தண்ணீரில்லா தேசம்

Monday, February 11, 2013


      தண்ணீர் தேசம் என்று வைரமுத்து ஒரு நூல் எழுதினார். தண்ணீரில்லா தேசம் என்று இன்னொரு நூலை அவரை எழுதச்சொல்லுங்கள். நானும் அப்படி ஒரு நூல் எழுதலாம் என்றிருக்கிறேன். 

       நிலத்தடி நீர் தான் உலகில் பெரும்பாலானவர்களுக்கு குடிநீர் ஆதாயமாக இருந்துவருகிறது. முன்பிருந்த நிலத்தடி நீரின் அளவு இன்று இயந்திர மயானமாகிவிட்ட உலகில் குறைவே. போகிறபோக்கில் நிலத்தில் நீரை எடுக்க தோண்டினால் அது பூமியின் இன்னொரு பக்கத்திற்கு சென்றுவிடும்போல. அந்த அளவிற்கு தண்ணீரை நாம் இயற்கையிடமிருந்து திருடிக்கொண்டிருக்கிறோம், இல்லை இல்லை, கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறோம். நாளைய உலகிற்கு நல்லதை விட்டுசெல்லும் எண்ணம் எவர்க்கும் இல்லை இங்கு. இப்போது கச்சா எண்ணெய்க்காக உலக நாடுகளுக்கு இடையே போர் வருவதுபோல சில ஆண்டுகள் கடந்தால் தண்ணீருக்காக உலக போர் வரலாம். வரலாம் என்ன வரலாம், இன்றைய நிலை தொடர்ந்தால் நிச்சயம் தண்ணீருக்காக போர் வரும். அந்த அவலநிலை வராமல் இருக்க இன்றைய சந்ததியினர் எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது. தண்ணீரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிக்கனமாய் பயன்படுத்துவோம். 

    தேவையில்லாமல் குழாயில் இருந்து சிந்தும் தண்ணீரை நிறுத்தினாலே அதுவும் ஒரு சேமிப்புதான். தேவைக்கு அதிகமாய் எதையும் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். தண்ணீர்தான் உலகை சூழ்ந்திருக்கிறதே என்று தண்ணீரை வீணாக்க வேண்டாம். செலவழித்துவிட்டு கையை பிசைந்துக்கொண்டு நிற்பதைவிட சேமித்துவைத்து கொஞ்சம் கொஞ்சமாய் செலவுசெய்வோம். 

- தினேஷ்மாயா -

0 Comments: