அப்புறம் சொல்ல மறந்துட்டேன். இந்த பாடலை எங்கள் வீட்டின் அருகே நடந்த ஒரு பாட்டுப்போட்டியில் பாடி மூன்றாம் பரிசு வாங்கியிருக்கிறேன். பல நாட்கள் கழித்து இப்பாடலை கேட்டபோது காதலை எண்ணியும் வரிகளை எண்ணியும் கண்ணீர் துளிகள் வந்து என்னை நனைத்துவிட்டு சென்றது.
* தினேஷ்மாயா *